தில்லி சிறுபான்மை மக்கள் வாரிய தலைவர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஃபருல் இஸ்லாம் கான் மிரட்டல்

“இந்திய இஸ்லாமியர்கள் அரபு இஸ்லாமியர்களோடு இணைந்தால் இந்துக்கள் மிகப்பெரிய சுனாமியை சந்திக்க நேரிடும" என்று மிரட்டல் விடுத்திருக்கிறார் , தில்லி சிறுபான்மை மக்கள் வாரிய தலைவர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஃபருல் இஸ்லாம் கான்.

இன்று முகநூலில் தனது பதிவில் இஸ்லாம் கான் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பதிவை இனக்கலவரத்தைத் தூண்டும் விதமாக பதிவிட்டிருக்கிறார். "இந்திய முஸ்லீம்களுக்கு துணையாக" நின்றமைக்கு நன்றி என்று குவைத் அரசுக்கு சொல்வதாக பதிவிட்டுள்ளார். தனது பதிவில் ஹிந்துக்களை "ஹிந்துத்துவ வெறியர்கள்" என்று பதிவிட்டு, மேற்கு ஆசியாவில் சமூக ஊடகங்களில் வரும் பொய் பிரச்சாரங்களினால் ஹிந்துக்களின் மீது உருவாகும் வெறுப்புணர்சியை பற்றித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

இஸ்லாம் கான், தனது பதிவில் கடந்த சில நூற்றாண்டுகளாக இஸ்லாமியத்துக்காக உழைக்கும் இந்திய முஸ்லீம்கள் மீது அரேபிய முஸ்லீம்களுக்கு பெருமதிப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் வேளையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாகுதல்கள் நிலவுவதாக குவைத் கவலை தெரிவித்ததாக செய்தி வந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் , இந்த பதிவு வந்துள்ளது. மேலும் அவர் “ இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதால் இங்கு இஸ்லாமியர்களுக்கு துன்பம் இழைப்பதை பற்றி கவலைப்பட மாட்டார்கள் என்று ஹிந்துத்துவ வெறியர்கள் கணக்கிட்டுள்ளனர்” என்று வெறியை தூண்டும் விதமாக கூறியுள்ளார்.

இந்திய முஸ்லீம்கள் இஸ்லாமிய பாரம்பரிய‌ கலாச்சார, நாகரீகத்திற்கு தங்களது பங்களிப்பை தந்துள்ளதால் அரபு நாட்டு முஸ்லீம்களிடையே பெருமதிப்பைப் பெற்றுள்ளனர் என்பதை இந்திய ஹிந்துத்துவ மூடர்கள் மறந்து விட்டனர் என்றும், இஸ்லாமிய அடிப்படைவாதியும், தீவிரவாத ஆதரவாளரான ஜாகிர் நாயக்கை அரபி மற்றும் முஸ்லீம் நாட்டு மக்களின் வீட்டுப்பிள்ளை என்று புகழ் பாடியுள்ளார்.

இந்திய முஸ்லீம்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், படுகொலைகள் வெறுப்பு பிரச்சாரங்கள் பற்றி அரபு முஸ்லீம்களிடம் புகார் தெரிவிக்க இன்னமும் முடிவெடுக்கவில்லை. அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டால் மிகப்பெரிய சரிவை இந்து வெறியர்கள் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையோடு தனது கட்டுரையை முடிக்கிறார்.

ஆனால் உண்மையில் குவைத் சொன்னது என்ன?

கேரளாவை இருப்பிடமாகக் கொண்ட இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐ எஸ் ஐ எஸ்ஸின் துணையோடு, இந்திய அரசாங்கத்தின் மீதான வெறுப்பை மேற்கு ஆசியாவில் விதைத்தது ஹிந்து மக்களின் மீதான பயத்தை அரபு நாடுகளில் உருவாக்கின. கோவிட் 19 இந்தியாவில் பரவ தப்ளிக் இ ஜமாத் காரணமாயிற்று என்று குறை கூறியதை குறிப்பிட்டன. இந்த பிரச்சாரத்துக்கு குவைத்தின் அமைச்சரவையின் முன்னாள் காரியதரிசியின் பழைய அறிக்கையை சமூக ஊடகங்களில் பரவ விட்டன. அவரும், இந்திய முஸ்லீம்கள் பற்றி பாகிஸ்தானின் கூற்றை அப்படியே கிளிப்பிள்ளை போல கூறியிருந்தார். 

எப்படியிருந்த போதிலும், சில நாட்களிலேயே, இந்தியாவுக்கு எதிராக‌ அதனை எதிர்க்கும் நாடுகளின் சதியால் பரப்பபடும் சமூக ஊடக பதிவுகளை ஆதரிப்பதில்லை என்ற சவூதி அரேபியா, ஓமன் மற்றும் கத்தார் நாடுகளுடன் குவைத்தும் சேர்ந்து கொண்டது.

இந்தியாவின் உள் விவகாரங்களில் அயல் நாட்டினரை தலையிட அழைக்கும் செயலுக்காக ஜஃபருல் இஸ்லாம் கானின் செயலை பிஜேபியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நளின் கோஹ்லி கடுமையாகச் சாடினார். மேலும் அவரின் பேச்சுக்களுக்கு தில்லி அரசாங்கத்தின் நிலை என்ன என்று விளக்கம் கேட்டுள்ளார். அதோடு இந்தியாவின் பெருமதிப்பிற்குரிய முஸ்லீம்களின் பெயரோடு ஜாகிர் நாயக்கின் பெயரை உச்சரித்ததற்காக தில்லி சிறுபான்மை குழுவை கடுமையாக சாடினார்.

இந்தியாவின் பெயருக்கு அரபு உலகில் களங்கம் விளைவிக்கும் இந்த பதிவிற்காக பிஜேபியின் செய்தித் தொடர்பாளர் சோன்கர் சாஸ்த்திரி, ஜஃப‌ருல் இஸ்லாமை குறை கூறினார். மேலும் அவரை சிறுபான்மை வாரியத்திலிருந்து தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் நீக்க வேண்டும் என கூறியுள்ளார். 

Source: Organiser

தமிழில் – அருள்Post a Comment

0 Comments