SETU-8

ராம்லீலா மைதானம்-புதுடில்லி (டில்லி), டிசம்பர் 10
“காத்திருந்தோம், நம் பொறுமைக்கு எல்லை உண்டு”: ஆர்.எஸ்.எஸ்
நாடு முழுவதிலிருந்தும் 1992 ஆம் ஆண்டு வந்திருந்த ராம பக்த கரசேவகர்கள் தங்கள் சக்தியையும் ஆற்றலையும் காட்டி அன்னிய ஆக்கிரமிப்பாளனின் அந்த அவமானச் சின்னத்தை அகற்றினார்கள். ஆனால் பணி அரைகுறையாக நிற்கிறது. ராமபிரான் அங்கே ஒரு கூடாரத்தில் குடியிருக்க வேண்டியிருக்கிறதே என்றுதரிசிக்கப் போகும் அனைவருக்கும் மனதில் வேதனை ஏற்படுகிறது. அண்மையில் அயோத்தி சென்று ராமபிரானை தரிசித்து வந்தேன். நாமெல்லாம் போற்றித் துதித்து வணங்கும் தெய்வம் எத்தனை காலம்தான் இப்படி கூடார வாசியாக இருக்க வேண்டுமோ என்ற பரிதவிப்பு ஏற்படுகிறது. ராமபிரான் கூடாரத்தில்!அதை ராம பக்தர்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? இன்று நாடு முழுவதிலுமிருந்து இளைஞர்கள்-ராமபக்தர்கள் ராமனை பிரம்மாண்டமான ராமர் கோயிலில் தரிசிக்க விரும்புகிறார்கள். ராமனுக்கு கூடாரவாச காலகட்டம் முடிவடையப் போகிறது. ஹிந்து சக்தி விசையுடன் உந்தித் தள்ளி, கோவில் கட்டும் பணி தொடங்கியாக வேண்டும். ராமர் கோயிலுக்காக நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான பேரணிகள் நடைபெறுகின்றன. அவற்றில் எழுப்பப்படுகின்ற “ஜெய் ஸ்ரீராம்" என்ற முழக்கம் நீதிமன்றத்தை எட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நீதிமன்றம் பொருத்தமான திசையில் அடிவெடுத்து வைக்கும் என்று நம்புகிறோம். எத்தனையோ ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தாயிற்று. நீதிமன்றத்தை மதிப்பதால் நாம் இதுவரை பொறுத்திருந்தோம். ஆனால் காத்திருந்து காத்திருந்து நம் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று தோன்றிவிட்டது. இப்போது உள்ள ஒரே வழி துறவிப் பெருமக்கள் அனைவரும் சொன்னது போல அரசு சட்டம் இயற்றி எல்லாவித தடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும். இது தான் அனைவரின் எதிர்பார்ப்பு.(டிசம்பர் 9 அன்று டில்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் ராமபக்தர்கள் பேரணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி நிகழ்த்திய பேருரையிலிருந்து).

பங்களூரு (கர்நாடகா), டிசம்பர் 10
ஐயப்பமார் கையிலெடுக்க சில அறிவாயுதங்கள்
ஒரு கொடிய அசுரத்தன்மையை வதம் செய்வதற்காக வந்த அவதாரம் சபரிமலை தெய்வம் ஐயப்ப சுவாமி. இது சபரிமலை வழிபாடு பற்றிய பக்தர்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கை உள்ளவர்கள் பக்தியுடன் சபரிமலைக்கு மாலை போட்டுக் கொண்டு விரதம் இருந்து செல்கிறார்கள். போராளி எவருக்கும் அங்கே இடம் கிடையாது. பக்தர்கள் நம்பும் புராணங்களின் படி ஐயப்பன் தவம் செய்ய அடர்ந்த காட்டுக்குள் செல்கிறார். மக்களும் அவருடன் செல்ல ஆசைப்படுகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஐயப்பன் சில விரதங்களை விதித்து அதை கடைப்பிடிப்பவர்கள் வரலாம் என்று சொல்லிச் செல்கிறார். பிரம்மச்சரிய விரதம் அதில் மிக முக்கியமானது. இந்த விரதம் பல நூற்றாண்டுகளாக ஐயப்ப பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது. முன்பு பத்தூர் நடராஜர் விக்கிரகத்தை இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரும் வழக்கில் ’நடராஜர் சட்டம் ஏற்கும் நபர்’ என்று தீர்ப்பு வந்த்து. ராம ஜென்மபூமி குழந்தை ராமருக்கு சொந்தம் என்று பைஜாபாத் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. சபரிமலை குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தக் கருத்தை அடித்து தள்ளிவிடுகிறது. எனவே இது சபரிமலையை மட்டும் அல்லாமல் எல்லா இந்துக் கோயில்களையும் பாதிக்கும். ஐரோப்பிய ஆபிரகாமிய மதங்கள் போல அல்லாமல் இந்து மதத்தில் எண்ணற்ற விதவிதமான சடங்குகளும் சம்பிரதாயங்களும் உண்டு. சபரிமலை ஐயப்ப பக்தி, சாதி சமய மொழி வேறுபாடு இல்லாமல் மக்களை ஒன்றுபடுத்தி இருப்பது எத்தனையோ ஆண்டுகளாக சகஜமாக உருவான நல்லிணக்கம் நிறைந்த சூழ்நிலை. பினராயி விஜயனின் அரசு இந்த நல்லிணக்கத்தைத்தான் அழிக்க முயற்சிக்கிறது. சபரிமலை பூஜை முறை சபரிமலைக் கோயிலை நிர்வகிக்கும் குழுவினர் கடைபிடிக்கும் கேரள ஆகம மரபு. ஆண்டுதோறும் தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் ஐந்து கோடி பக்தர்கள் சபரிமலை வந்து பேதம் இல்லாமல் தரிசிக்கிறார்கள். சபரிமலை என்பது இவ்வாறு ஹிந்து ஒற்றுமைக்கான ஒரு சக்தி வாய்ந்த மையம். எனவே ஹிந்து விரோதிகளின் கண்ணை இது உறுத்துகிறது -- அண்மையில் சபரிமலை பாதுகாப்பு குழுவின் சார்பில் பெங்களூர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸின் அகில பாரத செயற்குழு உறுப்பினரும் பிரக்ஞா பிரவாக (சிந்தனையோட்டம்) அமைப்பாளருமான நந்தகுமார் நிகழ்த்திய பேருரையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு வலு சேர்க்கும் சிந்தனை துளிகள் இவை.

புதுடில்லி (டில்லி), டிசம்பர் 10
புது டில்லி கல்லூரியில் சம்ஸ்கிருத இதழியல் பட்டப் படிப்பு!
செய்திகளை வழங்கும் ஒரு இணைய தளத்தை புதுடில்லி ’இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்’ (இதழியல் கல்லூரி) மாணவ மாணவிகள் வடிவமைத்திருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? இந்தஇணைய தளத்தில் எல்லா செய்திகளும் சம்ஸ்கிருதத்தில் இருக்கும். அண்மையில் கல்லூரியின் 51 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இந்த இணைய தளத்தை துவக்கி வைத்தார். அத்துடன் அந்த கல்லூரியில் மலையாளம், மராட்டி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் இதழியல் பட்டப் படிப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். .கல்லூரியில் முதல் முறையாக சம்ஸ்கிருத இதழியல் படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது என்பது கேட்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள பிரதான சாலைக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயர் சூட்டினார். பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்துகையில் அவர் ஊடகம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.. “ஊரில் குற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் குற்றங்கள் மட்டுமே நடக்கின்றவா? எத்தனையோ நல்ல விஷயங்கள் நடக்கின்றன. மக்களுக்கு அதை எடுத்துச் சொல்வது ஊடகத்தின் கடமை அரசியலை எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் ஏச்சும் பேச்சும்தான் பரிமாறிக் கொள்கிறார்களா? விரும்பத்தக்க விஷயமாக யாரும் பேசுவதில்லையா? நாடாளுமன்றத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் விவாதிக்கப் படுகின்றன. அதையெல்லாம் செய்தியாக்க வேண்டும் என்று ஊடகங்களுக்கு தோன்றுவதில்லை. பொறுப்பான ஊடகமே ஜனநாயகத்தை வளர்க்க முடியும்.” இவ்வாறு சுமித்ரா மகாஜன் பேசினார்.

காசி (உத்தரப் பிரதேசம்), டிசம்பர் 10
மக்கள் பிரச்சனைகளுக்காகவே மாநிலத்தில் ஐந்து சிந்தனைக் கும்பமேளாக்கள் 
கும்பகோணம் மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் போது லட்சோப லட்சம் இந்துக்கள் ஒன்றுகூடுவார்கள். அதுபோல பிரயாகையில் நடக்கும் கும்பமேளாவிலும் இந்துக்கள் பக்தியுடன் கூடுவார்கள். அதற்கு முன், 2019ஆம் ஆண்டு கும்பமேளா வருகிறது. காசியில் சுற்றுச்சூழல் கும்பமேளா, லக்னோவில் இளைஞர் சக்தி கும்பமேளா, அயோத்தியில் சமூக நல்லிணக்க கும்பமேளா, பிரயாகையில் சமய கலாச்சார கும்பமேளா, பிருந்தாவனத்தில் தாய்மார்களுக்கான கும்பமேளா. காசியில் நடந்த சுற்றுச்சூழல் குறித்த சிந்தனை கும்பமேளாவில் 19 மாநிலங்களில் இருந்து 3,150 பேர் வந்திருந்தார்கள். இதில் மாநில அமைச்சர்கள், பல்வேறு உயர் கல்வி நிலையங்களின் பேராசிரியர்கள் சிந்தனையை தூண்டும் சிறப்புரை நிகழ்த்தினார்கள் ஆர் எஸ் எஸ் அகில பாரத இணை பொதுச் செயலர் சுரேஷ் சோனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இப்போது இந்த சிந்தனை கும்பமேளாக்கள்? விக்ஞான் பாரதி அமைப்பு செயலாளர் வினய் சஹஸ்ரபுத்தே இந்த சுற்றுசூழல் சிந்தனை கும்பமேளாவை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். இது மக்களின் அன்றாட பிரச்சனைகளை பற்றிய கும்பமேளா என்று அவர் கூறினார். பாரதம் சுற்றுசூழலை முற்காலத்தில் எப்படி கையாண்டது, இன்று எப்படி கையாள வேண்டும் என்பதை கும்ப மேளா ஆய்வு செய்தது என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments