பாரதி சேவா சங்கம் சேவை பணிகள்

பாரதி சேவா சங்கம் சார்பாக கடந்த வாரம் திருவல்லிக்கேணி நகர் சேப்பாக்கம் பஸ்தி யில் உள்ள அசூதின்கான் தெரு சேவா பஸ்தியில் உள்ள 100 குடும்பங்களுக்கு 20 விதமான மளிகைசாமான்கள் அடங்கிய மளிகை பைகளை நமது சங்கத்தின் அகில பாரத சஹ ஷாரீரிக் ப்ரமுக் ஶ்ரீ ஜெகதீஷ் ப்ரசாத் ஜி வழங்கினார்.

அப்பகுதியைச்சேர்ந்த விநாயகர் குழுவினர் மற்றும் நமது சங்க கார்யகர்த்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்களை ஒருங்கிணைத்தார்கள்.இந்நிகழ்விற்கு இடமளித்த தேவிநவசக்தி பள்ளி உரிமையாளர் திருமதி சக்தீஸ்வரி உடன் இருந்தார்கள்.பாரதி சேவா சங்கம் சார்பாக கடந்த வாரம் நங்கநல்லூர் பகுதியில் உள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களின் 17 குடும்பங்களுக்கு மளிகைசாமான்கள் அடங்கிய மளிகை தொகுப்பை நமது சங்கத்தின் ப்ராந்த பிரசார் ப்ரமுக் ஸ்ரீ நரசிம்மன் ஜீ வழங்கினார்.


சென்னையில் ஊரடங்கு காலத்தில் பாரதி சேவா சங்கத்தின் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து விளக்க கையேடு பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (R&O) திரு மேகநாத ரெட்டி, IAS, அவர்களிடம் பாரதி சேவா சங்கத்தின் அறங்காவலர் திரு சுதர்ஸன் அவர்களால் கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. இந்த சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தனது மனதார பாராட்டுக்களை தெரிவித்து, தொடர் பணியில் ஈடுபடுமாறு துணை ஆணையாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஊரடங்கு காலத்தில் சென்னையில் தங்கியிருந்த வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக பாரதி சேவா சங்கத்தின் மூலமாக, 300 டி-சர்ட்டுகள், ஆலந்தூர் மண்டல அலுவலர் திரு. முருகன் அவர்களிடம், கடந்த வாரம் ஆர்.எஸ்.எஸ் சென்னை மாநகர செயலாளர் திரு. ராகவன் அவர்கள் வழங்கினார்.

ஓட்டேரி பகுதியில் வசிக்கும் திருநங்கைகளுக்கு பாரதி சேவா சங்கத்தின் மூலமாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை கடந்த வாரம் ஆர்.எஸ்.எஸ். சென்னை மாநகர அமைப்பாளர் திரு ஜெகதீசன் அவர்கள் வழங்கினார். மளிகை தொகுப்பு பெற்ற அனைவரும் பாரதி சேவா சங்கத்தின் பணியை மிகவும் பாராட்டினர். குறிப்பாக, திருநங்கைகளுக்கு உதவி செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்கள்.

பாரதி சேவா சங்கத்தின் மூலம் பல்லவபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 70 நபர்களின் குடும்பங்களுக்கு  ரூ.1500 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை கடந்த வாரம் ஆர்.எஸ்.எஸ் மாநில மக்கள் தொடர்பாளர் திரு பிரகாஷ் ஜி அவர்கள் கலந்துக் கொண்டு வழங்கினார்கள்.

Post a Comment

0 Comments