குரு க்ரந்த் சாஹிப் - 'ஞான நூல்'


குரு க்ரந்த் சாஹிப் (ஆதி க்ரந்தம்) சீக்கியர்களின் ஒரு புனித நூல், அல்லது இலக்கியம் மட்டும் அல்ல, ஒரு நிரந்தர குரு ஆகும். சீக்கியர்கள் குரு க்ரந்த் சாஹிபை நடமாடும் குருவாக மட்டும் பார்ப்பதில்லை, உயரிய நிலையில் உள்ள 'ஞானகுரு' வாக போற்றுகின்றனர். சீக்கியர்கள் க்ரந்தத்தை ஆன்மீக நூலாக மட்டும் பார்ப்பதில்லை, அவர்களின் வாழ்வியலை வழிகாட்டும் நூலாக பார்க்கின்றனர். சீக்கிய பக்தி வாழ்க்கையில் அதன் இடம் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. சீக்கிய க்ரந்தம் தெய்வீகத்தின் வெளிப்பாடு மட்டும் அல்ல; மதம் மற்றும் அறநெறி தொடர்பான அனைத்து பதில்களும் அதில் அடங்கியுள்ளது. 

சீக்கிய மதம் நிறுவிய குருமார்களால் எழுதப்பட்ட புனித நூல் என்று கருதப்படுகிறது. மற்ற புனித நூல்கள் அவர்கள் வழிவந்தவர்களால் தொகுக்கப்பட்டது. குரு க்ரந்த் சாஹிப் 1430 பக்கங்கள், 6000 பாடல்கள் (ஷாபாத்) உள்ளடங்கிய 'ஞான நூல்'. இதன் பொருளடக்கம் சீக்கிய சமய குருமார்களின் உபதேசமாக, அதாவது 'குருவின் சொல்' - 'குர்பானி' பாடல்கள் கருதப்படுகிறது. 

முதல் சீக்கியத் தலைவரான குருநானக் தேவ், சீக்கியர்கள் தங்கள் காலை மற்றும் மாலை ப்ரார்த்தனைகளில் பாடுவதற்கு தனது புனித பாடல்களை சேகரிக்கும் நடைமுறையைத் தொடங்கினர். அவரை அடுத்த சீக்கிய குரு அங்கத் தேவ் அதே மரபை பின்பற்றினார். 

குரு க்ரந்த் சாஹிப் பாடல் உருவிளக்கம் 

ஆதி க்ரந்தம் முதல் உருவிளக்கம் தொகுத்தவர் 5வது சீக்கிய குரு அர்ஜன் தேவ். ஐந்தாவது சீக்கிய குரு, குரு நானக் மற்றும் முப்பத்தாறு இந்து மற்றும் மற்ற சமய திருத்தொண்டர்களாகிய கபீர்தாஸ், ரவிதாஸ், நாம்தேவ், ஷேக்பரீத் இசையமைத்த பாசுரங்களை இணைத்து புனித கிரந்தத்தை தொகுத்தார். 

சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, குரு அர்ஜன் தேவ் ஆதி க்ரந்தத்தின் இறுதி பதிப்பை வாசிக்க, பாய் குர்தாஸ் எழுதினார். 

பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங், அவரது தந்தை குரு தேக் பகதூரின் பாடல்களுடன் ஒரு ஸ்லோகா, தோஹ்ரா மஹாலா 9 ஆங், 1429 மற்றும் அனைத்து 115 பாடல்களையும் சேர்த்துள்ளார். இந்த இரண்டாவது தொகுப்பே 

ஸ்ரீ குரு க்ரந்த் சாஹிப் என அழைக்கபடுகிறது. 

1708 ஆம் ஆண்டில், குரு கோபிந்த் சிங்கின் வீரமரணதிற்குப் பிறகு பாபா தீப் சிங் மற்றும் பாய் மணி சிங் ஆகியோர் ஸ்ரீ குரு க்ரந்த சாஹிப்பின் பல நகல்களை தயாரித்து விநியோகிக்கத்தனர். 

சீக்கிய க்ரந்தம் எழுதப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், குரு க்ரந்த சாஹிப்பும் குர்பானியும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைப் போதித்ததாக ஒரு வதந்தியை பரப்பியதன் மூலம் சிலர் முகலாய பேரரசர் ஜஹாங்கிரின் மனதில் நச்சுத்தன்மையை வளர்த்தனர். 

ஆத்திரமடைந்த ஜஹாங்கிர், குரு அர்ஜன் தேவிற்கு குரு க்ரந்த சாஹிப் மூல வரைப்படியில் உள்ள சில பாடல்களை நீக்க உத்தரவிட்டு 200,000 ரூபாய் அபராதம் விதித்தார். குரு அர்ஜன் தேவ் பாடல்களை நீக்கவோ அல்லது அபராதம் செலுத்தவோ மறுத்துவிட்டார். தீவிரமாக இருந்த குரு அர்ஜன் தேவ் பாடல்களை நீக்குவதற்கு பதிலாக வீரமரணத்தை தழுவ விரும்பினார். இது அவரது மரணதண்டனைக்கு வழிவகுத்தது 

குரு கோபிந்த் சிங் - பத்தாவது சீக்கிய குரு, ஆதி க்ரந்தத்தை ஒரு நிரந்தர குருவின் நிலைக்கு உயர்த்தினார், மேலும் 1708 இல் “சீக்கியர்களின் குரு” என்ற பட்டத்தை வழங்கினார். 

குரு க்ரந்த் சாஹிப்பை தனக்கு அடுத்த குருவாக அறிவித்த குரு கோபிந்த் சிங், சீக்கியர்களுக்கு க்ரந்த் சாஹிப்பை அவர்களின் அடுத்த மற்றும் நித்திய குருவாக கருதுமாறு கட்டளையிட்டார். 

அவர் கூறியதாவது '“Sab Sikhan ko hukam hai Guru Manyo Granth” அதாவது ‘அனைத்து சீக்கியர்களும் க்ரந்தத்தை குருவாக கருத்தில் கொள்ளுமாறு கட்டளையிடப்படுகிறார்கள்’ 

சீக்கிய குருமார்கள் பத்து. இவர்கள் தங்களுடைய உயரிய சிந்தனையுடன், மக்களுக்கு சத்தியம் மற்றும் தர்மத்தை போதித்தனர். 

ஸ்ரீ குரு க்ரந்த் சாஹிப்பின் முதல் ஒளி (ப்ரகாஷ்) ஆகஸ்ட் 1604 அன்று அமிர்தசரஸ் ஹரிமந்திர் சாஹிப்பில் வந்தது. 

Post a Comment

0 Comments