எல்லை பாதுகாக்கும் பணியில், வீரமரணம் அடைந்த பாரத ராணுவ வீரர்களுக்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் அஞ்சலி

                                                                       
ப. பூ சர்சங்கசாலக் மோகன்ஜி பாகவத் மற்றும் மா சர்கார்யவாஹ் பையாஜி ஜோஷிஜி அறிக்கை :
"நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் சுய மரியாதை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக, லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் எல்லை பாதுகாக்கும் பணியில், வீரமரணம் அடைந்த பாரத ராணுவ வீரர்களுக்கு, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் அஞ்சலி செலுத்துகிறது. நாட்டு மக்கள் சார்பாக, ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். சீன அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் இந்த ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை செயலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். நெருக்கடியான இந்த நேரத்தில், பாரதீயர்கள் அனைவரும் பாரத ராணுவத்துடனும் அரசாங்கத்துடனும் முழுமையாக ஒன்றுபட்டு நிற்கிறோம்."

Post a Comment

0 Comments