பாரத விமான படைக்கு ராஷ்ட்ர சேவிகா சமிதி பாராட்டு

புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய பாரத விமானப்படைக்கு ராஷ்ட்ர சேவிகா சமிதியின் பாராட்டுக்கள். ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்து அரசியல் துணிவு காட்டிய மேதகு பிரதமர் நரேந்திர மோடியையும் பாராட்டுகிறோம் .

விமானப் படையின் தாக்குதல் நடவடிக்கை புல்வாமா பலிதானிகளுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி மட்டுமல்ல, எதிரிகள் ரத்தம் தெறிக்கும் செயலில் இறங்கினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஆக்ரோஷ மனநிலையில் உள்ள கோடானுகோடி மக்களுக்கு நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் தலைமையில் தேச மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மறுபடியும் உறுதிப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. மோடி இருப்பதால் தேசம் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பகைவன் வாலாட்டம் இங்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இன்று ராஜஸ்தான் சுரு நகரில் பிரதமர் மேற்கோள் காட்டிய அந்தக் கவிதை வரிகள் மனதில் ரீங்காரமிடுகின்றன: 

இந்த இந்தமண்ணின் மீது ஆணை 
இந்த தேசம் வீழ விடமாட்டேன்
இந்த தேசம்தயங்கி நிற்க விடமாட்டேன்
இந்த தேசம் பணிந்து போக விடமாட்டேன்
பாரத மாதாவுக்கு இது என் வாக்குறுதி
தாயே நீ தலைகவிழ்ந்திட விடமாட்டேன்

பாரதத்தின் பகைவர்கள் மீதான போரில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடனும் பாரத ராணுவத்துடனும் ராஷ்ட்ர சேவிகா சமிதி முழுமையாக ஒத்துழைக்க உறுதி பூண்டுள்ளது. பாரத விமானப்படையின் வீரர்களுக்கு பாராட்டு புல்வாமா உயிர்த்தியாகிகளுக்கு அஞ்சலி. அவர்களின் குடும்பத்தாருக்கு மீண்டும் எங்களது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் நெருக்கடியான இந்த சூழலில் அவர்களோடு நாங்கள் உள்ளத்தாலும் உடலாலும் பொருளாலும் இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 


சாந்தா குமாரி (ராஷ்ட்ர சேவிகா சமிதி அகில பாரத தலைவி) அ. சீதா காயத்ரி (ராஷ்ட்ர சேவிகா சமிதி பொதுச் செயலர்)


Post a Comment

0 Comments