SETU-11

ஹிந்து கோயில்களுக்கு புதிய தலைவலி: ட்ரோன் படப்பிடிப்பு
கோனார்க் (ஒடிசா), டிசம்பர் 14

இரண்டு ரஷ்ய சுற்றுப் பயணிகள் ஒரிசா மாநிலம் கோனார்க் திருத்தலத்தில் உள்ள 800 ஆண்டு பழமையான சூரியனார் கோயிலுக்கு மேலாக ட்ரோன் பறக்கச் செய்து வீடியோ எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் தொன்மையான அந்த கோயிலின் மேலே ஹெலிகாப்டர் பறப்பதற்கு தடை உள்ளதால் ட்ரோன்  பறக்கச் செய்துவீடியோ எடுப்பது தவறு   என்று தொல்லியல்துறை அதிகாரிகள் எச்சரித்தார்கள்.அந்த அந்நிய நாட்டவர்கள் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்கள் சம்பவம்   நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட  வேறொரு இதுபோல் பறக்கவிட்டு கோயில் கோயிலை படம்பிடித்துக் கோயிலை படம்பிடித்துக் கொண்டிருந்தார் உள்ளூர் பயணிகள் காவல் அவர் காதல் பதிவாகியிருந்த படங்கள் அழிக்கப்பட்ட பின் அவர் விடுவிக்கப்பட்டார் பார்க் சூரியன் கோயிலை நிர்மாணித்தவர் கங்க வம்சம் மன்னரான முதலாம் நரசிம்ம தேவர். முஸ்லிம்  படையெடுப்பாளர்களை போரில் தோற்கடித்து  பெற்றவெற்றியின் நினைவாக தன் இஷ்ட தெய்வமானசூரியனுக்கு  அவர் இந்த மாபெரும் ஆலயத்தை  எழுப்பினார், இது விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் புதல்வன் சம்பா நிர்மாணித்த கோயில் என்றும் கர்ண பரம்பரை கதை உண்டு.

வெள்ளிப் பனிமலையின் மீது உலாவிட அழைப்பு
 கேதார்நாத் (உத்தராகண்ட்), டிசம்பர் 14
இந்த வார மத்தியில் வடகிழக்கு பருவமழைக்காக சென்னை தவம் கிடந்த வேளையில், உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட திருத்தலங்களிலும் முசோரி, நைனிதால் உள்ளிட்ட சுற்றுலா மையங்களிலும் பல அங்குல கனத்துக்கு பனிமழை செய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. டிசம்பர் இறுதியில் விடுமுறையை கழிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள். அந்த நேரம் அவர்கள் கண்டு களிக்க எதிர்பார்ப்பது பனி மூடிய மலைச் சரிவுகளைத்தான்.  சுற்றுலாவை நம்பியுள்ள அந்த மாநிலத்தின் ஏராளமான மக்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு இது ஒரு காரணம். இன்னொரு உண்டு. உத்தராகண்ட்  நூறு  வருடங்களாக ஆப்பிள் சாகுபடிக்குப் பேர் போனது. ஆப்பிள் மரம் பல மணி நேரம் பனியால்  மூடப்பட்டிருந்தால் தான் ஆப்பிள் விளைச்சல் நல்லபடியாக இருக்கும். விவசாயிகள் லாபம் பார்க்கலாம்.  எனவே அந்த மாநிலம்  பனிப்பொழிவை கைகட்டி வாய்பொத்தி வரவேற்கிறது. பனி மழை பொழிந்து மெல்ல மெல்ல பனி பாளமாக இறுகியதும் குளிர் பூஜ்ஜியம் டிகிரி வரை அதிகரிக்கும். என்கிறது வானிலை அறிவிப்பு மையம். பனிச்சறுக்கு உள்ளிட்ட  சாகஸப் பொழுதுபோக்குகளுக்காக இமயமலை சாரல் நாடும் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த வெள்ளிப் போர்வை  ரத்தினக்  கம்பள வரவேற்பு போல.

ராஜஸ்தான இளைஞர் தொண்டுள்ளம்: ஏபிவிபி விருது அளித்து கௌரவிக்கிறது
ஜாலோர் (ராஜஸ்தான்), டிசம்பர் 14
அரசுப்பள்ளிகளில் புதுப்புது உத்திகளை அறிமுகப்படுத்தி மாணவ மாணவிகளின் தரத்தை உயர்த்தும் சமூகத் தொண்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள இளைஞர் ஜாலோர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் ஜோஷி.   உதாரணமாக,  சிறுமிகளை உடன் பயிலும் சிறுவர்கள் மதிக்க  வேண்டும் என்பதற்காக அப்பள்ளிகளில் கன்யா பூஜை முறையை அறிமுகப்படுத்தினர். மாநிலத்தின் பல பகுதிகளில் இது ஆர்வத்துடன் வரவேற்கப்படுகிறது. தேசத்தைப் பற்றி பள்ளி மாணவர்கள் நன்கு தெரிந்துகொண்டு தேசபக்தி வளர்த்துக் கொள்வதற்காக பாரத் தர்ஷன் என்ற பெயரில் புகைப்பட கண்காட்சிகள் நடத்தி வருகிறார் இவர். ஊருக்குள் நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்பதற்காகக் கிராமங்களில் ’சமரசத் தாய் சரஸ்வதி’   கோயில்களை ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் நிர்மாணித்து வருகிறார் சந்தீப்  ஜோஷி. இவரது பண்புப் பதிவு உத்திகளை ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் அமல்படுத்தி வருகின்றன. ராஜஸ்தானில் 65க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் சந்தீப் ஜோஷியின் ’புத்தகப் பை இல்லாத தினம்’ உள்ளிட்ட பண்பு மேம்பாட்டு திட்டங்களை ஏற்று  நடத்தி  வெற்றி கண்டுள்ளன. இந்த இளைஞரின் தொண்டுள்ளத்தைப் பாராட்டும் விதமாக தேசத்தின் மிகப் பெரிய மாணவர் இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)  இவருக்கு2018 க்கான ”யஷ்வந்த் ராவ் கேள்கர் இளைஞர் விருது’ வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சமூக சேவையில் ஈடுபடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏ பி வி பியின் சிற்பிகளில் ஒருவரான அமரர் யஷ்வந்த் ராவ் கேள்கர் நினைவாக 1991 முதல் இந்த விருது வழங்கி வருகிறது ஏபிவிபி.

புண்ணியத்துக்குப் புண்ணியம், பொருளாதாரத்துக்கு அனுகூலம்!
தர்மசாலா (ஹிமாச்சல் பிரதேசம்), டிசம்பர் 14
கம்யூனிஸ்டு சீனா திபெத்தை 1959 ல் கபளீகரம் செய்த்து. அப்போது  ஏராளமான திபெத்தியர்கள் வணக்கத்திற்குரிய புத்த மதத் துறவி தலாய் லாமா தலைமையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்கள். இங்கு  இருந்தபடி தற்காலிக திபெத் அரசு அமைத்துக் கொண்டார்கள். மீண்டும் திபெத் சென்று வாழும் கனவுடன் ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள தர்மசாலா என்ற ஊரில் வசித்து வருகிறார்கள்.   அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தலாய் லாமா   இங்கு  இருப்பதால் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் தர்மசாலா வந்து போகிறார்கள்.  இது மாநிலத்தின் பொருளாதார மேம்பாடு விஷயத்தில் கூட கைகொடுக்கிறது. பாரத அரசு தர்மசாலாவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தர்மசாலாவில் அந்த தற்காலிக திபெத் அரசின் நாடாளுமன்றம் அளித்த தேனீர் விருந்தில் கலந்து கொண்ட மாநில பாஜக அரசின் முதலமைச்சர் ஜெயராம் டாகுர், தர்மசாலாவை வணக்கத்துக்குரிய தலாய்லாமா தேர்ந்தெடுத்தது மாநிலம் செய்த புண்ணியம் என்று புகழ்ந்தார்.

Post a Comment

0 Comments