ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் ஸங்கல்ப தினம்

கோவிட் -19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸால் உலகமே தவித்து வருகிறது, இதை சீன வைரஸ் என்று அழைத்தாலும் பொருந்தும். சீனாவின் வுவான் மாகாணத்தில் டிசம்பர் 2019ல் இது தோன்றினாலும், இதன் தாக்கம் 2020ம் ஆண்டு ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் தான் உலகிற்கு தெரிய வந்தது. சீனாவில் இருந்து வெளியே பரவ 2 மாதங்கள் ஆகியுள்ளது. இதற்கு மனித குலம் பெறும் விலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. சீனாவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி பல லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்க பல நாடுகள் முயன்று கொண்டிருக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் சீனாவின் ஊதுகுழலாக செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்சி, அதற்கு அளித்து வரும் நிதியுதவியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது இந்தியாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பல்லாயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

நம் நாட்டை பொறுத்தவரை சரியான நேரத்தில் 14 மணிநேர மக்கள் ஊரடங்கு மற்றும் தொடர் ஊரடங்கை பிரதமர் மோடி சரியான நேரத்தில் அறிவித்ததால், இந்நோயின் தாக்கம் சில ஆயிரங்களில் மட்டுமே உள்ளது. இதற்காக மொத்த தேசமும் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

நமது வாழ்க்கை முறையில் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கைகுலுக்கவதற்கு பதில் வணக்கம் சொல்வது, இடைவெளி விட்டு நிற்தல், அவ்வப்போது கைகளை சுத்தமாக்கி கொள்ளுதல், பாரம்பரிய உணவுகளை மட்டுமே உண்ணுதல், யோகா, பிராணாயாமம், தியானம் செய்தல் போன்றவைகளை மீண்டும் மக்கள் கடைபிடிக்க துவங்கியுள்ளார்கள். ஆன்மீக பெரியவர்கள் மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.

ஸ்வதேசி வணிகர்கள் கொரோனா அச்சத்திற்கு இடையேயும் அத்தியாவசிய பொருட்களான மளிகைகள், காய்கறிகள், மருந்துகள் ஆகியவற்றை மக்களிடம் சேர்த்து வருகிறார்கள். சமூகமும் ஏழைகளுக்கு உதவி வருகிறது, இவர்களின் முக்கியத்துவத்தை நாடு உணர்ந்துள்ளது.

குறைந்த நாட்களிலேயே பல கண்டுபிடிப்புக்கள் வந்துள்ளன. குறைந்த விலையிலான வென்டிலேட்டர்ஸ்களை கோயமுத்தூர் மற்றும் பல ஊர்களில் உள்ள இளம் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர், PPE உபகரணங்களை திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் தயாரித்து வருகிறார்கள். பெல்காமில் உள்ள VEGA DRDO -உடன் இணைந்து மாதிரிகளை சேகரிக்க kiosk உருவாக்கியுள்ளது. டெலிபோன் பூத் போல, மருத்துவர் வெளியே இருக்க, நோயாளி உள்ளே இருக்கிறார், பாதுகாப்பாக மாதிரிகள் பெறப்படுகின்றன. இந்த நிறுவனத்திற்கு உலகத்தின் பல நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. புனேவில் உள்ள Raksha Polycoats தனி அறைகளை உருவாக்கியுள்ளது. தனது குளிர்சாதன ரயில்பெட்டிகளை மருத்துவ அறைகளாக ரயில்வே மாற்றியதை கண்டு உலகம் வியக்கிறது. இது தான் ஸ்வதேசி உணர்வு.

இந்திய மருத்துவ துறை 60 நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்து, உலகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தியது. மருந்து தொழிற்சாலையாக இந்தியா மாறுவதற்கு விதை விதைக்கப்பட்டுள்ளது. கொரோனா, சீனாவின் சதியா இல்லையா என்பது குறித்து விவாதங்கள் இருந்தாலும், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்கவே சீன எதிர்ப்பு மனோநிலை நிலவி வருகிறது. சீனாவுடன் வர்த்தகம் செய்வதில் உள்ள ஆபத்துக்களை இந்தியர்கள் புரிந்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். சீனாவில் இருந்து இறக்குமதி கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும், இதனால் பல லட்சம் வேலை வாய்ப்புக்கள் உருவாகும். 

இது ஒருபுறம் என்றால், சீன தயாரிப்புகளை புறக்கணிக்க மக்கள் முடிவெடுத்துள்ளார்கள். சின்ன பல்ப் முதல் மொபைல் மற்றும் மின்னணு சாதனங்கள் வரை சீன தயாரிப்புகளை மக்கள் ஒதுக்க ஆரம்பித்துள்ளார்கள். சர்வதேச அளவில் பல்லாயிரம் நிறுவனங்கள் சீனாவில் இருந்து தங்கள் நிறுவனங்களை இந்தியாவிற்கு மாற்ற முடிவெடுத்துள்ளார்கள். ஒத்திசைவு கொண்ட நாடுகளுடன் இணைந்து இந்த வாய்ப்பை இந்தியா உடனே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சீனாவின் வியாபார தந்திரம் மிக வஞ்சகம் நிறைந்தது. தன்னிடம் கேட்கும் நாடுகளில் முதலீடுகளை அள்ளிக் கொடுக்கும். அதை பெரும் நாடு, சுமை தாங்க முடியாத நிலை வந்தவுடன், கடனுக்கு ஈடாக விமான நிலையம், அணைகள், துறைமுகங்கள், தொலை தொடர்பு கட்டமைப்பு போன்றவைகளை எடுத்துக் கொள்கிறது. சீனாவின் இந்த வஞ்சகத்திற்கு உலகளவில் பல உதாரணங்கள் உள்ளன. பல நாடுகளும் சீனாவுக்கு விடை கொடுக்க முடிவெடுத்து விட்டன.

சீனாவுக்கு நாமும் விடைக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. சீனாவை புறக்கணிப்போம். ஸ்வதேசி உணர்வை வளர்ப்போம். உலகின் தலைசிறந்த தேசமாக இந்தியாவை உயர்த்திட சுதேசி விழிப்புணர்வு இயக்கம் தொடர்ந்து பணியாற்றும்.

ஏப்ரல் 25 தேதியை ஸ்வதேசி தினமாக அனுசரிக்க  ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச்  (விழிப்புணர்வு இயக்கம்) அழைப்பு விடுத்துள்ளது. இந்த நாளில் மாலை 6.30 - 6.40 வரை கொரோனாவில் இருந்து உலகம் விரைவில் விடுபட பிரார்த்திப்போம். அத்துடன் சீன தயாரிப்புகளை பயன்படுத்த மாட்டோம் என்று சபதம் ஏற்போம்.

Post a Comment

0 Comments