'Call for Justice' குழு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தில்லி கலவரங்களின் அறிக்கை சமர்ப்பிப்பு

"நீதிக்கானஅழைப்பு" 'Call for Justice' என்ற அரசு சார்பற்ற அமைப்பு (என்.ஜி.ஓ) தில்லி கலவரங்களின் உண்மை கண்டறியும் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அளித்தது.

வெறுப்பு பேச்சுக்களுக்கும், தவறான தகவல்களுக்கும் ஆம்ஆத்மி கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளேகாரணம் என்று சொல்கிறது.

புதுதில்லி: தில்லியில் உள்ள "நீதிக்கான அழைப்பு" 'Call for Justice' என்ற அரசு சார்பற்ற நிறுவனத்தால் அமைக்கப்பட்ட குழு, சமீபத்தில் வடகிழக்கு தில்லியில் சமீபத்தில் நடந்த கலவரங்கள் குறித்த உண்மைகளை மே 29, 2020 அன்று இந்திய அரசின் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை சமர்ப்பித்த குழுவில், உச்சநீதிமன்ற நீரஜ்ஆரோரா, தொழில் முனைவோர் நீராமிஷ்ரா மற்றும் 'நீதிக்கானஅழைப்பு' நிறுவனத்தின் அறங்காவலர்கள் சந்திராவாத்வா மற்றும் அங்கித்கோயல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

நீதிக்கான அழைப்பு நிறுவனம் கீழ்க்கண்ட பிரபலமானவர்களைக்கொண்ட ஒரு உண்மை கண்டறியும் குழுவை நியமித்தது:

1) நீதிபதி அம்பாதாஸ் ஜோஷி (மும்பைஉயர்நீதிமன்றம்ஓய்வு) தலைவர்
2) எம்.எல்.மீனா (ஐ.ஏ.எஸ்ஓய்வு) உறுப்பினர்
3) விவேக்தூபே (ஐ.பி.எஸ். ஓய்வு) உறுப்பினர்
4) டாக்டர்.டி.டி.தோக்ரா (எய்ம்ஸ்முன்னாள்இயக்குனர்) உறுப்பினர்
5) நீராமிஷ்ரா (தொழில்முனைவோர்) உறுப்பினர்
6) நீரஜ்ஆரோரா (வழக்கறிஞர்) செயலாளர் உறுப்பினர்

இந்த குழுவானது 29 பிப்ரவரி மற்று 1 மார்ச் ஆகிய நாட்களில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்கள், கண்ணால் கண்ட சாட்சிகள் ஆகியோரிடம் விசாரித்து அவர்களின் கருத்துக்களை பதிவு செய்தது. கள நிலவரங்களை ஆழமாக அலசி பின்னர் விவரமான அறிக்கையை தயாரித்தது. அந்த அறிக்கையில் டிசம்பர் 2019ல் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறியவுடனே நாடு முழுவதும் செயற்கையான எதிர்ப்புநிலை உருவாக்கப்பட்டது. பின்னர் சில மாதங்களுக்குப்பிறகு இந்திய குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக என்ற பெயரில் முன்பே திட்டமிட்ட வகையில் பெருமளவு கலவரங்கள் அடிப்படைவாத இயக்கங்களால் தூண்டப்பட்டன. அமெரிக்க அதிபர்கலந்து கொண்டஇருதரப்பு சந்திப்பு நடந்த சமயம் வடகிழக்கு தில்லியில் இந்த போராட்டங்கள் தூண்டப்பட்டு நடந்தன. சமூக அரசியலில் நீண்டநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த முத்தலாக், 370 வது சட்டப்பிரிவு மற்றும் ராமஜென்மபூமி ஆகியவை தீர்க்கப்பட்டதால் இந்திய நலனுக்கு எதிராகவும் இந்திய மக்களுக்கு எதிராகவும் வேலை செய்து கொண்டிருந்த சில அடிப்படைவாத குழுக்களுக்கு கோபத்தை மூட்டியது. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) இந்திய பிரஜைகளுக்கு, ஜாதி, மத இன அடிப்படையில் எந்தவிதத்திலும் தொந்தரவு தரவில்லை. எனவே சிஏஏ எதிர்ப்பு என்ற பெயரில் அடிப்படைவாத இயக்கங்களான பிஞ்ராதோட், ஜாமியா ஒருங்கிணைப்புகமிட்டி, ஜாமிய மிலியா இஸ்லாமியா அமைப்பின் முன்னாள் மாணவர் அமைப்பு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மற்றும் தேர்தலுக்குப்பின் மக்களின் வெறுப்பை சம்பாதித்த சிலஆம் ஆத்மி அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள விரும்பிய சிலர் எல்லோரும் ஒருங்கிணைந்து சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரை குறிவைத்து ஒருங்கிணைந்த வகையில் தவறான கருத்துக்களை பரப்பிவிட்டனர். இது முஸ்லீம் இனத்தவரை ஒருமூலைக்கு தள்ளியது. சதி திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த அடிப்படைவாத இயக்கங்கள் ஆள்பலம், நிதி ஆகியவற்றை திரட்டி வடகிழக்கு தில்லி முஸ்லீம்களை தூண்டி ஹிந்துக்களை தாக்க தூண்டியது. இதுவே கலவரத்தை தூண்ட காரணமாக அமைந்தது. ஹிந்து முஸ்லீம்களிடையே விரோதம் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு சிஏஏ எதிர்ப்பு என்றபோர்வையில் இந்த அடிப்படைவாத இயக்கங்கள் தவறான கருத்துக்களையும், விரோதமான பேச்சுக்களையும் பரவவிட்டன. இங்கு மக்கள் அதிகம் கல்வி அறிவு இல்லாதவர்களாகவும், வறுமையில் உழன்றவர்களாக இருந்தமையாலும் இவர்களிடையே இந்தக்குழுக்கள் புகுந்து சிறுசிறுகுழுக்களாக பிரிந்து மூளைச்சலவை செய்து, தங்களது நோக்கம் நிறைவேற திட்டமிட்டு செயல்பட்டன. இந்தகுழுக்கள் முஸ்லீம்களை துஷ்பிரயோகம் செய்து தங்களுக்காக உபயோகப்படுத்திக்கொண்டன. ஆனால் ஹிந்துக்கள் இந்த முஸ்லீம் அடிப்படைவாத குழுக்களின் தூண்டுதலால் நடந்ததாக்குதல்கள் பற்றி அறியாமல் இருந்தனர்.

வெறுப்புபேச்சுக்கள் மற்றும் தவறான பிரச்சாரங்களால் உணர்ச்சிகளை தூண்டி, இருவேறு சமுதாயத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்துவதில் கட்டுக்கதைகளை பரப்புவதில் மசூதிகளில் இமாம்கள் தினசரி கூட்டத்தில் மற்றும் ஆஜான் எனப்படும் ஒலிபெருக்கிகள் மூலம் குரல் கொடுக்கும் நிகழ்ச்சிகளில் ஒருநாளில் பலமுறை பரப்பபட்டன. முன்னேற்பாடான திட்டமிடலுடன் இந்த அடிப்படைவாத குழுக்கள் கற்கள் மிகஅதிகஅளவில் எறிதல், பெட்ரோல்குண்டுகள் வீசுதல், நாட்டு வெடிகுண்டுகள் வீசுதல், அமிலம் வீசுதல் மற்றும் கவண்எறிதல் போன்றவகையில் பிம் ராணுவம் என்ற அமைப்பின் உதவியுடன் கலவரத்தில் ஈடுபட்டன. 15 வயதிலிருந்து 35 வயது வரையிலான 7000த்துக்கும் மேலான இளைஞர்களை வெளியிலிருந்தும் அங்கேயே உள்ளவர்களையும் இணைத்து கலவரத்தில் ஈடுபடுத்தி ஒரு புலனாய்வுத்துறை அதிகாரி, இரண்டு தில்லி காவல்துறையினர் உட்பட 53 பேரின் உயிர்களை பலி வாங்கினர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதோடுகூட 92 வீடுகள், 57 கடைகள், 500 வாகனங்கள், 6 கிடங்குகள், 2 கல்விச்சாலைகள், 4 4 நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் சூறையாடப்பட்டு சுமார் 1000 கோடி வரையில் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டது. 718க்கும் மேற்பட்ட முதல்தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. கிட்டத்தட்ட 3400 நபர்கள் கைது செய்யப்பட்டனர்..

அந்தக் குழுவின் பரிந்துரைகள் கீழே கொடுக்கபட்டுள்ளன:

* உயிரிழந்தவர்கள் மற்றும் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு கால தாமதமின்றி, பாகுபாடின்றி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்
* இயல்பு நிலை திரும்பவும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேறாமல் தடுக்கவும் தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டும்.
* மின்னணு சாதன சாட்சிகளை மக்கள் மற்றும் தேசிய, சர்வதேச ஊடகங்கள் மூலம் சேமித்து குற்றம் இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும்.
* தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பியவர்களை அடையாளம் கண்டு தண்டனைக்குட்படுத்த வேண்டும்.
* கலவர வழக்குகளை அதற்காக நியமிக்கப்பட்ட நீதிமன்றங்களில் நடத்தப்பட வேண்டும்.
* காவல்துறையினரின் நுண்ணறிவுப் பிரிவு இவற்றை முன்னதாகவே கண்டறிந்திருக்க வேண்டும்.
* கலவரத்தின் பின்னணியில் உள்ள தீவிரவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம், வங்காள தேச குழுக்கள் ரோஹிங்கியாக்களின் தொடர்பை கண்டறிய வேண்டும்.
* இந்த கலவரத்திற்காக நிதி உதவி அளித்த நிறுவனங்கள்/ இயக்கங்கள்/ நபர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும்.
* மக்களிடம் சி ஏ ஏ பற்றிய தவறான அபிப்பிராயம் அகற்ற முயற்கி செய்ய வேண்டும்.
* சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்களை பரப்புவோரை தண்டனக்குட்படுத்த அரசு நிறுவனங்கள் இடைவிடாமல் கண்காணிக்க வேண்டும்.
* வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் தடுக்கப்பட வேண்டும்.
* வதந்திகள், வெறுப்பு பேச்சு போன்றவற்றை பரப்பும் இணையதளங்கள் கண்டுபிடிக்கப்பட்து தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும்.
* பி எஃப் ஐ, ஐ எஸ் ஐ, மற்றும் சர்வதேச குழுக்களின் தொடர்புகளின் அடிப்படையில் விசாரணை என்.ஐ.ஏ மட்டத்தில் நடத்தப்பட வேண்டும்.
* தேசத்தின் எந்த பகுதியிலும் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழா வண்ணம் பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 


Post a Comment

0 Comments