பறிபோகிறதா பவானி?

பறிபோகிறதா பவானி?


கோவை தக்ஷினா அறக்கட்டளை என்ற என்ஜிஓ ’நீருக்கு நன்றி’ என்று ஒரு நிகழ்ச்சியை 2019 ஜனவரி 6 அன்று பவானி கூடுதுறை சங்கமேஸ்வரில் ஏற்பாடு செய்துள்ளது. குருஜி மித்ர சிவா என்பவர் அதன் தலைவராம். அவர் பெயரிலான அழைப்பில் கிறிஸ்தவ நெடி தூக்கலாகவே உள்ளது. தேங்க்ஸ் கிவிங்காம். ஞானஸ்னானத்தில் பயன்படும் தண்ணீர் தந்ததற்கு நன்றியாம். இந்த அழைப்பில் இயேசு ’கங்கா ஆர்த்தி’ போன்ற ’மகா ஆரத்தி’ செய்வதாக ஒரு படம் வேறு. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரிக் ஃபெல்ஸன் என்பவர். இவர்முன்னாள் இந்திய விமானப் படை சார்ஜன்ட் என தனது முகநூலில் சுயவிவரம் தருகிறார். குறிப்பிட்டது போல். அரசு சாரா அமைப்பு இருந்தது. கடந்த ஆண்டு இந்த என்ஜிஓ கல்லணை அருகே ’நீருக்கு நன்றி’ நடத்தியிருக்கிறது. சினிமா இயக்குநர் கௌதமன், நடிகர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, நடிகர் தாமு என கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் நிகழ்ச்சியைப் பரிந்துரை செய்கிறார்களாம். கிறிஸ்தவர்கள் தூண்டுதலால் தாமிரபரணி புஷ்கரத்தின் போது அனைத்து மதங்களுக்கும் நீர் ஆதாரம் பொது என்பதால் எந்த மத சடங்கும் நதிக்கரையில் கூடாத்து என்ற விபரீத வாதம் முளைத்த்து. ஆந்திர மாநிலத்தில், கோதாவரி புஷ்கரத்திலும் சில கிறிஸ்தவ கும்பல் படித்துறையை ஆக்கிரமிக்க முயன்றது ஹிந்துக்களின் எதிர்ப்பினால் முறியடிக்கப்பட்டது நினைவிருக்கும். ’சுவிசேஷ’ மதமாற்ற அமைப்புக்கள் ஹிந்து சடங்குகள், பழக்கவழக்கங்களுக்கு இத்தகைய "மதச்சார்பற்ற" தோற்றம் தந்து ஹைஜாக் செய்து, ஹிந்துக்களை குழப்பி மதமாற்ற வலையில் சிக்க வைக்கப் பார்க்கின்றன.Post a Comment

0 Comments