அம்மா போல ஆர்.எஸ்.எஸ்

இப்படி குற்றுயிரும் குலையுயிருமாக மரத்தடியிலும் சிம்மாசலம் கோயில் மண்டபங்களிலும் துவண்டு கிடக்கும் இந்த நூற்றுக்கணக்கானவர்கள் யார்?

ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தான் இவர்கள். 

அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து கையில் உணவு பொட்டலமும் ஹோமியோபதி மருந்துகளும் கொண்டுஓடோடி வந்து மருந்து கொடுக்கிறார்களே இவர்கள் யார்?

இவர்களுக்கு உணவும் மருந்தும் கொடுத்து உயிரைக் காப்பாற்றியவர்கள் அக்கம்பக்கத்து ஊர்களின் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள். மோர் கொண்டு வந்தார்கள், வீட்டில் சமைத்த உணவு கொண்டு வந்தார்கள். விஷவாயு பாதிப்புக்கு முறிவான ஹோமியோபதி மருந்து கொடுத்தார்கள்.அன்பாகப் பேசினார்கள், ஆதரவாக இருந்தார்கள்.

மே 7 வியாழன் அன்று அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட விஷவாயுக் கசிவால்பலர் மடிந்தார்கள். ஆலையை சுற்றியிருந்த பகுதிகளில் வசித்த மக்கள் இது போல பல பக்கத்து ஊர்களுக்கு ஓடிப்போய் உயிர் தப்பினார்கள். தற்காலிகமாக. வீடு வாசலை இழந்து பரிதவித்த இவர்களுக்கு மூன்றே மணிநேரத்திற்குள் அம்மா போல அனைத்தும் செய்தது ஆர்.எஸ்.எஸ்.Post a Comment

0 Comments