SETU - 43

சேது 

மாநிலங்கள் / கேரளா 

ஒரு நடை தமிழகம் வந்து போங்க, அபிலாஷ்! 

சந்தியுங்கள், திருவனந்தபுரத்தில் கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் இளநிலை எழுத்தராக பணிபுரியும் ஆர். எஸ். அபிலாஷை. இவர் அரசுப் பணித் தேர்வுகள் எழுதி எழுதி பல பணிகளுக்கான தேர்வுகளில் முதல் சில இடங்களை கைப்பற்றி இருக்கிறார். அதனால் இவர் நினைத்தால் இப்போது வனத்துறை அதிகாரியாக முடியும், காவல்துறையில் சேரமுடியும், தீயணைப்புத் துறையில் சேர முடியும்! அந்தந்த துறைகளுக்கான தேர்வில் முதல், இரண்டாவது, நான்காவது ரேங்க் கில் அபிலாஷ் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் பூவாறு கிராமத்து ஏழை இளைஞர். தந்தை ராமச்சந்திர நாயர்; தாய் ஸ்ரீலதாதேவி. அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் எழுத பயிற்சி தரும் மையங்களில் முதலில் சேர்ந்த அபிலாஷால் செலவை சமாளிக்க முடியவில்லை. எனவே மலையாள மனோரமா நாளிதழ் நடத்திவரும் தொழில்வீதி என்ற வேலைவாய்ப்பு பத்திரிகையைத் தொடர்ந்து படித்து சாதனை புரிந்து வருகிறார். அரசுப் பணிகளுக்கான தேர்வில் வானளாவிய முறைகேடுகள் நடக்கும் தமிழகத்தில் உள்ள பலருக்கு அபிலாஷின் வெற்றிக்கதையை நம்பக் கூட சிரமமாக இருக்கும். 

மாநிலங்கள் / ம.பி 

தெரியுமா, விளிம்பு அகழி? 


மத்திய பிரதேசத்தில் வனவாசி மக்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதி ஜாபுவா. கோடையில் கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் சந்திக்கும் பகுதியில் சிவகங்கா என்ற தன்னார்வ அமைப்பு கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் சேகரிக்கும் எளிய உத்தி ஒன்றை செயல்படுத்தியது தனிமையில் ஒரு ஞாயிறு அன்று அதிகாலையில் அந்தப் பகுதியில் உள்ள ஹாத்திபாவா என்ற மலையின் சரிவில் விளிம்பு அகழிகள் (contour trench) தோண்டத் தொடங்கினார்கள்.அரை மணி நேரத்தில் 40,000க்கும் அதிகமான விளிம்பு அகழிகளை ஏற்படுத்திவிட்டார்கள். மலையில் பொழியும் மழை நீர் சரிவில் வரும்போது இந்த அகழிகள் தடுத்து அடுத்தடுத்து நீரை மலையடிவாரம் கொண்டுபோய் சேகரிக்கும். இந்த முறைப்படி அங்கே 360 கோடி லிட்டர் மழை நீர் சேமிப்பதற்கு வழி ஏற்பட்டிருக்கிறது. 

மாநிலங்கள் / மகாராஷ்டிரா 

“இங்கே யாரும் அவுரங்கசீப் வம்சம் இல்லை” 

மகாராஷ்டிரத்தின் பெரிய தொழில் நகரங்களில் ஒன்றானஅவுரங்காபாத் என்ற பெயரை (சிவாஜி மகாராஜாவின் புதல்வர் சம்பாஜியின் பெயரால்) சம்பாஜி நகர் என்று மாற்ற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கோரினார். “நாங்கள் சத்ரபதி சிவாஜியின் வம்சத்தினர், அவுரங்கசீப்பெயரிலான இந்த ஊர் பெயரை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கூறினார் இது குறித்து ஆளும் சிவசேனை கட்சியின் நாளிதழ் ’சாம்னா’, “நாம் எல்லோருமே சிவாஜி வம்சத்தினர் தான். இங்கே அவுரங்கசீப் வம்சத்தினர் யாரும் கிடையாது. ஆனால் சம்பாஜி நகர் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கு முன்பே சிவசேனை தலைவர் பால் தாக்கரே அறிவித்துவிட்டார். பாஜக ஆட்சி ஏன் பெயர் மாற்றம் செய்யவில்லை?” என்று எழுதியது. விஷயம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்பது சாம்னா பத்திரிகைக்குத் தெரியும். 1995ல் அவுரங்காபாத் மாநகராட்சி, சம்பாஜி நகர் என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதை எதிர்த்து ஒரு காங்கிரஸ்காரர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிறகு வழக்கு உச்ச நீதிமன்றம் சென்று அங்கே நிலுவையில் உள்ளது. 

மாநிலங்கள் / ஆந்திரப் பிரதேசம் 

ஹிந்து அனைவரும் சோதரரே என்பதால் 

முனி வாகன சேவை அமோகம்! 

ஆலய பாதுகாப்பு இயக்கமும் சாமாஜிக சமரசதா மன்ச் (சமூக நல்லிணக்க சபை) அமைப்பும் பிப்ரவரி 24 அன்று ’முனி வாகன சேவை’ திருவிழாவை கம்மம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ரங்கநாதசுவாமி கோயிலில் விமரிசையாகக் கொண்டாடின. கோயில் அர்ச்சகர் கிருஷ்ண சைதன்யா ராமச்சந்திர பஞ்ஜாரா சிவன் கோயில் அர்ச்சகர் ரவியை தன் தோளில் தூக்கிக் கொண்டு ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றார். ரவி பட்டியல் சமூக குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சனாதன தர்மத்தின் சாரத்தை பிரதிபலிக்கும் முனி வாகன சேவை திருவிழா 2,700 ஆண்டு பாரம்பரியம் கொண்டது். இது பெருமாள் கோயில்களில் நடைபெறுகிறது. பகவானின் பக்தர்கள் அனைவரும் பாகவத உத்தமர்களே, அவர்களிடையே ஜாதி பேதம் கூடாது என்று போதித்த ஸ்ரீராமானுஜர் வாக்கைப் போற்றும் விதத்தில் சமீபகாலத்தில் முதல் முறையாக 2018ல் முனி வாகன சேவை ஜீயகுடா ரங்கநாதசுவாமி கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. 

Post a Comment

0 Comments