அந்த 15 நாட்கள் - சுதந்திரத்தின் பொழுது தேசிய நிகழ்வுகள்-6 (Those 15 days)

6.8.1947 

பிரஷாந்த் போலெ 

புதன்கிழமை, ஆகஸ்டு 6ம் நாள்

எப்பொழுதும் போல் காந்திஜி அதிகாலையில் எழுந்து விட்டார். வெளியில் ஒரே இருட்டு. வாஹா அகதிகள் தங்கும் இடத்திற்கு அருகே காந்திஜி தங்கும் இடமும் இருந்தது. வாஹா என்பது பெரிய நகரம் இல்லை. சிறிய கிராமம். அகதிகள் தங்கும் இடத்திற்கு அருகே உள்ளே மாளிகையில் தங்கியிருந்தார். அகதிகள் வந்து போய்க்கொண்டிருந்ததால் சுற்றிலும் துர்நாற்றம் வீசியது. அதற்கு நடுவில் காந்திஜி தனது பிரார்த்தனையை முடித்துக் கொண்டார். 

அங்கிருந்து 250 மைல் தொலைவில் உள்ள லாகூர் செல்வதுதான் காந்திஜியின் பயணம். போக 7, 8 மணி நேரம் ஆகும். அதனால் சீக்கிரம் புறப்பட முடிவு செய்தார். ராவல்பிண்டி வழியாக லாகூர் நோக்கிச் சென்றார். 

லாகூர்: 

ராவி நதிக்கரையில் இருக்கும் லாகூர் நகரம் இதிகாசப் புகழ்பெற்ற நகரம். லவபுர், லவபுரி என்று அழைக்கப்பட்ட இடம். இங்கு 40%க்கு மேல் ஹிந்துக்கள், சீக்கியர்கள் இருக்கிறார்கள். மார்ச் மாதத்தில் முஸ்லீம்கள் மூலம் தாக்குதல்களுக்கு ஆளான ஹிந்துக்களும், சீக்கியர்களும் தங்களது இருப்பிடங்களை விட்டுக் கிளம்ப ஆரம்பித்தனர். 

ஆரிய சமாஜின் கோட்டை லாகூர் நகரம். ஸம்ஸ்க்ருத பாடசாலைகள் அங்கு நிறைய உள்ளன. 'பாரத் வித்யா' பதிப்பகத்தின் தலைவர் மோதிலால் பனாரஸிதாஸ் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர். தொடர்ந்து இஸ்லாமியர்களின் தாக்குதல் காரணமாக அவரும் தனது பெட்டி படுக்கைகளுடன் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்து விட்டார். 

இந்த சம்பவங்கள் மூலம் லாகூர் பாகிஸ்தானிற்கும் செல்வது முடிவாயிற்று. மஹாராஜா ரஞ்சித் சிங்கின் தலைநகர் மற்றும் அவரது நினைவகம் இருக்கும் இடத்திலிருந்து பாரதம் செல்வது லாகூரில் உள்ள சீக்கியர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சீதளா மாதா கோயில், பைரவர் கோயில், தாவர் சாலையில் உள்ள கிருஷ்ணர் கோயில், பால் கொடுக்கும் அம்மா கோயில், ஷ்வேதாம்பர், திகம்பர் வழியை பின்பற்றும் ஜைன் கோயில், ஆரிய சமாஜ் கோயில் போன்ற புகழ் பெற்ற கோயில்களின் நிலைமை என்னவாகும்? இந்தக் கவலை அங்குள்ள ஒவ்வொரு சீக்கியர்கள், ஹிந்துக்கள் மனதிலும் இருந்தது. லாகூர் கோட்டை அருகே ஸ்ரீராமனின் புதல்வன் அமைத்த கோயில் இருக்கிறது. அதன் பூஜாரி அந்தக் கோயில் மற்றும் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். 

இப்படிப்பட்ட இதிகாச புகழ்பெற்ற லாகூர் நகரில் காங்கிரஸ் கார்யகர்த்தர்களுடன் காந்திஜி பேச்சு வார்த்தை நடத்தப் போகிறார். அங்குள்ள உண்மையான கார்யகர்த்தர்கள் ஹிந்து, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவர்கள். ஏனென்றால் லாகூரில் உள்ள முஸ்லீம் கார்யகர்த்தர்கள் ஆரம்பத்திலிருந்தே முஸ்லீம் லீக் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். பாகிஸ்தான் உருவாகிவிட்டால் காங்கிரஸ் கட்சி என்பதே லாகூரில் இருக்காது. ஏன் நாம் காங்கிரஸைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் (ஏன் அந்தக் கட்சிக்குரிய சுமையை நாம் தூக்க வேண்டும்) என்று நினைத்து கிட்டத்தட்ட, காங்கிரஸிலிருந்து முஸ்லீம்கள் ஒதுங்கிவிட்டனர். ஆகையால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஹிந்து, சீக்கியக் கார்யகர்த்தர்களுடன் காந்திஜியின் சந்திப்பு, பேச்சு வார்த்தை என்ன பலனைக் கொடுக்கப் போகின்றது. நம்பிக்கையே இல்லாமல் இருக்கின்றது. 

காந்திஜி வாஹாவிலிருந்து லாகூர் கிளம்பிய நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஸர்சங்க சாலக் குருஜி கராச்சியிலிருந்து சிந்துப் பகுதியில் இருக்கும் பெரிய நகரமான ஹைதராபாத்திற்கு கிளம்பியிருந்தார். காந்திஜியைப் போலவே அதிகாலையில் சீக்கிரம் எழுந்து தனது தினசரி கடமைகளை முடித்துக் கொண்டு 6 மணிக்கு பிரபாத் ஷாகாவிற்குச் சென்று பிரார்த்தனையை முடித்துக் கொண்டு, சிந்து பகுதியின் முக்கிய நகரங்களில் உள்ள சங்கசாலக், கார்யவாஹிகா, பிரசாரக் ஆகியோருடன் இணைந்து ஒரு சிறிய அமர்வை நடத்தினார். இவர்கள் அனைவரும் மறுநாள் நடக்கும் குருஜியின் நிகழ்ச்சிக்காக கராச்சியிலிருந்து வந்திருந்தனர். இந்த அமர்வில் பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள், சீக்கியர்களை எப்படி பத்திரமாக, பாதுகாப்புடன் ஹிந்துஸ்தானத்திற்கு கொண்டு செல்வது என்பது பற்றி திட்டம் தீட்டப்பட்டது. 

ஒவ்வொரு கார்யகர்த்தர்களின் வேதனையும், அவர்களது பிரச்சனைகளும் குருஜி புரிந்து கொண்டார். அவர் அருகே அமர்ந்திருந்த டாக்டர் ஆபாஜி அவைகள் அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டிருந்தார். நாளை குருஜி பொதுமக்கள் கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்களும் மூத்த கார்யகர்த்தர்களுக்குச் சொல்லப்பட்டது. ஹிந்துக்களைக் காப்பாற்றும் பெரிய பொறுப்பு சங்கத்தின் மீது இருந்தது. 'அமைப்பு' என்ற சக்தியுடன் நாம் அசாதாரணமான காரியத்தைக் கூட சுலபமாகச் செய்து முடிக்க முடியும் என்று கூறி கார்யகர்த்தர்களின் நம்பிக்கையை வளர்த்தார். 

அமர்வு முடிந்தவுடன் குருஜி, காலை உணவை முடித்துக் கொண்டு தகுந்த பாதுகாப்புடன் ஹைதராபாத் நகரை நோக்கிச் சென்றார். இரண்டு கார்கள், அதில் ஒன்றில் குருஜி, ஆபாஜி, பிராந்த பிரசாரக் ராஜ்பால், ஒரு ஸ்வயம்சேவக் பாதுகாவலராகவும், பாதுகாப்பு கவசத்துடன் டிரைவர், மற்றொரு காரில் பாதுகாப்புடன் மூத்த காரியகர்த்தர்கள். இரண்டு காரின் முன்னும் பின்னும் இருசக்கர வாகனத்தில் ஸ்வயம்சேவகர்கள். சுற்றிலும் பதற்றமான சூழ்நிலை. ஒரு சேனாதிபதி, தேசத்தின் தலைவர் போல் குருஜியை ஸ்வயம்சேவகர்கள் ஹைதராபாத் கூட்டிக் கொண்டு சென்றனர். 

கராச்சியிலிருந்து ஹைதராபாத் செல்ல 54 மைல். பாதை நன்றாக இருக்கும். மதிய உணவிற்கு 2 மணிக்கு குருஜி ஹைதராபாத்தை சென்றடைய முடியும். போகும் வழியில் பிராந்த பிரசாரக் ராஜ்பால் குருஜிக்கு அங்குள்ள பயங்கரமான சூழ்நிலையைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். 

------ 
17, யார்க் ரோடு - நேருஜி தங்கக்கூடிய கார்யாலயம் 
நேருஜிக்கு முன்பு ஆகஸ்டு 5ஆம் நாள் லார்ட் மவுண்ட்பேட்டன் பிரபு எழுதிய கடிதம் இருந்தது. அதற்கு பதில் அளிக்க வேண்டும். அதில் விசித்திரமாக மவுண்ட்பேட்டன் ஏதோ கேட்டிருந்தார். அதைப் பற்றி சிந்தித்த பிறகு நேருஜி தனது செயலரிடம், பதில் கடிதம் எழுத சொல்ல ஆரம்பித்தார். 

அன்புள்ள லார்ட் மவுண்ட்பேட்டன், 
தங்களது 5ஆம் தேதி ஆகஸ்ட் கடிதத்தில் சில நாட்களின் முக்கியத்துவம் பற்றியும், அந்த நாட்களில் அரசாங்கக் கட்டிடங்களில் யூனியன் கொடி பறக்க விடவேண்டும் என்பது பற்றியும் குறிப்பு உள்ளது. என்னைப் பொறுத்தவரை இதன் உள்ளார்ந்த அர்த்தம் பாரத நாட்டின் எல்லா பொதுமக்கள் இருக்கும் இடங்களில் எங்கள் நாட்டுக் கொடியுடன் யூனியன் கொடியும் பறக்க விட வேண்டும். உங்களது குறிப்பில் உள்ள நாட்களில் ஒரு தினத்தைப் பற்றிய எனது பிரச்சனை அதாவது 15 ஆகஸ்டு அதாவது எங்களது சுதந்திர தினம் - அன்றைய தினம் யூனியன் கொடி பறப்பது உசிதமல்ல. லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் மட்டும் யூனியன் கொடியை பறக்கவிடலாம். அதில் எனக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை. 
தாங்கள் குறிப்பிட்ட நாட்கள் : 
1 ஜனவரி - சைனிக் தினம் 
1 ஏப்ரல் - வாயுசேனா தினம் 
25 ஏப்ரல் - அன்ஜாக் தினம் 
14 மே - ராஷ்ட்ரகுல் தினம் 
12 ஜூன் - பிரிட்டன் ராஜாவின் பிறந்த தினம் 
14 ஜூன் - ஐக்கிய நாட்டு சபையின் கொடி தினம் 
4 ஆகஸ்டு - பிரிட்டிஷ் மஹாராணியின் பிறந்த தினம் 
7 நவம்பர் - நவசேனா தினம் 
11 நவம்பர் - உலகப் போரில் இறந்தவர்களின் நினைவு தினம் 

இந்த எல்லா நாட்களிலும் எங்களுக்கு எந்தவிதத்திலும் யூனியன் கொடி பறக்கவிடுவதால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை . 

டாக்டர் அம்பேத்கார் இன்று மும்பையில் இருக்கிறார். சுதந்திர பாரதத்தின் அமைச்சரவை பற்றிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும். அதில் சட்ட அமைச்சகம் அம்பேத்காரிடம் ஒப்படைக்கப்படும். அதனால் அவரின் வீட்டின் முன்பு குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூக அமைப்பின் கார்யகர்த்தர்களை நீளமான வரிசையில் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களின் பிரியமான தலைவர் பாரத நாட்டில் முதலில் அமையப்போகும் அமைச்சரவையில் மந்திரியாகப் போகிறார் என்பது. 

இந்த நிலையில் டாக்டர் அம்பேத்காருக்கு தனிமை தேவைப்பட்டது. பல எண்ண ஓட்டங்கள். நாட்டின் மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள ஹிந்து-முஸ்லீம் கலவரங்கள். அவரது எண்ணம் மிகவும் தெளிவாக இருந்தது. நாடு பிரிவினைக்கு சாதகமான பக்கத்தில்தான் இருந்தார். ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் இனிமேல் சேர்ந்து இருக்க முடியாது. பிரிவினையின்படி பாகிஸ்தானில் உள்ள ஹிந்துசீக்கியர்கள் பாரத நாட்டிற்கும், பாரத நாட்டில் உள்ள எல்லா இஸ்லாமியர்களும் பாகிஸ்தானிற்கும் கட்டாயம் செல்ல வேண்டும். இப்படி இரண்டு இன மக்களை பகிர்ந்து மாற்றுவதால் எதிர்காலம் அமைதியாக இருக்கும் என்பது அவரது திட்டவட்டமான எண்ணம், அவ்வாறு பேசவும் செய்தார். 

காந்திஜியும், நேருவும் அம்பேத்காரின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. பல முறை அம்பேத்கார் கூறியும் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளாதது பெரிய வருத்தம். அம்பேத்கார் சொல்வதை கேட்டிருந்தால் அப்பாவி லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். பாரத நாட்டில் உள்ள ஹிந்து-முஸ்லீம்கள் சகோதரர்கள் போல் இருப்பார்கள் என்று காந்திஜி கூறினார். அம்பேத்காருக்கு அதனால் மிகவும் கோபம். 

தனது கார்யகர்த்தர்கள் கூட்டத்திலிருந்து எப்படியோ வெளிவந்து தனது படிக்கும் அறைக்குச் சென்றார். தான் கூறியது, காந்திஜி பதில் கூறியது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். தனது அமைச்சரவை மூலம் இதற்காக என்ன செய்ய முடியும் என்று யோசித்தார். அன்றுதான் ஹிரோஷிமா குண்டு வீச்சு நடந்த தினம். அந்த நாளில்தான் அமெரிக்கா ஜப்பானின் மீது குண்டு போட்டது. அந்த 

டந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இதெல்லாம் அவரின் ஞாபகத்திற்கு வந்தது ஜப்பானின் அப்பாவி ஜனங்களை கொல்லப்பட்டதை அம்பேத்காரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனது உடைந்து போனது. 

இன்று மாலை முஸ்லீம்களின் வக்கீல்களின் சங்கம் அம்பேத்கருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தது. அதில் என்ன பேச வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். 

அன்று காலை 6 மணி 17 நிமிடத்திற்கு சூரிய உதயம். அதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே காந்திஜி லாகூர் நோக்கிப் பயணம் 1 மணி நேரத்திற்கும் பிறகு ராவல்பிண்டியில் சிறிதளவு ஓய்வு. எல்லோருக்கும் உணவு. காந்திஜி எலுமிச்சை சர்பத் மட்டும் சாப்பிட்டார். மதிய உணவு லாகூரில். அது முடிந்தபிறகு தங்களது கார்யகர்த்தர்களுடன் பேச்சு வார்த்தை. 

ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள காங்கிரஸ் காரியகர்த்தரின் வீட்டில் உணவு. அந்தப்பகுதியில் அவர் பார்த்த காட்சியினால் மனது உடைந்தார். வழியில் சில வீடுகள், கடைகள் 
எரிக்கப்பட்டிருந்தன. ஹனுமான் கோயில் கதவு பிடுங்கி எரியப்பட்டிருந்தது. எங்கும் அழிவுத் தோற்றம்தான் தென்பட்டது. காந்திஜி மிகவும் குறைவாகத்தான் சாப்பிட்டார். பகல் 12 மணிக்கு காங்கிரஸ் கார்யகர்த்தரின் அமர்விற்குச் சென்றார். 

பிரார்த்தனை முடிந்தவுடன் காந்திஜி பேச ஆரம்பித்தார். ஹிந்து - சீக்கிய இன கார்யகர்த்தர்கள் மட்டும்தான் இருந்தனர். அவர்கள் அனைவரும் கோபத்துடன், வேதனையில் பேசினர். அப்போது காந்திஜி நாடு பிளவுபடாது, அப்படி பிளவுபட்டால் எனது உயிர் போன பிறகுதான் நடக்கும் என்றார். யாரும் கவலைப்பட வேண்டாம். எல்லாக் கார்யகர்த்தர்களும் இந்த உறுதியின் அடிப்படையில் அமைதியானார்கள். 

காந்திஜி கூறியபடி எதுவும் நடக்கவில்லை . ஜூன் 3ம் நாள் அன்றே சில மாறுதல்கள் ஏற்பட்டது. பிரிவினை கோஷம் எழுப்பப்பட்டது. அதுவும் காங்கிரஸ் ஒத்துழைப்புடன். அடுத்த 8-15 நாட்களில் எவ்வளவு முடியுமோ அதை எடுத்துக் கொண்டு பாரத நாட்டிற்குப் போக வேண்டும் என பல காங்கிரஸ் கார்யகர்த்தர்கள் முடிவு செய்தனர். நிலைமை தற்சமயம் தலைகீழ் ஆகிவிட்டது என காங்கிரஸ் கார்யகர்த்தர்கள் நினைத்தனர். 

சரமாரியாகத் தொண்டர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். காந்திஜி அமைதியாக பேசாமால் உட்கார்ந்திருந்தார். பஞ்சாப் காங்கிரஸ் கட்சித் தலைவர் அனைவரையும் சமாதானப்படுத்தினார். அவரை இடைமறித்துத் தொண்டர்கள் காந்திஜியிடம் என்ன கூற விரும்புகிறீர்கள்? ஏதாவது கொஞ்சம் சொல்லுங்கள் என்றனர். 

லாகூரில் கிட்டத்தட்ட 800 கார்யகர்த்தர்கள் அமைதியானார்கள். கடைசியாக காந்திஜி என்னதான் கூறப்போகிறார் என்பதனைக் கேட்கும் ஆவலில். 

இதற்கிடையில் சிந்து பிரதேசத்தில் குருஜியின் போஜனம் முடிந்தது. அதன்பிறகு அங்குள்ள ஸ்வயம்சேவகர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆபாஜி இரு முறை குருஜியிடம் ஓய்வெடுக்கும்படிக் கூறினார். ஆனால் சிந்து பகுதியின் நிலவரம்/சூழ்நிலையைப் பார்த்ததும் குருஜியின் தூக்கம் தொலைந்தது. கொஞ்ச நேரம் படுப்பது கூட அவரால் முடியாத காரியம் 

ஹைதராபாத்தில் உள்ள ஸ்வயம்சேவகர்கள் சென்ற ஆண்டு நேருஜி ஹைதராபாத் வந்த கதையைப் பற்றிக் கூறினார்கள். 

1946ல் நேருஜி ஒரு பொதுக்குழு ஏற்படுத்த விரும்பினார். அதுவரை பிரிவினை பற்றிய பேச்சே கிடையாது. சிந்து பகுதியில் கிராமத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். கராச்சியைத் தவிர கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் ஹிந்துக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். லர்கானா, ஷிகார்பூரில் 63% ஹிந்துக்கள் ஹைதராபாத் 1 லட்சம் ஹிந்துக்கள் கிட்டத்தட்ட 70% ஹிந்துக்கள்தான் அதிகம். இருந்தும் முஸ்லீம் லீக் உறுதியுடன் பிரிவினைப் போராட்டத்தை நடத்த ஆரம்பித்து விட்டார்கள். அவர்களின் போராட்டம் ஹிம்சையானது. 30% இஸ்லாமியர்கள் இருந்து கொண்டு தங்கள் பலாத்காரத்தை ஹிந்துக்கள் மீது பொது இடங்களில் காட்ட ஆரம்பித்தார்கள். ஹிந்துக்களுக்கு எதிராக சாலைகளில் தட்டிகள் வைக்க ஆரம்பித்தார்கள். சிந்து பகுதியில் உள்ள முஸ்லீம் லீக் (தலைவர்) மந்திரி குர்ரம் கோ ஸரே ஆம் தனது உரையில், ஹிந்துப் பெண்களை தூக்கிச் செல்லுங்கள் என்று கட்டளை இட்டான். இத்தகைய தாக்குதல்களை எதிர் கொள்ள ஒரே ஒரு அமைப்புதான் தகுதியானதாக இருந்தது. அதுதான் ஆர்.எஸ்.எஸ். சிந்து பகுதியில் நல்ல எண்ணிக்கையில் ஸ்வயம்சேவகர்கள் இருந்தனர். பிராந்த பிரசாரக் ராஜ்பால்புரி திட்டமிட்டபடி அந்தப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். 

1946ல் நேருவை ஹைதராபாத் நிகழ்ச்சிக்கு வந்தபோதே, முஸ்லீம் லீக் குண்டர்களால் கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள். அவருக்கு அது தெரியாது. அப்போது சிந்துப் பகுதியின் மூத்த காங்கிரஸ் தலைவர் சிமன்தாஸ் மற்றும் லாலா கிருஷ்ணசந்த், சங்கத்தின் பிராந்த பிரசாரக் ராஜ்பால்புரியிடம் தொடர்பு கொண்டு நேருஜியின் பாதுகாப்பிற்கு ஸ்வயம்சேவகர்களின் உதவியை நாடினார். பிராந்த பிரசாரக் அனுமதியுடன் உதவியுடன் முஸ்லீம் லீகின் சவாலை எதிர்கொண்டனர். 

நேருவின் ஹைதராபாத் பொதுக்குழு கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பாதுகாப்பினால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை . (Ref. Hidus in partition - Durig and after) www.revitalization.blogspot.in V.Sudaram Retd I.A.S. Officer. 

குருஜியின் மகத்துவம் காரணமாக ஹைதராபாத்தில் 2000க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் அவர்களது சீருடையில் ஒன்றிணைந்தனர். பெரிய சாங்கிக் நடந்தது. பிறகு குருஜி பேச எழுந்தார். கராச்சியில் அவர் பேசியதைத் தான் இங்கும் பேசினார். நமது அமைப்புக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது. சூழ்நிலையின் காரணமாக ராஜாதாஹீர் போன்ற வீரர்கள் உள்ள சிந்துப் பகுதியில் நாம் தளர்ந்து, பின்னே தள்ளப்பட்டுள்ளோம். அதனால் எல்லா ஹிந்துக்கள்- சீக்கியர் உறவினர்களை அவர்களது குடும்பத்துடன் பாரத நாட்டிற்கு நமது உயிரைப் பணயம் வைத்தாவது கொண்ட செல்ல வேண்டும். 

குண்டர்கள் மற்றும் ஹிம்சை செய்பவர்களுக்கு அடிபணிந்து பிரிவினையை ஏற்றுக் கொண்டது கொடுமை. இன்றில்லாவிட்டாலும் நாளை மீண்டும் நாம் அகண்ட பாரதம் அமைப்போம். இதில் எனக்கு முழு நம்பிக்கையும், ஈடுபாடும் (சிரத்தையும்) இருக்கின்றது. ஆனால் நம்முன் ஹிந்துக்களைப் பாதுகாப்பது என்ற மகத்துவமான பணி, சவாலுடன் இருக்கின்றது. தனது உரையை முடிக்கும் முன்பு குருஜி, நமது அமைப்பின் பலத்துடன் அசாதாரணமான வேலையைக் கூட நம்மால் சாதித்துக் காட்ட முடியும். அதனால் தைரியமாக இருங்கள். அமைப்பின் மூலம் நாம் நம்முடைய சக்தியை வெளிப்படுத்த வேண்டும். 

அதன் பிறகு குருஜி ஸ்வயம்சேவகர்களை சந்தித்தார். இந்த ஸ்திரமற்ற, விபரீதமான, பதட்டமான, ஹிம்சை நிறைந்த சூழலில் கூட குருஜியின் வாயிலிருந்து விலைமதிக்க முடியாத, தைரியத்தை வளர்க்கக் கூடிய வார்த்தைகள் வந்திருக்கின்றது. இவைகள் நம்மை உற்சாகப்படுத்தும் வார்த்தைகள். 
------- 
அங்கு லாகூரில் அமைதியுடன் காங்கிரஸ் கார்யகர்த்தர்களிடம் காந்திஜி அமைதியுடன் தனது உரையை ஆரம்பித்தார். 

மேற்கு பஞ்சாப், லாகூர், வாஹா போன்ற இடங்களில் இருந்து முஸ்லீம் அல்லாதவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தவறான செயலாக எனக்குத் தெரிகின்றது. நீங்கள் இருக்கும் இடம் உங்களுக்கு சுடுகாடாகத் தென்பட்டாலும் அதை விட்டுப் போகாதீர்கள். இங்கிருந்துக் கொண்டே மரணத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். பயந்துக் கொண்டிருக்கின்றீர்கள். மரணத்திற்கு முன்பே மரணம் அடைந்து விட்டீர்கள். இது சரியல்ல. பஞ்சாபியர்கள் பயப்படமாட்டார்கள். பயப்படுவது நல்லதல்ல. முழு தைரியத்துடன் மரணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். 

காங்கிரஸ் கார்யகர்த்தர், காந்திஜியின் பேச்சைக் கேட்டு முதலில் ஒன்றும் புரியாமல் இருந்தனர். காதில் சூடான ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. முஸ்லீம் குண்டர்கள் மூலம் செய்யப்படும் ஹிம்சையை தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார் காந்திஜி. இது என்ன ஆலோசனை? 

லாகூரிலிருந்து வரும்பொழுது சில காங்கிரஸ் கார்யகர்த்தர்கள், பாரத நாட்டின் தேசியக் கொடி அநேகமாகத் தயாராகிவிட்டது. அதன் நடுவில் இருக்கும் இராட்டினத்தை எடுத்துவிட்டு அசோகச் சக்கரத்தை வைக்க வேண்டம் என்பது. 

காந்திஜி படபடப்புடன் ராட்டினத்தை எடுத்து விட்டு அசோகச் சக்கரமா? ஸம்ராட் அசோக் முற்றிலும் ஹிம்சாவாதி. அதன்பிறகு பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கு முன்பு முற்றிலும் ஹிம்சை செய்தவன் அல்லவா? அப்படிப்பட்ட ஹிம்சைக்காரனின் நினைவுச் சின்னம் (சக்கரம்) தேசியக் கொடியிலா? இல்லை, ஒரு பொழுதும் இல்லை. அதனால் கார்யகர்த்தர்கள் அமர்வு முடிந்தவுடன் தனது செயலர் மகாதேவ் தேசாயிடம் இது சம்பந்தமாக ஒரு விஷயம் தயார் செய்து பத்திரிகையில் கொடுக்கும்படி கட்டளையிட்டார். 
அதில், தேசியக் கொடி சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்கப்பட்ட தகவல் எனக்குக் கிடைத்தது. தேசியக் கொடியின் மத்தியில் ராட்டினம் கிடையாதாம். அதனால் அந்தக் கொடியை நான் வணங்க மாட்டேன். முதன்முதலில் தேசியக் கொடி எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனை செய்தது நான்தான். ராட்டினம் இல்லாத தற்சமயம் தீர்மானிக்கப்பட்ட கொடியை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. 

ஆகஸ்டு 6ம் நாள் மாலை 
மும்பையில் ஆகாயத்தில் மேகம் மழை பெய்யும் அறிகுறி இல்லை. 

மும்பையில் முக்கியமான ஒரு சபாவில் முக்கிய நபர்களின் அமைப்பின் கூட்டம். பாரத நாட்டின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கருக்கு வரவேற்பு நிகழ்ச்சி. 

நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்தது. நாட்டின் கிழக்கு / மேற்குப் பகுதியில் நடக்கும் வன்முறைகளைப் பற்றிப் பேசினார். ஹிந்து முஸ்லீம் ஜனத்தொகையை மாற்றிக் கொள்ளும் விவகாரம் பற்றியும் கூறினார். 

பல வக்கீல்கள் அவரது வாதத்திற்கு ஆதரவு அளித்தனர். 

ஆகஸ்டு 6ம் நாள் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி ஹைதராபாத்தில் ஹிந்துக்களின் எதிர்காலம் பற்றி யோசித்து அவர்களை பாதுகாப்பாக பாரத நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தில் மூழ்கியிருந்தார். அவரது தூக்கம் தொலைந்தது. 

காந்திஜி அப்போது லாகூரிலிருந்து பாட்னா சென்றார். கல்கத்தாவிலிருந்து கிளம்பி விட்டார். அவர் அம்ருத்சர், அம்பாலா, முராதாபாத், வாரணாசி வழியாக 3 மணி நேரத்தில் பாட்னா சென்றார். 

சுதந்திரம் - ஆனால் துண்டாடப்போகிற பாரதத்தின் எதிர்காலம் பற்றி நேரு, டில்லியில் தனது வீட்டிலிருந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். அங்கு அவர் தூங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. 

அப்போது ஸர்தார் பட்டேல் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் எல்லா ஸம்ஸ்தானங்கள், சுதேசி ராஜ்யங்களின் கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருந்தார். இதில் எவைகள் பாரதத்துடன் இணையப்போகின்றன, எவைகள் தனியாக இருக்கப் போகின்றன என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். நேரம் குறைவாக இருக்கின்றது. எவ்வளவு முடியுமோ அவைகளை வெகு சீக்கிரம் பாரதத்துடன் இணைக்க வேண்டும். அதுதான் முதல் வேலை என்று யோசித்துக் கொண்டிருந்தார். 


ஆகஸ்டு 6ம் நாள் இரவு - அது இருண்டது போல் நாலாபுறமும் இருட்டுதான். மே. பஞ்சாப், கி.வங்காளம், சிந்து, பலுச்சிஸ்தான் பகுதிகளில் ஹிந்து-சீக்கியக் குடும்பங்களில் இருந்து குறிப்பாக பெண்கள் மீது தாக்குதல், கடத்தப்படுதல், அவர்களது குடும்பத்திற்கு தீ வைத்தல். தீயின் ஜ்வாலையை நன்றாக இருட்டில் பார்க்க முடிந்தது. சுதந்திர தினத்தை நோக்கிச் செல்லும் திசையில் போகும், மற்றுமொரு நாள் முடிந்து விட்டது. 


Post a Comment

0 Comments