லாசித் பண்புகள்:அஹோம் பேரரசின் மாவீரன்

லாசித் பர்புகானின் இயற்பெயர் லாசித் டெக்கா .இன்றைய அசாமின் கோலாகட் மாவட்டத்தில் பிடியோனி என்ற ஊரில் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பர்புகன் அஹோம் பேரரசின் ஆக்ரோஷமான ,சளைக்காத மாவீரன். 1603 முதல் 1639 வரை அஹோமை ஆண்ட பிரதாப் சிங்கின் ஆட்சியில் கவர்னராகவும் படையின் தலைவராகவும் இருந்த மோமய் தமுலி போர்பரூவா என்பவரது மகன்தான் லாசித். லாசித் இளவயதிலேயே ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு அஹோமின் அரசனான ஜயத்வஜ் சிங்கின் அந்தரங்க பாதுகாப்பு வீரனாக சேர்ந்தான். அவருடைய ராணுவ சேவையை பாராட்டி அவரை அஹோமின் குதிரைப்படை தலைவனாக நியமித்தார் அரசர். அதற்குப்பிறகு பிரம்மபுத்திரா நதியின் தென்கரையில் உள்ள சிமுங்கர் கோட்டையின் படைத்தலைவனாக ஆனார். 1663 முதல் 1669 வரை ஆட்சி செய்த சக்ரத்வஜ் என்ற அரசனின் காலத்தில் லாசித் அனைத்து படையின் தலைமை கண்காணிப்பாளர் ஆனார்.
               
 லாசித் தனது திறமையின் காரணமாக போர்புக்கான் ஆக மன்னர் சக்ரத்வஜ் அவர்களால் நியமிக்கப்பட்டார். அதிலிருந்து லாசித் பர்புகான் என்று அழைக்கப்பட்டார் .போர்புகன் என்பது பேரரசின் உயர்ந்த பதவி வகித்த 5 பேர்களில் ஒன்றாகும். போர்புகன் என்ற பெயரை தாங்கியவர்கள் நிர்வாக மற்றும் நீதி துறையில் உயர்ந்த அதிகாரம் பெற்றவர்களாக இருந்தனர் .இப்போது லாசித்தின் தலைமையிடம் கலியாபோர் என்ற இடம். ஆனால் அவர் தனது தலைமை இடத்தை கவுகாத்தியில் உள்ள இடாகுலி என்ற இடத்திற்கு மாற்றினார்.
           அந்த காலகட்டத்தில்  அதாவது ஜனவரி1662 முதல் அஸ்ஸாம் இஸ்லாமியரின் படையெடுப்புக்கு ஆளானது. முகலாய படைத்தலைவன் நவாப் மௌஸம்கான் என்று அழைக்கப்பட்ட மிர் ஜும்லா அஹோம் பேரரசின் தலைநகரான கர்காவுனைத் தாக்கினான் .ஆனால் அவனால் அரசனான பிரதாப சிந்தனை தோற்கடிக்க முடியவில்லை. ஏனென்றால் அந்த இடம் குன்றுகள் நிறைந்ததாகவும், வீரர்கள் கொரில்லா போர் முறையில் சிறந்தவர்களாகவும் விளங்கினார்கள். மிர் ஜூம்லா அஹோமின் அரசனோடு ஒரு ஒப்பந்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டான். இதை அப்போது இருந்த வரலாற்று ஆசிரியர்கள் ஷிகாபுதீன் தாலிஷ் தன்னுடைய ஃபத்தியா-இ-ஐப்பிரியா என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்,"அசாமில் முகலாயப் படை அடைந்த தோல்வியை போல டெல்லி வரலாற்றில் ஒருபோதும் நடந்தது இல்லை" என்று. ஆனாலும் பேரரசின் ஒரு சிறு பகுதியை மிர் ஜும்லா கைப்பற்றியிருந்தான். இந்த நேரத்தில் லாசித் கலியாபோருக்கு மாற்றப்பட்டார். 1663 மன்னர் ஜயத்வஜ் சின்கா சற்று மனக்கவலையோடு மரணமடைந்தார். தனக்குப்பின் பட்டம் ஏற்ற அரசர் சக்ரத்வஜிடம் முகலாயர்களை எப்படியும் பழிவாங்கவேண்டும் என்று கூறிச் சென்றார்.
           ஆகஸ்ட் 1667 ல் லாசித்தை அஹோம் பேரரசின் படைக்கு ஒட்டுமொத்த தலைவராக நியமித்தார் அரசர் சக்ரத்வஜ். முகலாயப் படையை அறவே ஒழித்து கவுகாத்தியை மீண்டும் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டார் லாசித். நவம்பர் 1967ல் ஆட்சித் தனது ராணுவ திறமையால் அசாமின் எல்லையிலிருந்து முகலாயர்களின்  அடிச்சுவடு கூட இல்லாமல் முழுக்கத் துடைத்தெறிந்தார் .முகலாய அரசன் அவுரங்கசீப் ஆலம்கீர் இப்படிப்பட்ட படு தோல்வியை கண்டு துவண்டு ஜனவரி 1668 இல் ராஜா ராம் சிங் கச்வாஹா தலைமையில் மிகப்பெரிய முகலாய சேனையை அஹோமை நோக்கி அனுப்பினான்.
             ராஜா ராம் சிங்கின் படையில் 71 ஆயிரம் வீரர்கள் இருந்தனர் .ஆனால் லாசித்தின் படையில் சில ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தனர். 1671ல் சராய் கட்டில் இரு படைகளும் மோதிக் கொண்டனர் .இதை வரலாற்று அறிஞர் ஜாதுநாத் சர்கார் தன்னுடைய அசாமின் விரிவான வரலாறு என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்."என்னுடைய நாடு என்னுடைய படைத் தலைமையில் கீழ் இருக்கும்போது இப்படிப்பட்ட ஆபத்தை நோக்கி கொண்டிருக்கிறது. என்னுடைய அரசனை எப்படிக் காப்பாற்றுவது? என் மக்களை எப்படி காப்பாற்றுவது? எப்படி இவைகளை எனது கவனத்துக்கு கொண்டு வருவது? என்றெல்லாம் நினைத்து கவலைப்படாமல் மிகுந்த தீரத்தோடு முகலாய சேனையை எதிர்த்துப் போராடினார் .தானே படையின் முன் நின்று போராடி, ஒவ்வொரு போர் முனையிலும் முகலாய சேனையை முறியடித்தார் .ராஜா ராம் சிங் தோல்வி  நிலை ஏற்பட்டது .அவரிடம் லாசித்துடன்  ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள அவுரங்கசீப் கட்டளையிட்டார் ஆனால் அது ஒரு துரோகச் செயல் என்று உணர்ந்து தன்னுடைய படைத் தலைவனான அத்தன் புர்ஹாகோஹயின்  உடைய ஆலோசனையின் பெயரில் ஒப்பந்தம் செய்து கொள்ள மறுத்தார். இறுதி போராட்டம் 1671 இல் சராய்கட்டில் நடந்தது. அந்த போர் நடக்கும்போது லாஜிக் மிகவும் சுகவீனமாக இருந்தார். ஆனாலும் தன்னுடைய உடல் நலக் குறைவை பொருட்படுத்தாமல் அற்புதமாக ஆச்சரியப்படும் வகையில் தன்னுடைய வீரத்தைக் காட்டி தன்னுடைய தலைமை பண்பை நிலை நிறுத்தினார். இந்த செயலானது படைவீரர்களை மேலும் ஊக்கப்படுத்தியது அவர்களும் முழு முயற்சியோடு கடைசிவரை நின்று போராடி முகலாயர்கள் தோற்கடித்தனர் முகலாயர்கள் லாசித்தின் படையால் படுதோல்வி அடைந்தனர். முகலாய படைத்தலைவன் ராஜா ராம் சிங் அஜித்தின் படைத்தவர்களை திறமையை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு இவ்வாறு கூறினான் ,"படைத்தலைவனுக்கு புகழ் உண்டாகட்டும். தனிநபராக முழு படையின் ஒவ்வொரு பகுதியையும் தானே முன்னின்று ஊக்குவித்து, எதிரிக்கு எந்த ஒரு வழியையும் கொடுக்காமல் வெற்றி பெற்றது ஒரு அதிசயம்".இப்படிப்பட்ட திறமை படைத்த லாசித் மறுபடியும் கவுகாத்தியில் அஹோம் பேரரசின் கொடியை பறக்க விட்டார்
          ஏப்ரல் 1672 இல் சராய் கட்டில் போர் முடிந்த பிறகு அவருடைய தலைமையிடமான கலியாபோரில் வீரமரணம் அடைந்தார். தனது ஒப்பற்ற வீர பராக்கிரமத்தால் அசாமின் பல தலைமுறைகளுக்கு வீர உணர்ச்சி ஊட்டும் ஒரு அடையாளமாக தெரிந்தார் லாசித். அசாமின் அனைத்து தரப்பு மக்களும் லாசித்தின் பெயரை பெருமையுடன் குறிப்பிடுகின்றனர் .லாசித் என்பது வீரம், தீரம் ,அரசியல் சாணக்கியம் என்பதன் உதாரணம்.

Post a Comment

1 Comments