தேசிய மக்கள் தொகை கணக்கீடு மதம் சார்ந்ததல்ல, திரு இந்திரேஷ்குமார்

தேசிய மக்கள் தொகை கணக்கீடு பதிவு (அ) என் ஆர் சி யை எதிர்ப்போர், அகதிகளுக்கும் ஊடுருவுவோர்களுக்கும் உள்ள வேறுப்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இது நம் நாட்டில் ஊடுருவும் நபர்களை கண்டறிவதற்கான சரியான தருணம் என்று ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் தலைவர் திரு இந்திரேஷ்குமார் ராஞ்சியில் கருத்தரங்கில் பேசியபொழுது தெரிவித்தார். 
உலக மக்கள் தொகையில் 16 சதவீகத்திற்கு அதிகமானோர் பாரதத்தில் வசிக்கின்றனர். உலக அளவில் பாரதத்தின் நிலம் 3-4% மட்டுமே ஆகும். மக்கட்தொகை கட்டுப்பாட்டை சரி பார்க்க வேண்டும். ஏனெனில் வளர்ந்து வரும் மக்கட்தொகைக்கு ஈடாக நாட்டின் வளங்களின் அளவு குறைவாகவே உள்ளன. அடுத்த 50-100 ஆண்டுகளில் நாட்டின் வளங்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கும், நிலைமை மோசமடையும். எனவே மக்கள் தொகை கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். மக்கள் தொகை கணக்கீடு மதம் சார்ந்ததல்ல. பாரதத்தில் தஞ்சம் புகுந்தவர்களை 'அகதி'களாக கருத வேண்டும். சட்ட விரோதமாக வந்தவர்களை 'ஊடுருவளர்'களாக கருத வேண்டும். இது போன்ற சட்ட விரோத ஊடுருவல்களைக் கண்டறிய 'என்.ஆர்.சி' அவசியம், என்றார்.  

Post a Comment

0 Comments