ஆர்.எஸ்.எஸ் அன்பரிடம் அண்ணல் மனம் திறந்த போது...

பாரத ரத்னா டாக்டர் பி ஆர். அம்பேத்கர் தனது ஏராளமான ஆதரவாளர்களுடன் புத்த மதம் தழுவ இருந்த வேளை. ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் தத்தோபந்த் டெங்கடி அம்பேத்கரை சந்தித்தார். பேசிக் கொண்டிருக்கும் போது அம்பேத்கர் சொன்னார்: "வெகு காலத்திற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட என் சமூகத்தார் தலைநிமிர்கிறார்கள். இவர்களை கம்யூனிஸ்டுகள் தவறாக வழிநடத்திக் கொண்டுபோய் தங்கள் நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்வதை நான் விரும்பவில்லை. மற்ற ஹிந்து ஜாதியினருக்கும் கம்யூனிசத்திற்கும் இடையே தடுப்பாக நிற்கிறார் கோல்வல்கர். அதுபோல எனது பட்டியல் சமூக அன்பர்களுக்கும் கம்யூனிசத்திற்கு இடையே தடுப்பாக நான் நிற்கிறேன். என் வாழ்நாளிலேயே இவர்களுக்கு நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் எனவே புத்த மதம் தழுவுகிறோம்". (அம்பேத்கர் பற்றி டெங்கடி எழுதிய நூலிலிருந்து). 

தகவல்: சீர்மரபினர்-நாடோடிகள் நல கமிஷன் சேர்மன் பி.ஆர்.இதாதே.

Post a Comment

0 Comments