SETU-7

ஸ்ரீநகர் (ஜம்மு-காஷ்மீர்), டிசம்பர் 9
370 ஐ ஆதரிப்போர் மீது வன்கொடுமை சட்டம் பாயுமா?

பாரத தேசம் முழுவதும் டிசம்பர் 6 அன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மகாநாயகனான டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை அனுஷ்டித்தது. ஆனால் ஜம்மு – காஷ்மீர் மாநில வால்மீகி (அருந்ததியர்) சமூக மக்கள் அறுபது ஆண்டுக்காலம் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஷேக் அப்துல்லா ஆட்சிக்காலத்தில் அந்த மாநிலத்தில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடந்தது அந்த வேளையில் பஞ்சாபிலிருந்து வால்மீகி மக்களை அவர் ஜம்மு-காஷ்மீர் அழைத்து வந்தார். மாநிலத்தின் குடியுரிமை தருவதாகவும் கூறி இருந்தார். தரவில்லை. அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவு, 35 ஏ சட்டப்பிரிவு இவற்றால் அங்கே ஒரு விபரீதம் நடக்கிறது வால்மீகி சமூகத்தினருக்கு அந்த மாநில அரசில் துப்புரவுத் தொழிலாளி வேலை மட்டுமே கிடைக்கும். அங்கு வசிக்கும் வால்மீகி சமூக இளைஞன் அல்லது யுவதி எங்காவது போய் படித்து முன்னேறி எம் பி ஏ அல்லது எம்பிபிஎஸ் பட்டம் பெற்று ஜம்மு-காஷ்மீர் திரும்பினாலும் அந்த மாநிலத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் - ஆனால் துப்புரவுத் தொழிலாளி வேலைக்கு மட்டும் தான்! இந்தக் கொடுமை பற்றி எந்த ஒரு தலித் பிரமுகரும் வாய் திறப்பதில்லை. அரசியல் சாசனத்தின் 370 பிரிவையும் அந்த 35 ஏ சட்டப் பிரிவையும் கை வைக்கக்கூடாது என்று என்று பேசுகிறவர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சமுதாயத்தினரை தொடர்ந்து கேவலப்படுத்த வேண்டும் என்று நினைப்பதாகத்தான் அர்த்தம்.

பட்னா (பிஹார்), டிசம்பர் 9
ராமாயணம் யாருக்கெல்லாம் வேண்டியிருக்கிறது பாருங்கள்!


“பரதனை அயோத்தி அரசனாக்கும் யோசனையை ஏற்று காடு சென்றான் அண்ணன் ராமன். அயோத்திக்கு அண்ணனை திரும்ப அழைத்து வர தம்பி பரதன் அண்ணனைத் தேடி காட்டுக்கு சென்றான். அந்த இராமாயண பாரதனிடம் இருந்து தம்பி தேஜஸ்வி பாடம் கற்றுக் கொள்வது நல்லது” என்று நவம்பர் மாதம் முழுவதும் குடும்பத்திலிருந்து பிரிந்து ஊர் ஊராக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் (ஆர்ஜேடி கட்சித் தலைவரும் முன்னாள் பிஹார் முதலமைச்சருமான) லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ பிரதாபை தம்பி தேஜஸ்வி தேடிப்போய் வீட்டுக்கு திரும்ப அழைத்துக் கொண்டு வரட்டும் என்று ஆர்ஜேடி கட்சிக்கு எதிர் பாசறையிலுள்ள ஜேடியு செய்தித் தொடர்பாளர் பாட்னாவில் அறிவுரை வழங்கினார். தேஜபிரதாப் விவகாரம் ஒன்றும் தேசிய பிரச்சனை அல்ல. தன் மனைவியை விவாக ரத்து செய்ய குடும்ப கோர்ட்டில் மனு செய்திருந்தார் தேஜபிரதாப். இது அம்மா ராப்ரிதேவி உள்பட குடும்பத்தார் யாருக்கும் பிடிக்கவில்லை. மனுவை வாபஸ் வாங்குமாறு வற்புறுத்தினார்கள். தேஜபிரதாப் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தன்னை மதச்சார்பற்ற பாசறையின் நாயகனாக காட்டிக் கொள்ளும் லாலு யாதவின் குடும்பத்திற்கு ராமாயண பரதனை பின்பற்றும்படி இன்னொரு மதசார்பற்ற நாயகனான பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியினர் உபதேசம் செய்திருப்பது ரசிக்கத்தக்கது!மும்பை (மகாராஷ்டிரா), டிசம்பர் 9
பழங்குடிகள் நலன் காக்க போராடும் பாரத பக்தர்கள்

பழங்குடிகள் எனப்படும் வனவாசி மக்களுக்காக நாடு நெடுக ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் பாடுபட்டுவரும் வனவாசி கல்யாண் ஆசிரமம் அமைப்பின் சாதனகளை விவரிக்கிறார் வனவாசி கல்யாண் ஆசிரம அகில பாரத அமைப்புச் செயலர் அதுல் ஜோக் :
ஆந்திரா - தெலுங்கானா
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு நடுவில் போலாவரம் என்ற  இடத்தில் ஒரு அணை கட்டுகிறார்கள். 1,70,000 பழங்குடி மக்கள் அங்கிருந்து இடம்பெயர வேண்டிய நிலை. வனவாசி கல்யாண் ஆசிரமம் அது குறித்து ஆய்வு நடத்தி விவரம்சேகரித்தபோது ஒரு விஷயம் தெரியவந்தது இடம்பெயருமாறு கூறப்பட்டபல பல பழங்குடி கிராமங்கள் பட்டியலிலேயே இல்லை. கல்யாண ஆசிரம ஊழியர்கள் ஆவணங்களையெல்லாம் அரசிடம் காட்டி இடம்பெயருமாறு கூறப்பட்ட மக்களின் இந்த ஊர்களையும் மறுவாழ்வுக்கான கிராமங்கள் செய்பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தி ஆர்பாட்டம் செய்தார்கள். இதையடுத்து 90 கிராமங்கள் மறுகுடியேற்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த மக்களின் மறுவாழ்வு குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் நமது ஊழியர்கள்.

அஸ்ஸாம்
கச்சார் மாவட்டத்தில் ஏராளமான வங்கதேச நபர்கள் பழங்குடி மக்களின் நிலங்களில் அடாவடியாக குடியேறினார்கள். எட்டு ஆண்டுகளுக்கு முன். அப்போதைய அரசு ஊடுருவல் காரர்களை ஊக்குவித்து வந்த நேரம். அங்கும் விரிவாக ஆய்வு நடத்தி ஆவணங்களை சேகரித்து அரசிடம் சமர்ப்பித்து பழங்குடிகளுக்கு அந்த நிலம் மறுபடியும் கிடைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம் விளைவாக முதல்முறையாக அசாம் மாநிலத்தில் 163 பிகா நிலத்தை மீட்டு பழங்குடி மக்களுக்கு கிடைக்கச் செய்தோம்.

மகாராஷ்டிரா
முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது குறிப்பிட்ட பழங்குடி மக்கள் பகுதியில் உதாரணமாக 100 பேர் என்று மக்கள் தொகை இருந்தது அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் அது ஆயிரம் பத்தாயிரம் நாற்பதாயிரம் என்று திடீர் வளர்ச்சி கண்டது அந்த வட்டாரத்தின் மொத்த மக்கள்தொகை ஒன்றும் அதிகரித்துவிடவில்லை ஆனால் இந்த பழங்குடி வகையினர் எண்ணிக்கை மட்டும் எவ்வளவு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது இப்படி பழங்குடியினர் அல்லாதவர்கள் பழங்குடியினரின் பெயரில் வேலைவாய்ப்பையும் மருத்துவ படிப்பு முதலிய விஷயங்களையும் தட்டிப் பறித்துக் கொள்கிறார்கள் அந்த போலி பழங்குடிகள் மாநில அரசு பணிகளிலேயே ஆயிரம் பேர் இருப்பதாக மாநில அரசு தெரிவிக்கிறது இதையும் கண்டறிந்து வனவாசி கல்யாண் ஆசிரமம் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தது.

புவனேஸ்வர் (ஒரிசா),  டிசம்பர் 9
மீண்டும் ஒரிசாவில் மதமாற்ற மோசடிகள்; மத்திய அரசு கண்டிப்பு

மத்திய அரசின் மகளிர்-சிறார் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி எழுதிய ஒரு கடிதம் ஒரிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு வந்துள்ளது. மாநிலத்தில் உள்ள எல்லா சிறார் காப்பகங்களையும் ஆய்வுக்கு உள்ளாக்க வேண்டும் என்று அக்கடிதம் வலியுறுத்துகிறது. இரு வாரங்களுக்கு முன் ஒரிசாவின் டெங்கனகல் மாவட்டத்தில் உள்ள பெல்திகிரி என்ற ஊரில் ஒரு என்ஜிஓ நடத்தும் சிறார் காப்பகத்தில் சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து மத்திய அமைச்சர் இந்தக் கடிதத்தை எழுதியதுடன் தனது துறை சார்ந்த விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். “அந்த என்ஜிஓ நடத்தும் சிறார் காப்பகங்களில் மதமாற்றம் நடப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது” என்று மேனகா காந்தி அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மாவட்டத் தலைமையகத்தில் இருந்து பத்தே கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த ஊரில் நடந்த சம்பவம் பற்றி தனக்கு தகவல் தெரியாது என்று மாவட்ட நிர்வாகம் கூறுவது வருத்தம் அளிக்கிறது என்றும் மத்திய அமைச்சர் சாடியுள்ளார். அந்த காப்பகங்கள் அரசு உரிமம் பெறாமல் நடக்கும் அக்கிரமத்தையும் மத்திய அமைச்சர் எடுத்துகாட்டியுள்ளார். (பிஜு ஜனதா கட்சி ஆளும்) மாநில அரசு பெண்களுக்கும் சிறார்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத் தவறி விட்டது என்பது மேனகா காந்தியின் குற்றச்சாட்டு. தவறிழைக்கும் காப்பகங்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதம் வலியுறுத்தியது. முன்னதாக பாஜக பிரமுகரும் மத்திய அமைச்சருமான அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரிசா மாநில சிறார் காப்பக முறைகேடுகளை ஒழிக்க மத்திய அரசின் தலையீட்டை கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எழுதியிருந்தார். அதையடுத்து இந்த நடவடிக்கை. மதமாற்றத்தை வெற்றிகரமாக தடுத்து நின்ற துறவி ஒருவர் படுகொலை செய்யபட்டதும் மதமாற்ற வந்த வெளிநாட்டுப் பாதிரி எரித்துக் கொல்லப்பட்டதும் அந்த மாநிலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments