தூத்துக்குடியில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஹோமியோபதி மருந்து வழங்கல்

தூத்துக்குடியில் ஆர்எஸ்எஸ் சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டது.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, தனசேகரன் நகர், விவிடி ரோடு ஆகிய பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் கரோனா தடுப்பு பணியாக பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆர்சனிக் ஆல்பம் 30 என்னும் ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் நகர செயலாளர் சண்முகவேல், ABGP நுகர்வோர் அமைப்பு தென் தமிழக இணைச் செயலாளர் சத்தியபாலன், ஆர்எஸ்எஸ் மாவட்டக்குழு உறுப்பினர் ராஜா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments