வீர சாவர்க்கரும் வீரத் தமிழ் மண்ணும்


நேற்று வீர விநாயக தாமோதர சாவர்க்கர் அவதரித்த நாள். அவர் முதல் சுதந்திர யுத்தம் 1857 என்ற நூலை எழுதி மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஊட்டினார். குறிப்பாக தமிழகத்தில் அந்த நூல் தமிழ் மக்களின் மனங்களில் கனன்று கொண்டிருந்த சுதந்திரத் தீயை பெரும் ஜுவாலையாக ஓங்கச் செய்தது. சாவர்க்கர் 1907 ல் வெளியிட்ட அந்த நூலின் சில பகுதிகளை தமிழகத்தில் சௌந்தரம் என்பவர்தமிழில் மொழியாக்கம் செய்தார். கர்னல் நீல் என்ற கொடூரமான வெள்ளைக்கார தளபதி பற்றி அதிலிருந்து தெரிந்து கொண்ட தமிழக மக்கள் கொதித்தார்கள். சென்னை மவுண்ட் ரோட்டில் (இன்று அண்ணா சாலை) அந்த கொடியவனுக்கு சிலை இருந்தது. அதை நீக்க வேண்டும் என்று மக்கள் 1927ல் சத்யாகிரகம் செய்தார்கள். இதில் கடலூர் அஞ்சலை போன்ற எளிய குடும்பப் பெண்கள்கூட கலந்துகொண்டார்கள். கைதானார்கள். 10 ஆண்டுகள் நீடித்த இந்த சத்யாகிரகம் 1937 ல் வெற்றி பெற்றது. நீல் சிலை அப்புறப்படுத்தப்பட்டு எழும்பூர் அருங்காட்சியக மூலையில் வைக்கப்பட்டது.


Post a Comment

0 Comments