பாரத விமானப்படை தாக்குதல் புல்வாமா உயிர்த் தியாகிகளுக்கு பொருத்தமான அஞ்சலி

பாரத விமானப்படையின் தீரமிகு வீரர்கள் நடத்திய துணிகரமான விமானத் தாக்குதல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான 40 சி ஆர் பி எப் வீரர்களின்ஆன்மாக்களுக்கு செய்யப்பட்ட பொருத்தமான அஞ்சலி என்று ஆர்.எஸ்.எஸ் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

பிப்ரவரி 27 அன்றுநாகபுரியில் வீர சாவர்க்கர் நினைவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள உணர்வு, அந்த மாவீரரின்உணர்வோடு பொருந்திப் போகிறது என்றும் அவர் கூறினார்.

சாவர்க்கர் நினைவுக் குழு நடத்திய இந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் புகழ்பெற்ற சிந்தனையாளரும் விஞ்ஞானியுமான டாக்டர் விஜய் பட்கருக்கு வீர சாவர்க்கர்பெயரிலான விருதை வழங்கினார்.

வீர சாவர்க்கரின் நினைவு நாளன்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது அந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கான உண்மையான சிராத்தம் என்று கூட கொள்ளலாம் என்றும்மோகன் பாகவத் குறிப்பிட்டார். தேசப் பாதுகாப்பு குறித்த சாவர்க்கரின் கருத்தை விளக்குகையில் மோகன் பாகவத், உலகம் வலிமையின் மொழியைத்தான் புரிந்துகொள்கிறது எனவே பாரதம் எல்லாவிதத்திலும் பலம் வாய்ந்ததாக விளங்க வேண்டியது கட்டாயம் என்றார்.

Post a Comment

0 Comments