நல்ல செய்தி - 10


பிரதமசேவகரின் உரை தந்த ஊக்கத்தில், ஆக்கப்பூர்வமான சேவை செய்த சாயாராணி
ஒடிஸா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்த சாயாராணி சாஹு எனும் விவசாயப்பெண்மணி தனது நிலத்தில் விளைந்த 15,000 கிலோ காய்கறிகளை எடுத்துக் கொண்டு பத்ரக் மாவட்டத்திலுள்ள, குருடா கிராமத்தை சுற்றியுள்ள 20 கிராமங்களில் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளார். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சாயாராணி சாஹு. தனது நான்கு பிள்ளைகளையும் நன்கு படிக்கவைத்து வருகிறார். அவரது ஒரு மகன் ஆய்வு (டாக்டரேட் பட்டம் பெற) படித்துகொண்டிருக்கிறார் என்றால் பாருங்களேன்! அது மட்டுமில்லாமல், கஷடப்படுகிறவர்களுக்கு உதவுவது அவருக்கு மனதுக்குப் பிடித்த வேலை. இந்தப்பணியில் அவரது கணவர் சர்பேஸ்வர சாஹுவும் சாயாராணிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

30 வருஷமாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சரபேஸ்வர சாஹு குடும்பத்தினர், வீட்டுத் தொழுவத்திலுள்ள 20 பசுக்கள் தினசரி தரும் பாலை, கொரோனா இடர்ப்பாடு நீக்கும் பணிசெய்யும் தன்னார்வலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு கொடுத்துவருகிறார்கள்.

இந்த கிராமாந்தரப் பெண்மணியின் செயலை மேனாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் லக்ஷ்மண், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரதாப் சாரங்கி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் ஏழைகளுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்திருந்த பிரதமர் மோடியின் பேச்சு, ஏழைகளின் கஷ்டம் நீங்க தன்பங்குக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதலை தந்ததாக தெரிவிக்கிறார் இந்த சாயாராணி. இல்லை, இல்லை, பிறர் கஷ்டம் காணச் சகியாராணி.

Post a Comment

0 Comments