SETU-12

பசு பாதுகாப்பில் ஜார்க்கண்ட் முன்முயற்சிகள்
ராஞ்சி (ஜார்க்கண்ட்), டிசம்பர் 15
சுதேசி பசுக்களை வளர்த்தெடுக்க மக்களை ஊக்குவிப்பதற்காக ஜார்க்கண்ட் பாஜக அரசு 3,000 சுதேசி பசு  அபிவிருத்தி மையங்களை நிறுவி வருகிறது. அதே நேரத்தில் பசு கடத்தல் குற்றங்களை தடுப்பதற்காக வழிகாட்டு குறிப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தேசிய பிராணி நல வாரியத்திடம் மாநில அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகம் பேசியுள்ளது என்றும் ஒவ்வொரு கோசாலையையும் அரசிடம் பதிவு செய்து  கொள்ள வேண்டும் என்றும், அரசின் நிதி உதவியைப் பெறலாம்  என்றும்  மாநில  முதலமைச்சர் ரகுபர் தாஸ் அறிவித்தார். சாலைகளில்   திரிகிற பசுக்களுக்காக காஞ்ஜி கர் எனப்படும் காப்பகங்கள் நிறுவப்படும் என்றும் மேய்ச்சல் நிலம் குறைவது தடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான பசுக்கள் பங்களா தேஷுக்கு கடத்தப்படும் நிலையில் அப்படிப்பட்ட பசுக்களை காப்பாற்றி பாதுகாக்க மாநிலம் முழுவதும் 40 காப்பகங்கள் செயல் படுகின்றன அவற்றிற்கு அரசு வழங்கும் மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரட்டிப்பு ஆக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் பசுவதை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆகஸ்டில் ஜார்க்கண்டின் பல பகுதிகளில் பகிரங்கமாக பசு   வதை நடந்ததை அடுத்து  சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மீது கும்பல்கள் குண்டு வீசியும் கல்வீசியும் தாக்கிய செய்திகளை தைனிக் ஜாகரண் உள்ளிட்ட நாளிதழ்கள் பதிவு செய்தன. அதிவிரைவு காவல் படை உதவியுடன்  நிலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டி இருந்தது.

ஒன்பது பள்ளிகள் தொடங்கிய அகமது அலி என்ற பகீரதன்!
கரீம்கன்ஜ் (அசாம்), டிசம்பர் 15
சைக்கிள் ரிக் ஷா ஓட்டிப் பிழைக்க தன் கிராமத்திலிருந்து அசாமின் கரீம்கன்ஜ் நகருக்கு வந்த அகமது அலி, நகரில் பிள்ளைகள் பள்ளிக்கு போவதும் வருவதும் பார்த்து ஏங்கினர், தம்முடைய ஊரிலும் ஒரு பள்ளிக்கூடம் இருந்தால்  பள்ளி செல்வதற்கு சிறு குழந்தைகள் தொலைதூரம் நடந்து போய் வரவேண்டிய  சிரமம் இருக்காது அல்லவா என்று நினைத்தார். கிராமத்தில் பள்ளி தொடங்க என்ன செய்ய வேண்டும் என்று விசாரிக்கத் தொடங்கினார் நீயே சம்பாதித்துதான் நிதி திரட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் நிதி திரட்ட தொடங்கினார் கிராமத்தில் வயல் வேலையில் ஈடுபட்டார். இரவு நேரமும் வயலில் இறங்கி பாடுபட்டார். பள்ளிக்கூடத்திற்கு பணம் வேண்டுமே.  எப்படியோ  1976ல் பத்தர்கண்டி என்ற தன் ஊரில் பள்ளி தொடங்கிவிட்டார். அந்த பள்ளியை மதக் கல்வி தரும் மதரசா ஆக்கிவிடாமல் நவீன கல்வி தரும் நிலையமாக  இருக்கும்படிப் பார்த்துக்கொண்டார். ஆய்வு செய்ய அரசு அதிகாரி தொலைதூர கிராமத்திற்கு தன்னால் நடந்து வர இயலாது என்றார். அகமது அலி அவருக்கு யானை ஏற்பாடு செய்து ஊருக்கு வர வைத்து விட்டார்! பள்ளிக்கும் அனுமதி கிடைத்து விட்டது. அது நடுநிலைப் பள்ளி. அடுத்தடுத்து பல ஆண்டுகளில் உயர் நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளி என்று ஒன்பது பள்ளிக்கூடங்களை  அகமது அலி  தொடங்கி  விட்டார். இன்று கல்வித் துறை அதிகாரியாக உள்ள ஒருவர் அகமது அலியின் பள்ளி முன்னாள் மாணவர்! மாநில முதல் அமைச்சர் சர்பானந்த சோனோவால்  கல்லூரி   தொடங்க வேண்டும்  என்ற அகமது அலியின் கனவை நனவாக்க முன்வந்தார். அகமது அலியின் எல்லா பள்ளிகளிலும்  மாணவர்களை  விட மாணவிகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஊக்கம் தரும் இந்த அசாமின்   ரிக் ஷாக்காரர் பற்றி பிரதமர் நரேந்திர மோடி ”மனதின் குரல்’ (மன் கீ பாத்) ரேடியோ உரையில் குறிப்பிட்டதையடுத்து இவருக்கு ஆதரவு மேலும் அதிகரித்து வருகிறது.

சிக்கிமில் சமஸ்கிருதம் பேசக் கற்றுக் கொள்கிறார்கள்!
ராணீபுல் (சிக்கிம்), டிசம்பர் 15
“இந்திய மொழிகளுக்கு உயிர் போன்றது  சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தை வளர்ப்பது எல்லா இந்திய மொழிகளையும் வளர்ப்பதற்கு சமம்” என்று சிக்கிம் மாநில ஆளுநர் கங்கா பிரசாத் கூறினார். கிழக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள ராணீபுல் நகரில் சமஸ்கிருத பாரதி, விசுவ ஹிந்து பரிஷத், சின்மயா மிஷன் அமைப்புகள் இணைந்து நடத்திய பத்து நாள் சமஸ்கிருத உரையாடல் முகாமின் நிறைவு விழாவில் பேசுகையில் ஆளுநர் இவ்வாறு கூறினார். நவம்பர் 30 அன்று முகாம் நிறைவடைந்தது. “தொன்றுதொட்டு பாரதம் அனைத்து ஞானத்திற்கும் கேந்திரமாக விளங்கி வந்துள்ளது. கல்வி கற்க உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் மாணவர்கள் பாரதம் வந்தார்கள். அன்று பாரதம் உலக குருவாகப் போற்றப்பட்டது. சமஸ்கிருதம் ஞானத்தின் பொக்கிஷமாக விளங்குகிறது. நமது அடையாளம், நமது வரலாறு,  நமது கலாச்சாரம்,  சமஸ்கிருதத்தில் பொதிந்துள்ளது. சமஸ்கிருதம் தெரியாமல் பாரதத்தை அறிந்து கொள்ள முயற்சிப்பது வெறும் கையால் கல்லை உடைக்க முயற்சிப்பது  போன்றது. நமது ஞானச் செல்வத்துடன் நம்மை இணைப்பது சமஸ்கிருதம்” என்று கங்கா பிரசாத்  மேலும் பேசுகையில் கூறினார். சிக்கிம் மாநிலத்தின் ஆட்சி மொழி நேபாளி; அங்கு  திபேத்திய மொழியும் பேசப்படுவது உண்டு. சமஸ்கிருதத்தின் வரிவடிவமான தேவநாகரி லிபி தெரியாதவர்களும் கூட  எளிமையான சமஸ்கிருத உரையாடல் வடிவில்  சமஸ்கிருதம் கற்பிக்கும் உத்தியை  கையாண்டு கடந்த 40 ஆண்டுகளாக லட்சக்கணக்கான மக்கள் சமஸ்கிருதத்தில் பேசச் செய்துள்ளது சமஸ்கிருத பாரதி அமைப்பு. ஏராளமான வெளிநாடுகளிலும் பெரும் எண்ணிக்கையில் சமஸ்கிருதம் பேசுகிறவர்களை உருவாகியுள்ளது இந்த அமைப்பு.


ஆர்.எஸ்.எஸ் மீது பழி முயற்சி: தகர்த்தது தீர்ப்பு!
ஆரா (பிஹார்), டிசம்பர் 15
ஆராவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிகியா நகரில் ஒரு பெண்ணைத் தாக்கி உடையின்றி ஊர்வலமாக  இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் தொடர்பாக அண்மையில்   லாலு கட்சி பிரமுகர் கிஷோரி யாதவும் அவரது நான்கு கூட்டாளிகளும் ஆரா நீதிமன்றத்தால் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார்கள்.  மேலும் 14 பேருக்கு  இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.. சில மாதங்களுக்கு முன்  ரயில் தண்டவாளம் அருகே பிமலேஷ்  என்ற நபரின் சடலம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி அந்த நபரின் ஊர்க்காரர்கள் கும்பலாக வந்து கடைகளையும் வாகனங்களையும் தாக்கினார்கள். சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து ஒரு பெண்ணை கொடூரமாக அடித்து நிர்வாணமாக இழுத்துச் சென்றார்கள். சமூக வலைதளங்களில் இதன் வீடியோ பரவியது. விஷமிகள் அந்தப் பெண் தலித் கிறிஸ்தவர் என்றும் அவரை தாக்கியவர்கள் ஆர் எஸ் எஸ்காரர்கள் என்றும் பொய் செய்தி பரப்பினார்கள். அந்த பெண்  தலித் என்று  ஊடகங்கள் உறுதிப்படுத்தினாலும் இந்த சம்பவத்தில் ஆர் எஸ் எஸ் காரர்கள் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை உறுதி செய்யவில்லை. உண்மையிலேயே யார்  குற்றவாளி என்பதை இந்த நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.

Post a Comment

0 Comments