கொரோனா பரவுதல் தடுக்க அறிவியல் தொழில்நுட்பம் – அரசு மட்டுமல்ல இந்துக்களும் இயல்பாக ஏற்கின்றனர்.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தால் பயன்படுத்தி Artificial Intelligence மற்றும் Internet of Things மூலமாக தொற்று பரவலை கண்டறிய முயற்சிகள் நடக்கின்றன. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்ய சேது. இதுவரை 50 மில்லியன் டௌன்லோட் ஆகியுள்ளது.

ஊரடங்கை கண்கானிக்க சென்னை ஐஐடி குழுவின் டேட்டா பிரம் ஸ்கை (data from sky) என்ற மென்பொருளை ஆளில்லா விமானத்தின் ( Drone) கேமராவில் இணைத்து கண்காணிக்கும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது .இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஆளில்லா விமானம் 20 அடி உயரத்தில் பறந்து, மக்களின் நடமாட்டத்தை க் கணக்கெடுப்பு செய்கிறது.

இந்துக்களும் சூழ்நிலைக்கு ஏற்ப தொழில்நுட்ப தீர்வுகளை இயல்பாக ஏற்கிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது. மதுரை மீனாட்சி அம்மன் கொயில் சித்திரைத் திருவிழா ஊரடங்கால் முழுவதுமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதியில் பெண்கள் மீனாட்சி சுந்தரர் கல்யாண உற்சவத்தில் மாங்கல்ய சரடினை மாற்றுவது வழக்கம் என்பதால் இவ்வருடம் அந்த உற்சவம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படயிருக்கிறது. இதுபோல கபாலீஸ்வரர் கோயிலின் ப்ரதோஷ கால பூஜை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்க இந்துக்கள் தயங்கியதில்லை என்பதற்கு இது ஒரு சான்று. இந்து மதத்தின் பலம் இது எனக் கூறலாம்

Post a Comment

0 Comments