மும்பை ஸ்வயம்சேவகர்கள் பெற்ற சமுதாய தரிசனம்!

கொரோனா இடர்ப்பாடு, ஏழைத் தொழிலாளர்கள், பிற மாநிலத்தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. உணவு, மருந்துகள், வீட்டு வாடகை இப்படி அனைத்து வித அன்றாட தேவைகளை சந்திப்பது மிகவும் சிரமமாக உள்ளது. வாகனப்போக்குவரத்துக்கு தடை இருப்பதால், பல நூறு கிலோ மீட்டர்கள் பிரயாணத்தை நடந்தே செல்வது என்று முடிவு செய்து தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர்.

அரசாங்கம், காவல்துறை சிறப்பாக செயல்பட்டாலும் பிரச்சினை மிகப்பெரியது என்பதால், குறை குற்றங்களை சொல்லிக்கொண்டிருக்காமல், கொரோனா எனும் அசுரனை எதிர்க்க, மும்பையை சேர்ந்த மருத்துவர் கிஷோர் ஜெயின், மருத்துவர் தேஷ்முக் ஆகிய இருவர், இன்னம் பிற மருத்துவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுடன் இணைந்து ஒரு இலவச மருத்துவ மையத்தை ஆரம்பித்தனர். மருத்துவ உதவியுடன் சேர்த்து, சிறு அளவிலான உணவுகள், பிஸ்கட் பொட்டலங்கள், குடிநீர் குவளைகளை ஒவ்வொரு தொழிலாளருக்கும் கொடுத்தனர்.

நடந்து செல்லும் தொழிலாளர்கள் எப்படியெல்லாம கஷ்டப்படுவர் என்பதனை சிந்தித்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் நாம் செய்வது மிக்ச்சிறிய அளவிலான தொண்டு கடல் அளவிலான சேவைப்பணியில் ஒரு துளி நீர் போல என்று நினைத்து தொடர்ந்து சேவை செய்தவர்களுக்கு, மக்களிடமிருந்து உணவு பொருட்கள், மருந்துகள் என ஆதரவுக்கரங்கள் நீண்டன. சிறிய சேவை மையம், சமுதாய சமையலறையாக வடிவெடுத்தது. மே1 அன்று ஆரம்பித்த இந்தப்பணி, தற்போது தினசரி 2000 பேருக்கு உணவு கொடுக்கும் மையமாக மாறியுள்ளது.

இந்த கொரோனா நிவாரண சேவைமையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் தொழிலாளர்களில் சொந்த ஊருக்கு புறப்பட முடிவுசெய்தவர்களில் பலர், தன்னார்வத்துடன் இப்படிபட்ட சேவை நடப்பதை பார்த்து, ஊருக்கு புறப்படும் முடிவை தள்ளி வைத்து, சேவைப்பணியில் இணைந்துள்ளனர். அதில் ஒரு தொழிலாளி, தான் ட்ரக் வண்டியில் சொந்த ஊருக்கு செல்ல வைத்திருந்த ரூ.500ஐ எடுத்து சேவைப்பணிக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு கொடுத்தார். தொழிலாளியாக, கஷ்டமான நிலையிலும் தான் வைத்திருந்த 500ரூபாய் பணத்தை சேவைக்காக கொடுத்ததை கண்ட சேவை மைய நிர்வாகிகள், அந்தப்பணத்தை வாங்க அன்புடன் மறுத்தனர். இருப்பினும் அந்தத் தொழிலாளி, தான் கொடுக்கும் பணத்தை ஏற்கவேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தவே, ரூபாய் 200மட்டும் பெற்றுக்கொண்டனர். இந்த சம்பவம், அந்த மையத்தில் சேவையாற்றும் அனைவருக்கும் பெரிய ஊக்கத்தையும், கொரோனா சவாலை பாரத மக்கள் நிச்சயம் வென்றெடுப்பார்கள் எனும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.

Post a Comment

0 Comments