SETU - 4

நாக்பூர் (மகாராஷ்ட்ரா), டிசம்பர் 6
அமைச்சர் சுஷ்மா பெருமிதம்: “நான் ஒரு சேவிகை”

பாரத நாடுநெடுக 82 ஆண்டுகளாக ஹிந்து மகளிரை ஒருங்கிணைtத்து வரும் ராஷ்ட்ர சேவிகா சமிதி அமைப்பின் ஒரு சேவிகை நான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். பெண்ணுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டங்களை அமல் படுத்துவதன் மூலம் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு சமிதி சமிதி நிறுவனர் லட்சுமிபாய் கேள்கர் அவர்களின் கனவை நனவாக்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பேட்டீ ப்ச்சாவ், உஜ்வலா போன்ற திட்டங்களை அவர் சுட்டிக் காட்டினார். மவுசி என்று அழைக்கப்படும் லட்சுமிபாய் கேள்கரின் நாற்பதாவது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் கலந்து கலந்துகொள்ள நாக்பூர் சென்றிருந்த போது அவர் இவ்வாறு கூறினார். பல்வேறு நெருக்கடி சிக்கி இருந்த 2,03,666வெளிநாடு வாழ் இந்தியர்களை தனது வெளியுறவுத்துறை மீட்டு தாயக்ம் திரும்ப உதவியது என்று அமைச்சர் சுஷ்மா சொன்னார். நிகழ்ச்சிக்கு முன்னதாக சமிதியின் அகில பாரத தலைவியார் பிரமிளா மேடேயை அவர் சந்தித்தார் நாக்பூரில் செயல்படும் ஸ்ரீ சக்தி பீடம் என்ற மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆற்றும் அரும்பணிகளை அமைச்சர் பாராட்டினார்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் சமிதி மகளிர் முயற்சியால் மங்கையர் மங்கலம் என்ற தொண்டு ‘நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பாரத மக்கள் வசிக்கும் பல்வேறு நாடுகளிலும் ஹிந்து மகளிரை இணைக்கும் பணியை சமிதி ஊக்குவிக்கிறது.

திருவனந்தபுரம் (கேரளா), டிசம்பர் 6
வருகிறது கேரளத்தின் நாலாவது சர்வதேச விமான நிலையம்!

வருகிற டிசம்பர் 9 க்குப் பிறகு ’தேசத்திலேயே மிக அதிகமான சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட மாநிலம் எத” என்று கேட்டால் 4 சர்வதேச விமான நிலையங்களை கொண்ட கேரளா என்பார்கள். அன்றுதான் கண்ணூர் சர்வதேச விமான நிலையம் செயல்படத் தொடங்குகிறது.. உலகம் முழுவதிலும் 27 லட்சம் கேரள மக்கள் வசிக்கிறார்கள். மாநிலத்தில் ஏற்கனவே உள்ள 3 சர்வதேச விமான நிலையங்களுக்கு (திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி) ஒன்றே முக்கால் கோடி பயணிகள் வந்து போகிறார்கள். புதிதாக வரும் கண்ணூர் விமான நிலையம் கூடுதலாக 25 சதவீத பயணிகளை கணக்கில் சேர்க்கும் என்கிறார்கள். 2019ல் 2 கோடி பயணிகள் கேரளத்தின் விமான நிலையங்களைப் பயன்படுத்துவார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள அரன்மூல என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் 700 ஏக்கர் பரப்பில் வருவதாக இருந்த விமான நிலைய திட்டம் கும்மணம் ராஜசேகரன் (தற்போது மேகாலயா ஆளுநர்) உள்ளிட்ட சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. அது சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுத்தி இருக்கும் என்பதை மாநிலஅரசு ஒப்புக்கொண்டது.

பெங்களூரு (கர்நாடகா), டிசம்பர் 6
குழந்தைகளைப் பட்டினி போட்ட காங்கிரஸ் அரசு
அண்மையில் மங்களூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் புகழ்பெற்ற கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதுடன் கிடைத்த மொத்த தொகையையும் பைரப்பா கல்லடக்கா கிராமத்தில் நடைபெறும் ஸ்ரீராம வித்யா கேந்திரம் என்ற பள்ளிக்கு நன்கொடையாக வழங்கி விட்டார். 1980ல் ஆர் எஸ் எஸ் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் 3,500 கிராமப்புற மாணவ மாணவிகள் படிக்கிறார்கள் ஒழுக்கக் கல்வியும் பாரதப் பண்பாடும் பயிற்றுவிக்கப்படுவது இந்த பள்ளியின் சிறப்பு. இங்குள்ள ஸ்ரீராம் தொடக்கப்பள்ளி பண்டைக்கால குருகுல முறையில் நடைபெறுகிறது. பள்ளி விடுதியிலேயே குழந்தைகள் தங்கி கல்வி பயில்கிறார்கள். இந்தப் பள்ளியை தத்தெடுத்து, 3,500 மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு கொல்லூர் மூகாம்பிகை ஆலய நிர்வாகம் வழங்கி வந்தது.. 2013 ல் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்த்தும் இந்தப் பள்ளியின் பொறுப்பாளர் பிரபாகர பட் என்ற சமூக ஊழியர் மீது வன்மத்துடன் பல பொய் வழக்குகளை சுமத்தியது. எதுவும் நீதிமன்றத்தில் எடுபடாததால் 2017ல் மூகாம்பிகை கோயிலின் தத்தெடுக்கும் முறையை ரத்துச் செய்துவிட்டது. இது அரசின் மீது பரவலான வெறுப்பை ஏற்படுத்தியது. பைரப்பா போன்ற பிரமுகர்கள் உதவியால் கடுமையான நெருக்கடியிலிருந்து விடுபட்டு ஸ்ரீராமபிரானின் பெயரால் நடக்கும் இந்த பள்ளி தொடர்ந்து நடந்து வருகிறது. மதிய உணவுக்காக மாணவர்கள் விவசாயம் கற்றுக்கொண்டு பயிர் செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் தீர்மானித்து அதன்படி நாலாவது முதல் ஒன்பதாவது வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் விவசாயம் கற்றுக்கொண்டு மதிய உணவுக்காகப் பயிர் செய்து வருகிறார்கள்.

பதான்கோட் (பஞ்சாப்), டிசம்பர் 6
ட்ரோன் மர்ம்ம் நீங்கியதும் மக்கள் நிம்மதி

பதான்கோட் நகரின் தசரா மைதானத்தில் டிசம்பர் 4 அன்று பலரும் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அருகில் உள்ள ராவி நதிக்கரை ஓரமாக பறந்து வந்த ஒரு ட்ரோன், மைதானத்தில் வட்டமிட்டு மரம் ஒன்றில் சிக்கியது. எல்லோரும் வியப்புடன் பார்த்தார்கள். திடீரென்று ட்ரோனில் சிவப்பு - நீல விளக்கு வெளிச்சம் பளிச்சிடத் தொடங்கியதும் எல்லோருக்கும் பயம் ஏற்பட்டு. காவல் துறையை உஷார்படுத்தினார்கள். காவலர்கள் வந்து ட்ரோனைக் கைப்பற்றினார்கள். கடைசியில் அது ஒரு விளையாட்டு பொம்மை என்று தெரிய வந்தது. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும் தொடக்கத்தில் அது அண்டை நாட்டு உளவுக் கருவியோ என்று சந்தேகப்பட்டார்கள். அதற்கு காரணமும் இருந்தது அண்மையில் தான் அமிர்தசரஸ் நகரில் சீக்கிய வழிபாட்டுத் தலத்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்ட பரபரப்பு செய்தி வெளியாகி இருந்தது. குண்டு வெடிப்பு சம்பவம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ சதி என்று பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் குற்றம்சாட்டியிருந்தார். அது தவிர ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர்கள் பஞ்சாப் வழியாக ஊடுருவி நாசவேலை நடத்த டில்லி செல்தாகவும் தகவல் வெளியாகி இருந்தது.. தமிழக மக்களுக்கும் ட்ரோன் பரபரப்பு புதிது அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மெரினா கடற்கரையில் வெளி நாட்டவர் ஒருவர் ட்ரோன் பறக்கவிட்டுக் கொண்டிருந்ததை மக்கள் பார்த்து காவல்துறைக்கு தெரிவிக்கவே அவர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ட்ரோன் இயக்குவதற்கு முன் அனுமதி தேவை என்று எடுத்துச் சொல்லப்பட்டது. உறுப்பு தானம் நடந்ததும் உறுப்புகளை போக்குவரத்து நெரிசல் தாண்டி விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ட்ரோன் பயன்படுத்துவது பற்றிய செய்தி சமீபத்தில் வெளியாகி மக்களை கவர்ந்தது. 

Post a Comment

0 Comments