RSS Press Statement on ABKM 2016 Proceedings released in Salem

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.குமாரசாமி அவர்கள் சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கை.
Shri Jawahar-Salem Jilla Sanghachalak, Shri Kumaraswamy Sah Prant 
Sanghachalak, Shri Srinivasan, Jilla Prachar Pramuk
அக்டோபர் 23,24,&25 ஆகிய மூன்று நாட்கள் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) அகில பாரத செயற்குழு கூட்டம் தெலுங்கான மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ்.தேசியத் தலைவர் டாக்டர்.மோகன் பாகவத் முன்னிலையில் அகில பாரத பொது செயலாளர் திரு.பையாஜி ஜோஷி தலைமையில் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நாடெங்கிலுமிருந்து 400கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தற்போது நாடெங்கிலும் 44,000 இடங்களில் 70,000 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. வருகிற 2017 மார்ச் மாத்திற்குள் 75,000 ஆக அதிகரிக்கும்.

நாட்டில் நிலவி வருகிற தற்போதைய பிரச்சனைகள், இயக்க ரீதியான வளர்ச்சி மற்றும் எதிர்காலத்த திட்டங்கள், நிகழ்ச்சிகள் பற்றிய விவாதங்கள் இருந்தன. 1)கேரளாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிற கம்யூனிடுகளின் வன்முறைகள் 2) ஏகாத்ம மாணவ தர்சனம்: உலகு தழுவிய தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஆகிய இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கேரளத்தில் இடதுசாரி கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு வன்முறை மற்றும் அரசியல் படுகொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடத்தில் சகிப்புத்தன்மையற்ற மனப்பான்மையே இப்படுகொலைகளுக்கு காரணமாகும். அரசியல் கருத்து மாறுபாடு கொண்டவர்களையும், தங்களது வளர்ச்சிக்கு இடையூறு செய்பவர்கள் என்று யாரையெல்லாம் கருத்துகின்றனரோ அவர்களைக் கொலைசெய்வது கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வாடிக்கையாகிவிட்டது . 1969 ஆம் ஆண்டு தொடங்கிய இத்தகைய படுகொலைகள் இன்று வரை தொடர்கிறது. இதுவரை 250கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்., பி.எம்.எஸ்., பி.ஜெ.பி. ஏ.பி.வி.பி. தொண்டர்கள் மார்க்சிஸ்ட்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கால்நடைகளைக் கூட அவர்கள் விட்டு வைப்பதில்லை. மாற்றுக கட்சியினரின் வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப் பட்டு வருகின்றன. 

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களால் அளிக்கப்பட ஏகாதம மாணவ தர்சனம் என்ற கோட்பாடுதான் தற்போது உலகில் நிலவி வருகிற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரமுடியும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சுற்றுப்புற சூழல் மாசுபடுதல், இயற்கை வளங்கள் வரைமுறையின்றி சுரண்டப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகள், வேலை வாய்ப்பின்மை, வறுமை, சிதைந்து வரும் குடும்ப வாழ்க்கை முறை போன்று பல பிரச்சனைகளுக்கு முதலாளித்துவம் மற்றும் கம்யூனிச கோட்பாடுகளே முக்கிய காரணமாகும். இந்நிலையில் இயற்கையுடன் இணைந்த சுரண்டலற்ற ஒருங்கிணைந்த அணுகுமுறையே இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வை தரும். 

அண்மையில் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டிவிட்டு வன்முறைகளில் ஈடுபட்ட தீவிரவாத ஜிகாதி சக்திகளையும், அவற்றை அடக்கத் தவறிய மாநில அரசுகளையும் ஆர்.எஸ்.எஸ்.ஸின். அகில பாரத செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. 

குறிப்பாக மேற்குவங்கம், கர்நாடகம், மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் கலவரங்களைத் தூண்டி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தீவிரவாத ஜிகாதி சக்திகளின் நடவடிக்கைகளை விழிப்புடன் கண்காணித்து இம்மாதிரி நிகழ்வுகளை தடுத்திட முன்வரவேண்டும். 

மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றது. அதன்பிறகு ஹிந்துக்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்று வருவது அதிகரித்துள்ளது. இந்த கலவரங்களில் பல உயிர்கள் பலியாகியுள்ளன. எண்ணற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர். பல கிராமங்களில் ஹிந்துக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன, பெண்கள் பலர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆலயங்களும், விக்கிரகங்களும் சிதைக்கப் பட்டுள்ளன. வன்முறை நடைபெற்ற கிராமங்களில் இருந்து ஹிந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளியேறியுள்ளனர். அக்டோபர் 10 ஆம் தேதியன்று நாடியா மாவட்டத்தில் உள்ள ஹன்சகாளி என்ற ஊரில் வசித்து வருகிற மௌ ரசாக் என்ற தலித் பெண் ஒருவர் அவரது வீட்டிற்குள்ளேயே அடித்து படுகொலை செய்யப் பட்டுள்ளார். 

துர்கா பூஜை கொண்டாடுவதற்காக பந்தல் போடுவதற்குக் கூட பல இடையூறுகள், தடைகள் ஏற்படுத்தப்பட்டன. விழா முடிந்தபின் ஆறுகளிலும் கடல்களிலும் கரைப்பதற் காக எடுத்து செல்லப்பட்ட துர்கா சிலைகள் பல இடங்களில் அடுத்து நொறுக்கப் பட்டுள்ளன. இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறுவதை தடுத்தி நிறுத்திட வேண்டிய காவல்துறையினர் நடப்பவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வழக்குப் பதிவு செய்வதற்கு கூட அவர்கள் முன்வரவில்லை. சிறுபான்மையினரை தாஜா செய்திடும் வகையில் துர்கா சிலைகளை கரைப்பதற்காக நடைபெறும் ஊர்வலத்தை கட்டாயபடுத்தி மாற்றி அமைத்த மாநில அரசின் நடவடிக்கைகளை கோல்கட்டா உயர்நீதி மன்றம் கடுமையான வார்த்தைகளால் கண்டித்துள்ளது. 

கேரளா, தமிழ் நாடு மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும் ஹிந்துக்களுக்கு எதிராக அதிலும் குறிப்பாக பல்வேறு தேசிய இயக்கங்களில் வேலை செய்து வருகிற ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டர்களுக்கு எதிராக பயங்கரவாத ஜிகாதி அமைப்புகள் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும், தாக்குதல்கள் நடத்துவதும், படுகொலைகள் செய்வதும் அதிகரித்து வருகின்றன. 

தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, திண்டுக்கல், மதுரை போன்ற ஊர்களில் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி, விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், படுகொலை செய்வதும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கை காத்திட வேண்டிய காவல் துறையின் அலட்சியப் போக்கினாலேயே பயங்கரவாத ஜிகாதி அமைப்புகள் மேற்கண்ட ஊர்களில் துணிச்சலுடன் படுகொலைகளை செய்துள்ளனர். ஹிந்துக்களின் சொத்துக்கள் நாசப் படுத்தப்பட்டுள்ளன. ஆம்பூரில் நடைபெற்ற வன்முறை கலவரத்தில் பெண் காவலர் களுக்கு நேர்ந்த கதி, அவமானம் போன்றவைகளே எப்படி பயங்கரவாத சக்திகள் அங்கு வேரூன்றியுள்ளனர் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. இந்த பயங்கரவாத சக்திகளை எப்படி அடக்கி ஒடுக்குவது என்று தெரியாமல் காவல் துறையின் தலைமை திணறிக் கொண்டிருக்கிறது. முக்கியமான தலைவர் ஒருவர் நேரடி நடவடிக்கை யில் இறங்குவோம் என்று பகிரங்கமாக பேசுவது எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற எச்சரிக்கையாகும். இத்தனை சம்பவங்கள் நடந்த பின்பும் கூட இவைகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசானது விரும்பவில்லை, மாநில அரசு பயங்கரவாத சக்திகளின் முன் முழுமையாக மண்டியிட்டுள்ளது. அத்துடன் தேசிய ஒருமைப் பாட்டுக்காக வேலை செய்து வருபவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது. 

சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு நகரில் பட்டப்பகலில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூடுபிரி, குடகு, மைசூரு, போன்ற இடங்களிலும் நான்குக்கும் மேற்பட்ட ஹிந்து இயக்கத் தொண்டர்கள் ஜிகாதி பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

நடைபெற்று வருகிற வன்முறைகள், படுகொலைகள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக எதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதாகத் தெரியவில்லை. தென் மாநிலங்களில் செயல்பட்டு வருகிற ஜிகாதி பயங்கரவாத குழுவினருக்கும் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிற ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதும் கேரளா, தமிழகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது. 

சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் குற்றவாளிகளை கண்டறிந்து பாகுபாடற்ற விசாரணை நடத்தி அவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட முன்வரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசிய செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Post a Comment

0 Comments