RSS Sarsanghachalak dedicates Trichy Karyalaya to nation

சாதனா காரியாலய அர்ப்பணிப்பு விழா

சாதனா காரியாலய அர்ப்பணிப்பு விழா 15.01.2019 அன்று திருச்சி சாதனா அறக்கட்டளையின் காரியாலயத்தை ஆர்எஸ்எஸின் சர்சங்ககாலக் மானனீய ஸ்ரீ மோகன்ஜி பாகவத் அவர்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து பாரதமாதா திருவுருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து காரியாலயத்தை தேசிய பணிக்கு அர்ப்பணம் செய்தார்.

அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பரம பூஜனீய சர்சங்கசாலக் அவர்கள் பேசுகின்ற பொழுது, தமிழில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று வாழ்த்து தெரிவித்தார். பிறகு தாம் பலமுறை தமிழ்நாடு வந்திருந்தாலும் இப்போது பொங்கல் விழா சமயத்தில் வந்திருப்பது மகிழ்வினை தருகிறது இந்த பொங்கல் திருநாள் மற்ற பகுதிகளில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது அதில் முதல் நாள் போகிப் பண்டிகை முற்காலத்தில் போகிப் பண்டிகையன்று தத்தமது வீடுகளில் உள்ள பழைய மண்பாண்டங்களை வெளியே கொண்டு சென்று உடைத்துவிடுவார்கள் பிறகு புதிய மண் பாண்டங்கள் வாங்குவார்கள் பழைய பாடல் உடைக்கப்படும்போது சுற்றுச்சூழல் பாதிக்காது, ஆனால் அதேசமயம் புதிய பானைகள் வாங்கும்போது அந்தப் பானைகள் செய்யும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் இதை நம் முன்னோர்கள் திட்டமிட்டு செய்திருந்தார்கள். 
அடுத்த நாள் சூரிய வழிபாடு, இன்றைய தினம் சூரிய பகவான் தனது பாதையில் மகர ராசியில் இருந்து கடக ராசி நோக்கி பயணம் துவங்குகிறான் சூரியனின் பயணத்தில் அவனது ரதத்திற்கு ஒற்றைச் சக்கரம் ஏழு குதிரைகள் குதிரைக்களின் லகான் பாம்புகளால் ஆனது தேரோட்டி ஒற்றைக்கால் உடைய மாற்றுத்திறனாளி ஆனாலும் சூரியன் தொடர்ந்து கடமையைச் செய்துகொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறான். இரவில் பல நட்சத்திரங்கள் தெரிகின்றன, ஆனால் பகலில் சூரியன் மட்டுமே தெரிகிறான் ஆனாலும் வெளிச்சத்துடனும் வெப்பத்துடனும் நாம் அதை உணர்கிறோம், காரணம் நட்சத்திரத்தின் ஒளி நம்மை வந்தடைய 30 ஒளி வருடங்கள் ஆகும் ஆனால் சூரியனின் ஒளி எட்டரை மணி நேரத்தில் நம்மை வந்தடைகிறது அதுபோல நமது செயலும் துரிதமாக மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் சுய சங்கல்பம் செய்து பணி செய்ய வேண்டும். 
நல்ல பண்புகள், நம்பிக்கை, தவம், ஆகியவையே வெற்றிக்கு ஆதாரம். ராவணன் பெரிய பராக்கிரமசாலி, வேதவித்து என்று அறியப்படுபவன், நவகிரகங்களை தனது சிம்மாசனத்திற்கு ஆன படிக்கட்டுகளாக கொண்டு ஆட்சி செய்யும் அளவிற்கு பலசாலி, ஆனால் ராமனோ சீதையைத் தேடி லக்ஷ்மணனுடன் கால்நடையாகவே நடந்து வந்தவன், கிஷ்கிந்தை முதலான பல பகுதிகளுக்கும் நடந்தே வந்தான், அவனுக்கு உதவியாக இருந்தவை வானரங்கள், பறவைகள், மிருகங்கள் தான். ஆயினும் நம்பிக்கையும் தவம் இருந்த காரணத்தினால் ராமசேது கட்டி இலங்கைக்கு செல்ல ராமனால் முடிந்தது. வானர சேனையை கொண்டு ராட்சத சேனையை முழுதும் அழித்த பிறகு தான் இந்திரனே தனது ரகத்தை ராமனுக்கு தந்து உதவ முன்வருகிறான். ராமன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை வந்த பிறகுதான் தேவர்களும் முனிவர்களும் ராமனை வாழ்கவே முன்வந்தனர். ஆகவே வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தேவை. 

இந்த சாதனா கட்டிடம் ஒரு கருவிதான். இதை பயன்படுத்தி நல்ல பல காரியங்களை செய்ய வேண்டும். சங்கத்தின் பணி சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி நல்ல மனிதர்களை உருவாக்குவது. அவர்கள் அனைத்து காரியங்களையும் செய்வார்கள்.

நமது பலவீனம் மற்றவர்களை சக்தி படைத்தவர்கள் என்று நம்புவதுதான். ஒரு முறை சுவாமி விவேகானந்தரை ஒரு குரங்குக் கூட்டம் துரத்தியது, சுவாமி வேகமாக நடக்க ஆரம்பித்தார், குரங்குகளும் வேகமாக வந்தன சுவாமி ஓட ஓட அவையும் விரட்டி வந்தது, ஒரு கட்டத்தில் துறவி ஒருவர் சுவாமியை நோக்கி கட்டளையிட்டார் திரும்பிச் செல் என்று சொன்னார் உடனே சுவாமி விவேகானந்தர் நின்றார், திரும்பினார், குரங்கு கூட்டத்தை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தார் குரங்குகள் ஈரடி பின் சென்றன, சுவாமி ஓரடி ஈரடி எடுத்து வைத்தார் குரங்குகள் நான்கடி பின்வாங்கின ,சுவாமி தொடர்ந்து நடக்க குரங்குகள் பின்வாங்கி ஓடி மறைந்தன. நமக்கு பிரச்சனை பிறரின் பலம் அல்ல நமது பலவீனமே நாம் பலவீனமானவர்கள் அல்ல என்று நம்பிக்கையை நமது சமுதாயத்திற்கு உருவாக்க வேண்டும்.

எங்கு உண்மை தர்மம் ஒழுக்கம் உள்ளதோ அங்கு வெற்றி கிட்டும். நரசிம்ம அவதாரத்தில் இரண்யகசிபு வதம் செய்யப் பட்டான் உடனே இந்திரலோகத்து அரச பதவி தனக்கு கிட்டும் என இந்திரன் எதிர்பார்த்தான். ஆனால் இறைவனோ இரணியகசிபுவின் மகன் பிரகலாதனுக்கு முடிசூட்டி அரசன் ஆகிவிட்டான். ஏமாற்றமடைந்த இந்திரன் பிரகஸ்பதியை நாடினான். பிரகஸ்பதி சில காலம் பொறுத்திருக்குமாறு அறிவுறுத்தினார். இந்திரனும் ஆயிரம் ஆண்டு காலம் பொறுமை காத்தான். பிரகலாதனின் ஆட்சி சிறப்பாக இருந்தது பிறகு பிரகஸ்பதியின் ஆலோசனையுடன் யாசகனாக பிரகலாதன் சபைக்கு இந்திரன் சென்றான் பிரகலாதனிடம் தனக்கு ஒரு உறுதி கொடுக்கும்படி கேட்டான். பிரகலாதனோ தனது சபையில் யார் என்ன கேட்டாலும் மறுக்கப்படாமல் தரப்படும் இந்திரனே வந்து என் முன் வாசகனாக நிற்கும்போது உறுதிமொழி தேவையில்லை தேவையானவற்றை கேட்கலாம் என்று கூறினான். உடனே இந்திரன் பிரகலாதன் அது ஒழுக்கத்தை தனக்கு தரும்படி யாசகம் கேட்டு வேண்டினான். பிரகலாதனும் தனது ஒழுக்கத்தை இந்திரனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தான் உடனே இந்திரனின் உடலிலிருந்து ஓர் ஒளி வடிவில் மனித உருவம் வெளிப்பட்டது யார் என பிரகலாதன் கேட்டான் தான் ஒழுக்கம் என்றும் நீ என்னை இந்திரனுக்கு தாரை வார்த்து விட்டாய் ஆகவே நான் அவனிடம் செல்கிறேன் என்று ஒழுக்கம் இந்திரனிடம் சென்று விட்டது. மேலும் ஒரு ஒளி வடிவம் பிரகலாதன் உடலில் விலிருந்து வெளிப்பட்டது தான் தேஜஸ் என்றும் ஒழுக்கத்தின் ஏவலால் என்றும் ஒழுக்கம் உள்ள இடத்தில்தான் தான் இருப்பேன் என்றும் இந்திரனிடம் சென்று விட்டது. அடுத்தபடியாக பலம் வெளிப்பட்டது, ஐஸ்வர்யம் வெளிப்பட்டது, கடைசியாக ராஜலட்சுமியும் வெளிப்பட்டு ஒழுக்கம் இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று இந்திரனிடம் அடைந்துவிட்டது.ஆகவே ஒழுக்கம் இல்லை என்றால் எதுவும் நிலைக்காது அனைத்தும் இழக்கும் நிலை வரும். 
சுயநலமின்றி சுய மரியாதை இன்றி தூய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் அனைவரையும் அவ்வாறு உருவாக்க பாடுபட வேண்டும். சுய மற்ற நிலை வேண்டும். சுல்தான் ஒருவனது அந்தப்புரத்தில் நிறைய பெண்கள் இருந்தனர். அவனது அந்தப்புரத்தில் பணிபுரிய ஆண்கள் யாரையும் அமர்த்தாமல் திருநங்கைகளை மட்டுமே பணியில் அமர்த்தினார். ஒரு சமயம் ஒருவர் அனாதையாக கிடந்த ஒரு ஆண் குழந்தையை கொண்டு வந்து அந்த சுல்தானிடம் கொடுக்க அதை அந்த சுல்தான் அந்தப்புரத்தில் வைத்து வளர்க்க கொடுத்துவிட்டார் .அந்தக் குழந்தையும் வளர்ந்து வாலிபனாக உயர்ந்து விட்டான். ஒரு நாள் அந்த அந்தப்புரத்தில் ஒரு பாம்பு நுழைந்து விட்டது உடனே அங்குள்ள அனைவரும் பாம்பு என்று அலறிக்கொண்டு யாராவது ஆண்கள் இருந்தால் வாருங்கள் வாருங்கள் என்று ஓடினர் அந்தக் கூட்டத்தோடு அந்த வாலிபனும் யாராவது ஆண்கள் வாருங்கள் வாருங்கள் என்று கூறிக்கொண்டு ஓடினான். இருந்த சூழ்நிலை காரணமாக தான் யார் என்பதையே அந்த ஆண் மறந்துவிட்டான். இதுதான் சுய மறதி என்பது இந்த சுயமரியாதையற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஹிந்து சமுதாயத்திற்கு தாம் யார் என்று உணரச் செய்ய வேண்டும். நாம் வெறும் தனி மனிதர் அல்ல நமக்குள் இறைவன் இருக்கிறான். அந்த இறைவனே உலகம் முழுக்க அனைத்து உயிர்களும் பரவி இருக்கிறான். ஆகவே அனைத்திற்கும் அன்பு பாராட்டி பணிபுரிய வேண்டும். இந்த எண்ணம் நம்முள் தவமாக இருக்க வேண்டும். நல்லவர்களை ஒன்றிணைத்து செயல்பட வேண்டும். 
இந்த சாதனா கட்டிடம் சமுதாய மாற்றத்திற்கான கருவியாக அமைய வேண்டும். நல்ல விஷயங்கள் சமுதாயத்தில் நடக்க வேண்டும். உலகம் முழுமையும் ஒன்றென நாம் உணர வேண்டும். உண்மை தூய்மை தவம் ஆகியவை இருந்தால் சக்தி பெருகும். அந்த சக்தியை கொண்டு சமுதாயத்தின் மீது அன்பு பாராட்டி மாற்றத்தை உருவாக்க வேண்டும். அந்த மாற்றத்தின் மூலமாக பாரதம் உலகின் குருவாக உயர வேண்டும், என்று தமது உரையில் பரமபூஜனீய சர்சங்கசாலக் கூறினார். 

காரியாலய அர்ப்பணிப்பு விழா துவக்கத்தில் வேத கோஷம் எழுப்பப்பட்டது. அதன்பிறகு நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்று மேடையில் வீற்றிருந்த அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்து சாதனா பற்றிய குறிப்புகளை சாதனா அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரும் நமது ஷேத்ர காரியமாகும் ஆன ஸ்ரீ ராஜேந்திரன் ஜி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பிறகு விஸ்வ ஸம்வாத் கேந்திரம் - தென் தமிழகம் தனது இணையதளத்தை பரமபூஜனீய சர்சங்கசாலக் அவர்களது திருக்கரத்தால் துவக்கப்பட்டது. பிறகு காரியாலய கட்டிடம் நிர்மாணிக்க பணிபுரிந்த ஆர்க்கிடெக்ட் ஸ்ரீ ரமணி சங்கர் அவர்கள் மரியாதை செய்யப்பட்டார். கூடவே சைட் இன்ஜினியர் செந்தில் அவர்களும், உள்ளூர் ஒப்பந்ததாரர் திரு முருகானந்தம் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர். 

திருச்சியில் உய்யகொண்டான் கால்வாயை அதன் கரைகளை தூய்மைப்பணி மேற்கொண்ட “சிட்டிசன் பார் உய்யகொண்டான்” என்ற அமைப்பைச் சேர்ந்த மனோஜ் தர்மர் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு காலை காலை வேலையில் சுடுதண்ணீரும் கஞ்சியும் மற்றும் பொங்கல் வழங்கி அதேபோல் மதிய வேளையில் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு கலவை சாதம் தயிர் சாதம் ஆகவே வழங்கி சேவை புரிந்து வரும் “ரங்கராஜ் தேசிய அறக்கட்டளையை” சார்ந்த திரு ரவீந்தர் குமார் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கிராம கோவில் குளத்தை தூர்வாரி அந்தப் பகுதியில் நீராதாரம் பெருக நிலத்தடி நீர் பெருக ஸ்வயம் சேவகர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக பணிபுரிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார ஸ்வயம் சேவகர்கள் சார்பாக ஸ்ரீ மாரிச்சாமி அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். 

மேலும் நிகழ்ச்சியில் ராமகிருஷ்ண தபோவனம் சார்பாக அதன் செயலாளர் தவத்திரு சத்யானந்த மகராஜ் அவர்கள் ஆசியுரை வழங்கினார்.அப்போது மேல்கோட்டை ஜீயர் சுவாமிகளும் மன்னார்குடி ஜீயர் ஸ்வாமிகள் கோவை காமாட்சிபுரி ஆதீனம் மேடையில் உடனிருந்து ஆசீர்வதித்தனர். சாதனா அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீ அரங்க வரதராஜன் அவர்கள் மகிழ்வுரை வழங்க ஐக்கிய மந்திரத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

Post a Comment

0 Comments