சுதந்திர போராட்டத்தில் ராஷ்டிரேய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பங்கு


டாக்டர். கேசவ் பலிராம் ஹெட்கேவார் 1898-ல் பிறந்தார். மகாத்மா காந்தியின் தலைமையில் மூன்று சத்தியாக்கிரகங்கள் நடந்தன: 1921, 1930 மற்றும் 1942 ஆகிய ஆண்டுகளில். ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார், அவரது மறைவுக்கு முன்னர் (1940) - இரண்டு முறை 1921 மற்றும் 1930 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகங்களில் பங்கேற்றார். மேலும் அவர் அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருந்தது. 

டாக்டர் மன்மோகன் வைத்யா எழுதுகிறார், "பாதி வரலாற்றை ஒரு திட்டமிட்ட வழியில் சொல்ல ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 1942 ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் சத்தியாக்கிரகம் ஆகியவற்றால் மட்டுமே சுதந்திரம் கிடைத்தது என்று இந்திய மக்கள் நம்பவைக்கப்பட்டனர். இது உண்மை அல்ல. சுதந்திர இயக்கத்தில் பங்கேற்க பொது மக்களுக்கு காந்திஜி ஒரு சிறிய மற்றும் எளிதான வழியை வழங்கினார். சத்தியாகிரகம், இராட்டை மற்றும் காதி மூலம் எல்லா இந்தியர்களையும் பங்கேற்க்கச்சொன்னார். கோடிக் கணக்கான மக்கள் சுதந்திர இயக்கத்தில் சேர முடியும். ஒரே இயக்கம் அல்லது கட்சிக்கு மட்டுமே பெயர் வாங்கிக்கொடுப்பது வரலாற்றுத் திரிபு. இது மற்ற அனைவரின் முயற்சிக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகும்." (பஞ்சஜன்ய, செப்டம்பர் 17, 2018) 

தொடக்க காலங்கள்-நடவடிக்கைகள் 

நாக்பூரில் சுதந்திர இயக்கம் பற்றிய விவாதம் 1904-1905 முதல் தொடங்கியது. 

1897 ஆம் ஆண்டில், விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்திற்காக, பள்ளியில் விநியோகிக்கப்பட்ட இனிப்புக்களை 8 வயது கேசவ் சாப்பிடாமல் குப்பையில் வீசினார். இது ஆங்கிலேயருக்கு எதிரான அவருடைய முதல் எதிர்ப்பு. 

1907 ஆம் ஆண்டில், “ரிஸ்லி மதச்சார்பின்மை” என்ற பெயரில் வந்தே மாதரம் என முழங்குவது சட்ட விரோதம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கேசவ் தனது வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களிடமும் “வந்தே மாதரம்” கோஷத்தை தனது பள்ளிக்கு வந்த அரசு ஆய்வாளர் முன்னால் போட வைத்தார் . 

தனது செயலுக்கு ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கோர மறுத்ததால், ரெஜினோல்ட் க்ராடோக்கின் அறிவுறுத்தலின் பேரிலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சி.ஆர். கிளீவ்லேண்டின் பரிந்துரையின் பேரிலும் டாக்டர் ஹெட்கேவார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். (கோவிந்த் கணேஷ் அவ்தே, மகாராஷ்டிரா, 28 ஜூலை 1940, பக். 12) 

டாக்டர் ஹெட்கேவார் 1901 இல், தனது 16-ஆம் வயதில், இளைஞர்களிடையே தேசிய நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்க்கும் பொருட்டு 'தேஷ்பந்து சமாஜ்' என்ற பத்திரிக்கையை தொடங்கினார். (பி.எஸ். ஹர்தாஸ், சுதந்திரத்திற்கான ஆயுதப் போராட்டம், பக். 372) 

அக்டோபர் 1908 இல் ராமபாயிலியில், தசராவின் “ராவண தகனம்” நிகழ்ச்சியில் தேசபக்தி நிறைந்த ஒரு முழு உரை நிகழ்த்தினார். உரையின் எழுச்சியில் ஒட்டுமொத்த கூட்டமும் “வந்தே மாதரம்” கோஷத்தை முழங்கத் தொடங்கியது. டாக்டர் ஹெட்கேவார் மீது, பிரிட்டிஷ் ஐபிசி பிரிவு 108 இல் தேசதுரோக வழக்கு பதிவு செய்தார். (அரசியல் குற்றவாளி யார், பக். 97) 

வங்காள புரட்சியாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் 

மும்பையில் மருத்துவ படிப்புக்கு வசதிகள் இருந்த போதிலும், மருத்துவப்படிப்புக்கு புரட்சியாளர்களின் மையமாக கல்கத்தாவையே டாக்டர் ஹெட்கேவார் விரும்பினார். அங்கு அவர் புரட்சியாளர்களின் முன்னணி அமைப்பான 'அனுஷிலன் சமிதி'யின் நம்பிக்கையான ஒரு உறுப்பினராகத் திகழ்ந்தார். 

டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார், யுகந்தர் மற்றும் அனுஷிலன் சமிதி போன்ற அமைப்புகளில் இருந்த டாக்டர் பாண்டுரங் காங்கோஜே, ஸ்ரீ அரவிந்த், வரிந்திர கோஷ், திரிலோக்ய நாத் சக்ரவர்த்தி போன்றோரின் தொடர்பு கொண்டிருந்தார். 1915 ஆம் ஆண்டில் முதல் உலகப் போரின்போது, ​​ அவர் மத்திய இந்தியாவின் தலைவராக இருந்தார். ராஸ்பிஹாரி போஸ் மற்றும் சச்சீந்திர சன்யால் ஆகியோரின் திட்டத்தில், இந்தியாவின் அனைத்து ராணுவப்பகுதிகளில் ஒரு பெரும் புரட்சிக்காக திட்டமிட்டார் (தேசிய இயக்கம் மற்றும் சங்கம், நேர்த்தியான வெளியீடு, 2016, பக்கம் 1). 

டாக்டர் ஹெட்கேவார் வங்காளத்திற்கும் மத்திய மாகாணத்திற்கும் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு இடையில் ஒரு ஒரு இணைப்புப்பாலமாக செயல்பட்டு வந்தார். (ஜி.வி. கேத்கர், ரஞ்சுங்கர், பி.சி. காங்கோசயஞ்ச சரித்ரா, பக். 12) 

முன்னணி புரட்சியாளர்கள் அவரது பங்கை மிகச்சிறப்பான, கௌரவமான ஒரு முன்மாதிரியாக வர்ணித்துள்ளனர். 24 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜியும் தனது புத்தகத்தில் டாக்டர் ஹெட்கேவார் அளித்த முக்கிய பங்கைக் குறிப்பிட்டுள்ளார். (ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி, சுதந்திரத்தைத் தேடி, பக். 27) 

1921 ஆம் ஆண்டில், மாகாண காங்கிரஸ் கூட்டத்தில் புரட்சியாளர்களைக் கண்டிக்கும் தீர்மானம் இயற்ற முடிவு செய்யப்பட்டது. ​​டாக்டர் ஹெட்கேவார் அதை கடுமையாக எதிர்த்தார். இதன் விளைவாக அந்தத் தீர்மானம் திரும்பப் பெறப்படப் பட்டது. கூட்டத்திற்கு லோக்மான்ய அனே தலைமை தாங்கினார். அவர் இந்த நிகழ்வைப்பற்றி எழுதும்போது, "டாக்டர் ஹெட்கேவார் புரட்சியாளர்களின் கண்டனத் தீர்மானத்தை சிறிதும் விரும்பவில்லை. அவர் அவர்களை நேர்மையான தேசபக்தர்கள் என்றே கருதினார். போராட்ட வழிகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால் அவர்கள் தேசபக்தியை குறை கூற முடியாது என திடமாக அவர் நம்பினார்" என்றார். 

மீண்டும் நாக்பூருக்கு! 

அவர் டாக்டராக 1916-இல் நாக்பூருக்குத் திரும்பினார். 

டாக்டர் ஹெட்கேவார் மனதில் 'சுதந்திரத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அவ்வளவு தீவிரத்த்துடனும் அவசரத்துடனும் அதை எதிர்பார்த்துக்கொண்டு பனி செய்து கொண்டிருந்தார். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் தேசத்திற்கு தனது முழு பலத்தையும் நேரத்தையும் சக்தியையும் கொடுத்தார். சுதந்திரத்திற்கான ஒவ்வொரு வகையான இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார். 

முதலாம் உலகப் போருக்குப் பிறகு, இந்தியாவின் சுதந்திர இயக்கத்தை நசுக்குவதில் பிரிட்டனின் கவனம் தீவிரமாக இருந்தது. இது தொடர்பாக லோக்மான்ய பால் கங்காதர் திலக்கின் ஒத்துழைப்பு டாக்டர் ஹெட்கேவார் எதிர்பார்த்தார். டாக்டர் முன்ஜே எழுதிய கடிதத்துடன் அவரைச் சந்திக்க புனே சென்றார். இரண்டு நாட்கள் டாக்டர் ஹெட்கேவார் லோக்மான்யருடன் தங்கினார். (மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்த்தமானி, நாக்பூர் பிரிவு, பக். 113) 

1920 ஆம் ஆண்டு நாக்பூரின் காங்கிரஸ் அமர்வில் லோக்மண்ய திலக்கின் தலைமையில், அனைத்து ஏற்பாடுகளின் பொறுப்பும் டாக்டர் ஹார்டிகர் மற்றும் டாக்டர் ஹெட்கேவார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது, அதற்காக அவர் 1,200 தன்னார்வலர்களை அந்தப் பணிக்காக நியமித்தார். டாக்டர் ஹெட்கேவார் அப்போது காங்கிரசின் நாக்பூர் நகர பிரிவின் இணை செயலாளராக இருந்தார். அந்த அமர்வை நிறைவேற்றுவதற்காக, டாக்டர் ஹெட்கேவார் காங்கிரஸின் இயக்கக் குழுவிற்கு ஒரு தீர்மானம் இயற்றப் பரிந்துரைத்தார். 

ஆர்.எஸ்.எஸ். தோற்றம் 

1925 ல் விஜயதசமியன்று 25 பேருடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் துவக்கப்பட்டது. இவர்களில் பலர் டாக்டர் ஹெட்கேவாருடன் பல ஆண்டுகாலம் தேசப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள். 

7000 மைலுக்கு அப்பாலில் இருந்து வியாபாரம் செய்ய வந்த இருவர், எவ்வாறு நமது நாட்டையே ஆட்சி செய்யும் அளவிற்கு உயர்ந்தனர் என்று டாக்டர் ஹெட்கேவார் சிந்தித்துக்கொண்டே இருந்தார். நாம் மொழி, சாதி, வழிபாடு முறை என்று பல கூறுகளாக பிரிந்திருப்பதால் நம்மை வெற்றிகொள்வது ஆங்கிலேயருக்கு சுலபமாகிப்போனதை அவர் புரிந்துக்கொண்டார். ஒரு வேளை ஆங்கிலேயர்கள் வெளியேறினாலும், வேறு யாராவது நம்மை பிடிப்பார்கள். இதை தவிர்க்க வேண்டுமானால் சமுதாயத்தை ஒருங்கிணைக்க வேண்டும், மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையும், தேசப்பற்றையும் விதைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். 

இந்த பணியை அரசியலில் இருந்து விலகி செய்ய முடிவெடுத்தார். அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை துவக்கிய பின்னரும், பல அரசியல் தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்தார். 

சுதந்திரத்தை அடையும் வழி 

தேசப்பற்றை வளர்க்கவும், அறிவை மேம்படுத்தவும் பல விளையாட்டுகள் சங்கத்தில் நடத்தப்பட்டு வந்தன. ஏப்ரல் 1929-ல் வார்தாவில் நடைபெற்ற முகாமில், டாக்டர் ஹெட்கேவார் "சுதந்திரம் கிடைக்க நாம் அனைத்தையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். சங்கத்தின் குறிக்கோள் பூர்ண ஸ்வராஜ்யம். சுதந்திரம் வழங்குவதாக பிரிட்டிஷ் பல முறை பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது. இனியும் அதை நம்பி பயனில்லை, நமக்கான சுதந்திரத்தை நாமே பெறுவோம்" என்று பேசினார். (ஆதாரம்: ராகேஷ் சின்ஹா எழுதிய Aadhunik Bharat ke Nirmaata – Dr. Keshav Baliram Hedgewar, Page 91) 

ஒத்துழையாமை இயக்கம் 

ஏப்ரல் 6, 1930 அன்று ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக உப்பு சத்தியாகிரகத்தை காந்திஜி துவங்கினார். இதற்கு ஆதரவளிப்பது என்று ஆர்.எஸ்.எஸ். ஏற்கனவே முடிவு செய்திருந்தது. டாக்டர் ஹெட்கேவார் தனிப்பட்ட முறையில், இந்த ஒத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்றார். ஜுலை மாதம் யவத்மாலில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 10000 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அவருடன் இணைந்தார்கள். இவர்களில் அப்பாஜி ஜோஷி மற்றும் தாதாராவ் பராமத் ஆகியோரும் இருந்தனர். சங்கத்தின் தலைவராக டாக்டர் பரண்ஜபே நியமிக்கப்பட்டார். இதற்காக கைது செய்யப்பட்ட ஹெட்கேவார் 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்படும் முன் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய ஹெட்கேவார் " நாட்டின் சுதந்திரமே முக்கியம். தங்களின் ஷூக்களுக்கு பாலீஷ் போட்டால் நாட்டிற்கு விடுதலை தருவார்கள் என்றால், நான் அதை செய்ய தயார். ஒருவேளை ஷூவால் அடி வாங்கினால் தான், சுதந்திரம் கிடைக்கும் என்றால், அதையும் என்னால் செய்ய முடியும்" என்று பேசினார் 

டாக்டர் ஹெட்கேவார் கைதான பின்பு மார்த்தாண்ட ராவ் ஜோக், அப்பாஜி ஹால்டே உள்ளிட்டோர் சிறை சென்றோரின் குடும்பங்களை கவனித்து கொள்ள 100 தொண்டர்களை இணைத்து குழுவை அமைத்தனர். அந்த ஆண்டு விஜயதசமியின் போது சிறையில் இருந்தார் ஹெட்கேவார். அவர் அனுப்பிய செய்தி, ஷாக க்களில் படிக்கப்பட்டது. அதில் "அடிமை விலங்கு அகலும் வரை, சமுதாயம் சுயசார்புகொண்டதாகவும் , வலுவானதாகவும் உருவாகாத வரை எவ்வித கேளிக்கைகளிலும் ஈடுபடாதீர்கள்" என் எழுதியிருந்தார். 

ஆர்.எஸ்.எஸ். மீதான முதல் தடை 

டிசம்பர் 15, 1932 அன்று பிரிட்டிஷ் அரசு , அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர தடை விதித்தது. ஆர்.எஸ்.எஸ். அரசியல் போராட்டங்களில் பங்கேற்று வருகிறது. எனவே அரசு ஊழியர்கள் அதில் சேரவோ, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ கூடாது என்று சுற்றறிக்கை விடுக்கப்பட்டது. இந்த தடை காரணமாக சங்கத்தின் வளர்ச்சி எவ்விதத்திலும் நிற்காது என்று டாக்டர் ஹெட்கேவார் தெரிவித்தார். இந்த உத்தரவிற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததால் 1934-ல் தடை விலக்கப்பட்டது (Narendra Sehgal, The Complete Independence of India, p. 157) 

“வெள்ளையனே வெளியேறு” போராட்டம்! 

1942 ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி மும்பையைச் சார்ந்த கோவாலியா மைதானத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு வரலாற்று சிறப்பு பெற்றதாகும். அங்குதான் மகாத்மா காந்தி முதன்முறையாக “வெள்ளையனே வெளியேறு” என்று அறைகூவல் விடுத்தார். அன்று முதல் இந்தப் போராட்டம் புதிய சக்தி பெற்று நாள்தோறும் வலுப்பெற்று ஒரு பெரிய முழக்கமாக உருவெடுத்தது. பல தலைவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று இந்த புதிய போராட்டத்தை ஆங்காங்கே பரப்பி, கைதும் ஆயினர். மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதியை சார்ந்த பாவ்லி, வார்தாவில் உள்ள அஷ்டி, விதர்பாவை சார்ந்த சிமுர் என்ற இடங்களும் இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். முக்கியமாக சிமுரில் நடைபெற்ற போராட்டம் பெர்லின் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டது. சிமுரில் இந்த இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்கள் காங்கிரஸ் அபிமானி ஆன உத்தவ ராவ் கோரேக்கர் மற்றும் சங்க நிர்வாகிகளான பாபுராவ் பேகடே, அண்ணாஜீ சிரஸ் ஆவர். 

இந்த போராட்டத்தில் சங்கப் பிரச்சாரகர் பாலாஜி ராய்ப்பூர்கர் துரதிர்ஷ்டவசமாக ஆங்கிலேயர்களின் குண்டடிபட்டு இறந்தார். அவ்வாறு இறந்தவர் இவர் ஒருவரே என்பது வேதனைக்குரியது. காங்கிரஸ், ஸ்ரீ குரு தேவா மண்டல் நிறுவனத்தார் ஸ்ரீ துக்டா மஹாராஜ் மற்றும் சங்க தொண்டர்களும் ஒருங்கிணைந்து சிமுரில் 1943 இல் சத்தியாகிரகத்தை ஆரம்பித்தனர். சுமார் 125 சத்தியாக்கிரகிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பலவித இன்னல்களுக்கு ஆளாகினர்; மேலும் அதிக அளவிலான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பரவிய இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மூத்த பிரச்சாரகர்கள் மிக்க சுய ஊக்கத்துடன் பங்கு பெற்றனர். இந்த சுதந்திரப் போராட்டம் காங்கிரஸ் சார்ந்து இருந்தபோதிலும் சங்க நிர்வாகிகள் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் காந்திஜி ஏற்று நடத்திய சத்தியாகிரகத்தில் அதிக அளவிலான ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்; அதுமட்டுமல்ல, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காங்கிரஸின் பல நிகழ்ச்சிகளிலும் செயல்களிலும் தங்களை இணைத்து உற்சாகத்துடன் பங்குபெற்றனர். அத்தகைய தொண்டர்களில் பின்வரும் பெயர்கள் குறிப்பிடத்தக்கவை: ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெய் தேவி பாதக் (அவர் பின்நாளில் வித்யா பாரதியில் பெரும்பங்கு பெற்றார்), விதர்பா அர்வியைச் சார்ந்த டாக்டர்.அண்ணா சாஹேப் தேஷ்பாண்டே, ஜஷ்பூரைச் சார்ந்த இராமகாந்த் கேஷவ் (பாலாசாஹேப்) தேஷ்பாண்டே (அவர் பின்பு வனவாசி கல்யாண் ஆசிரமம் நிறுவினார்), தில்லியைச் சார்ந்த வசந்த்ராவ் ஓக் (அவர் பின்நாளில் பிரச்சாரகர்) ஆகியோர் ஆவர். 

மற்றும் பிரசத்தி பெற்ற சட்ட வல்லுநரான கிருஷ்ண வல்லப பிரசாத் நாராயண் சிங் (பாபுவாஜி) (அவர் பின்நாளில் பிஹார் மாநிலத்தில் ஆளுனர் ஆனார்), சந்த்ரகாந்த் பரத்வாஜ் (காலில் சுடப்பட்டு மிகவும் அவதிப்பட்டார்) ஆகியோரும் முக்கிய பங்கேற்றனர். சந்த்ரகாந்த் பரத்வாஜ் பிற்காலத்தில் பிரசித்திபெற்ற கவிஞராக உருவாகி சங்கத்தின் பெருமைகளை விளக்க பல கவிதைகளை சேர்த்தார். 

கிழக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில், மாதவராவ் தேவடே என்பவரும், உஜ்ஜயினி சேர்ந்த தத்தாத்ரேயர் கங்காதர் மாதவராவ் கஸ்துரே (பிற்காலத்தில் ஒரு பிரச்சாரகர் ஆனார்) அவர்களும் சங்க பிரச்சாரகர்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறை ஒரு பக்கம் இருந்த போதிலும், சங்கத்தைச் சேர்ந்த பிரச்சாரங்கள் மற்றும் சத்தியாகிரஹத்தை தொடர்ந்து நடத்திச் சென்றனர். மேலும் அவர்கள் இரகசியமாக பதுங்கி இருந்து மர்ம முறையில் பல வேலைகளைச் செய்து இந்த போராட்டத்திற்கு ஒரு முக்கிய கருவிகளாக செயல்பட்டனர். அந்த காலத்தில் அத்தகைய தொண்டர்களுக்கு பாதுகாப்பளித்து தங்கள் வீட்டில் வைத்திருப்பது என்பது அபாயத்துக்குரிய ஒரு செயலாகும். 

இந்த 1942 ஆம் ஆண்டு போராட்ட இயக்கத்தின் லாலா ஹன்ஸ்ராஜ் தில்லியைச் சார்ந்த ஒரு பிரசத்தி பெற்ற தலைவர் ஆவார். அவர் பிற்காலத்தில் புகழ்பெற்ற அருணா ஆசஃப் அலி அவர்களின் வீட்டில் தங்கி மறைந்திருந்து போராடினார். அதேபோல் மகாராஷ்டிராவின் சதாரா பிரதேசத்தைச் சார்ந்த தீப்பொறி போராட்ட ஆர்வலர் நானா பாடில் என்பவருக்கு ஔந்த் சேர்ந்த பண்டிட் சதவலேகர் என்பவர் மறைவிடம் கொடுத்து உதவி செய்தார். 

டாக்டர் ஹெட்கேவார் 15 ஆண்டுகள் சங்கப் பணியாற்றினார். இந்த 15 ஆண்டுகளில் அவர் இந்த நிறுவனத்தை மிகுந்த யோசனையுடனும் முன் திட்டங்களுடனும் கிளைகள் மூலம் பலப்படுத்தினார். தேசியம் என்பது அவரது முக்கியமான அடிப்படை மந்திரமாக இருந்தது. நல்ல நிறுவனங்கள் பலம் பெற வேண்டுமானால் அவற்றுக்கு கிளைகள், சக்திவாய்ந்த அமைப்புகள், மிகவும் இறுக்கமான தொடர் நிலைகள் முக்கியம் என்று அவர் கருதினார். இதன்மூலம் சமுதாயத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர முடியும்; அதனால் தேசிய விடுதலை முதல் நாட்டின் பலதரப்பட்ட முன்னேற்ற பிரச்சனைகள் அனைத்தையும் தீர்வு செய்யலாம் என்று அவர் நம்பினார். அவரையும் அவரது செயல்களையும் பலரும் பாராட்டினர். அவர்களில் முக்கியமானவர்கள் லோகமான்ய திலகர், மகரிஷி அரவிந்தர், மதன்மோகன் மாளவியா, வினாயக் தாமோதர் சாவர்க்கர், மூஞ்சே, பித்தல்பாய் படேல், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, முன்ஷி போன்றோர். 

ராஜ்குருவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் 

*ஷிவ்ராம் ஹரி ராஜ்குரு (1908–1931), போன்சால் வேதசாலையில் படித்தவர். அங்கு, டாக்டர் ஹெட்கேவாரை 1925ல் சந்தித்திருக்கிறார் (Anil Verma, Rajguru The Invisible Revolutionary, Publication Division: New Delhi, 2010, p. 25). அதன்பின், நாக்பூர் மொகிதேவாடா ஷாகாவுக்கு ராஜ்குரு பல முறை சென்றிருக்கிறார். உடற்பயிற்சிகளில் ராஜ்குருவுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. (S.P. Sen, Dictionary of National Biography, Volume 3, Institute of Historical Studies: Kolkata, 1974, p. 447) [16:10, 12/8/2019] . அபிஷேக் : ‘அவர் (ராஜ்குரு), புரட்சியாளர்களின் நடவடிக்கைகளில் இணைந்துகொள்வதற்காக வாரணாசிக்கு வந்தார். அங்குதான் பகத்சிங் உள்ளிட்ட புரட்சியாளர்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. 

1927 நவம்பர் 8ம் தேதி, இந்தியாவில் அரசு நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள சைமன் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக வைஸ்ராய் அறிவித்தார். இந்த கமிஷன், மும்பைக்கு 1928 பிப்ரவரி 3ம் தேதி வந்தது. சைமன் கமிஷன், டில்லி சென்றபின் லாகூருக்கு 1928 அக்டோபர் 30ம் தேதி சென்றது. அங்கு, லாலா லஜபதிராய் தலைமையில் ஏராளமானோர் சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

ரயில்நிலையத்தில் லத்தி சார்ஜ் நடத்த ஏஎஸ்பி சான்டர்ஸுக்கு எஸ்பி ஸ்காட் அனுமதி வழங்கினார். அதில் படுகாயமடைந்த லாலா லஜபதிராய், 1928 நவம்பர் 17ம் தேதி மரணமடைந்தார். இதற்கு பழிவாங்க வேண்டும் என பகத்சிங், சந்திரசேகர ஆசாத், ராஜ்குரு, ஜெய்கோபால் ஆகியோர் தீர்மானித்தனர். இவர்கள் நான்கு பேரும் இணைந்து, எஸ்பி ஸ்காட்டை 1928 டிசம்பர் 27ம் தேதி கொலை செய்யத் திட்டமிட்டனர். அவரைக் குறிவைத்து ராஜ்குரு சுட்டார். பகத்சிங்கும் ஐந்து முறை சுட்டார். ராஜ்குருவையும் பிற புரட்சியாளர்களையும் மடக்கிப்பிடிக்கும் முயற்சிகளை பிரிட்டிஷ் அரசு தொடங்கியது. சிக்க வேண்டியிருக்கும் என்று ராஜ்குரு அஞ்சவே இல்லை. அவர் தொடர்ந்து தனது விதிப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான விழிப்புணர்வை இளைஞர்களிடம் ஏற்படுத்தி வந்தார். சான்டர்ஸ் கொலைக்குப் பின்னர், மற்றொரு புரட்சி வீரருடன் அமராவதிக்கு அவர் வந்தார். அங்கு, ஹனுமான் பிரசார் மண்டலின் கோடை முகாமில் சேர்ந்தார். அங்கிருந்து அகோலா சென்ற அவர்கள், ராஜராஜேஸ்வர் கோயில் அருகே ஒரு வாடகை வீட்டில் வசிக்க ஆரம்பித்தனர். அந்த வீட்டை, பாபு சாகேப் ஸகஸ்த்ரபுத்தே ஏற்பாடு செய்து கொடுத்தார். அதன்பின்னர். அமராவதி, நாக்பூர், வார்தா ஆகிய இடங்களுக்கு அவர் (ராஜ்குரு) சென்று வந்தார். (Anil Verma, Rajguru The Invisible Revolutionary, Publication Division: New Delhi, 2010, p. 96-97). இந்த வேளையில், 1929ல் நாக்பூரில் இருந்த வேளையில் அவர் (ராஜ்குரு), டாக்டர் ஹெட்கேவாரைச் சந்தித்தார். புனேவுக்கு செல்ல வேண்டாம் என அவருக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் (டாக்டர் ஹெட்கேவார்) அறிவுறுத்தினார். பிரிட்டிஷ் அரசிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, பையாஜி டானி பகுதியில் உள்ள உம்ரேட் என்ற இடத்தில் ராஜ்குரு வசிப்பதற்கு அவர்கள் ஏற்பாடு செய்துகொடுத்தனர். ஆனால், இந்த அறிவுரையைப் பொருட்படுத்தாத அவர் (ராஜ்குரு), புனேக்கு சென்றார். அங்கு, 1929 செப்டம்பர் 30ம் தேதி கைது செய்யப்பட்டார். (Ch. P. Bhishikar, Keshav: Union Producer, Suruchi: New Delhi, 1979, p. 70). 

=== 

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் (ஆர்எஸ்எஸ்) சேவகர்களின் பங்களிப்பு 
=== 

மும்பை கொவாலியா டேங்க் மைதானத்தில் 1942 ஆகஸ்ட் 8ம் தேதி நடந்த காங்கிரஸ் மாநாட்டில், ‘பிரிட்டிஷாரே, இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்’ (வெள்ளையனே வெளியேறு) என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்ட இயக்கத்தைத் தொடங்கும் அறிவிப்பை மகாத்மா காந்திஜி வெளியிட்டார். 

1. விதர்பா பகுதியின் பாவ்லி (அமராவதி), அஸ்தி (வார்தா), சிமூர் (சந்திரப்பூர்) ஆகிய இடங்களில் சிறப்பு போராட்டங்கள் நடந்தன. சிமூர் போராட்டம் பற்றிய செய்தி பெர்லின் வானொலியில் ஒலிபரப்பானது. இந்த போராட்டத்துக்கு காங்கிரசைச் சேர்ந்த உத்தவ்ராவ் கோரேகரும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தாதா நாயக், பாபுராவ் பேகடே, அன்னாஜி சிராஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். 

2. இந்த போராட்டத்தில், பிரிட்டிஷ் படையின் துப்பாக்கிச்சூட்டால் பலியான ஒரே நபர், ஆர்எஸ்எஸ் தொண்டரான பாலாஜி ராஜ்புர்கர். 

3. டக்டோ மகராஜால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ குருதேவ் சேவா மண்டலும், ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் இணைந்து, சிமூரில் 1943ம் ஆண்டு போராட்டம் மற்றும் சத்தியாக்கிரகத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் 125 சத்தியாக்கிரகிகள் விசாரிக்கப்பட்டு, ஏராளமான தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா முழுக்க நடந்த இந்த போராட்டத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீனியர் தொண்டர்களும் சுய துாண்டுதலுடன் ஒவ்வொரு இடமாகச் சென்று பங்கேற்று வந்தனர். சுதந்திரப் போராட்டத்தில், காங்கிரஸ் நடத்திய இயக்கங்களில் பங்கேற்பதை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் எந்த வேளையிலும் நிறுத்தவே இல்லை. காந்திஜி நடத்திய சத்தியாக்கிரகங்களில், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இது மட்டுமல்ல, காங்கிரஸின் அனைத்துச் செயல்பாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தீவிரமாகப் பங்கேற்றனர். 

4. ராஜஸ்தானில் பிரச்சாரக் ஆக இருந்த ஜெய்தேவ்ஜி பதக், பல போராட்டங்களில் பங்கேற்றார். இவர், பின்னர் வித்யா பாரதி அமைப்பில் இணைந்து செயல்பட்டார். 

5. விதர்பா பகுதியின் ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் டாக்டர் அன்னாசாகேப் தேஷ்பாண்டே, பல போராட்டங்களில் பங்கேற்றார்.. 

6. சட்டீஸ்கரின் ஜஸ்பூரில் ராமகாந்த் கேஷவ் (பாலாசாகேப்) பல போராட்டங்களில் பங்கேற்றார். இவர், பின்னர் மலைவாழ் மக்களுக்காக வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்தைத் தொடங்கினார். 

7. டில்லியில் வசந்த்ராவ் ஓக் பல போராட்டங்களில் பங்கேற்றார். இவர், பின்னர் டில்லியில் பிரச்சாரகராக செயல்பட்டார். 

8. பீகாரின் பாட்னாவில், பிரபல வக்கீல் கிருஷ்ண வல்லபபிரசாத் நாராயண் சிங் (பாபுவாஜி) பல போராட்டங்களில் பங்கேற்றார். இவர், பின்னர் பீகாரின் கவர்னராகச் சேவையாற்றினார். 

9. டில்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற சந்திரகாந்த் பரத்வாஜின் காலில், போலீஸ் தோட்டா பாய்ந்தது. அதை வெளியே எடுக்க இயலவில்லை. இவர், பின்னாளில் பிரபல கவிஞராக மாறி, ஆர்எஸ்எஸ் அமைப்புக்காக பல பாடல்களை உருவாக்கினார். 

10. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற மாதவ்ராவ் தேவடே, பின்னாளில் பிரச்சாரகராகச் சேவையாற்றினார். 

11. மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைனில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற தத்தாத்ரேய கங்காதர் (பையாஜி) கஸ்துாரே, பின்னாளில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகச் சேவையாற்றினார். 

12. பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறையை மீறி பல இடங்களிலும் சத்தியாக்கிரகம் தொடர்ந்தது. பல பகுதிகளிலும், பலரும் தலைமறைவாக இருந்தபடி போராட்டங்களை வழிநடத்தினர். அந்த வேளையில் தலைமறைவாக இருந்தவர்கள் பலரையும்,, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அபாயங்களை எதிர்கொண்டபடி தங்களது வீடுகளில் பாதுகாத்து வந்தனர். 

13. 1942ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தலைமறைவாக இருந்தபடி போராட்டங்களை வழிநடத்தி வந்த அருணா ஆசப் அலி, டில்லி மாகாண ஆர்எஸ்எஸ் தலைவரான லாலா ஹன்ஸ்ராஜ் குப்தாவின் வீட்டில்தான் தங்கியிருந்தார். 

14. மகாராஷ்டிராவைச் சேர்ந்த தீவிர போராட்ட வீரரான நானா பாட்டீல் தலைமறைவாக இருக்க, அயோத்தி ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளரான பண்டிட் சதாவலேகர்தான் பாதுகாப்பு வழங்கினார். 

Post a Comment

0 Comments