Header Ads

test

vsk chennai sandesh (SETHU)


                               சேது
--------------------------------------------------------------------
சென்னையிலிருந்துசெய்தியுடன் பண்பாடு
கலி 5113 நந்தன ஆவணி 25 ( 2012, செப்டம்பர் 10 )

கிருஸ்துவ மத பிரசார விவகாரம் எஸ் அதிகாரிகள்    காட்டம்
உமாசங்கர், .. எஸ், தமிழ்நாடு ஒழுங்குமுறை நடவடிக்கைகள் துறை ஆணையர்கடந்த வாரம் அவர் கன்னியாகுமாரி மாவட்டத்தில் கிருஸ்துவ பிரச்சாரம் செய்தார். அவர் ஏற்கெனவே போலி ஜாதி சான்றிதழ் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். எஸ் அதிகாரி மத ப்ரசாரம் செய்வதா என்று கேள்வி எழுப்பி பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுமார் 400 மேற்பட்ட பொது மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம் செய்து கைதானார்கள். உமாசங்கர், "நான் ஒரு தலித். எனது மத உரிமையை யாரும் கேள்வி கேட்க முடியாது" என்று கூறினார் தேசிய வார இதழான விஜயபாரதம் இந்த விஷயத்தை குறித்து மூன்று ஓய்வு பெற்ற  .. எஸ் அதிகாரிகளிடம் கருத்து கேட்டது.  'ஒரு அரசு ஊழியர் ஒரு மதத்தின் மீது பற்றுடன் செயல்படும் போது, மற்ற மதத்தினரான மக்கள் அவரை  எவ்வாறு சுலபமாக அணுக முடியும்', என்று கேள்வி எழுப்பினார்   ஸ்ரீமதி சந்திரலேகா (ஐஏஎஸ்). மேலும் அவர் 'அரசு அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட சமயத்தை பிரச்சாரம் செய்வது அரசு விதிகளுக்கு புறம்பானது. இதை அனுமதிக்க கூடாது', என்று கூறினார்.  'அரசு  கடுமையான நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால், இத்தகைய அதிகாரிகள் துணிச்சலுடன் மத பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்' என்று திரு என் முருகன் (ஐஏஎஸ்-ஒய்வு) கூறினார்.  'உமாசங்கர் முழு நேர கிருஸ்துவ போதகராக இருக்க விரும்பினால், அரசு வேலையை ராஜினாமா செய்யட்டுமே' என்று திரு வி சுந்தரம் (ஐஏஎஸ்-ஒய்வு) கூறினார். அரசு அதிகாரிகள் ஜாதி, மொழி, அரசியல் குழுக்களுடன் இணையக்கூடாது என்று கூறும் அரசு விதிகளை அவர் மேற்கோள் காட்டினார்கிருஸ்துவ பிரச்சாரம் செய்த உமாசங்கரை அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரினார்.


தம்மம்பட்டி வழக்கில் தீர்ப்பு;123 ஹிந்துக்கள் விடுதலை!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 2007 ல் பெரிய விநாயகர் சிலை வைப்பதை முஸ்லிம்கள் எதிர்த்த போது ஹிந்துக்கள் அதை கண்டனம் செய்து ஆர்பாட்டம் நடத்தினார்கள். 123  ஹிந்துக்கள் கைது செய்யப்பட்டார்கள். வழக்கு நடந்தது. அண்மையில் ஹிந்துக்கள் மீதான அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விநாயக சதுர்த்தி வரும் இந்த நேரத்தில் வெளியாகி உள்ள இந்த தீர்ப்பினால் மாவட்டத்தில் மகிழ்ச்சி அலையடிக்கிறது
'சுவாமிஜி 150' உற்சாகமான தொடக்கம்
அமெரிக்கவை கொலம்பஸ் 'கண்டுபிடித்ததன்' 400வது  ஆண்டு 1893 . அதை ஒட்டி சர்வமத சபை கூட்டி கிறிஸ்துவத்தை மட்டுமே சிறந்த மதமாக காட்ட அமெரிக்கர்கள் முயன்றார்கள். வேதாந்த முழக்கம் செய்து சுவாமி விவேகனந்தர் அந்த சதியை அடியோடு தகர்த்தார். அது சரி, கொலம்பஸ்-க்கு 1200 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீசந்த் என்ற பாரதியர் 30 பேருடன் சீனா சென்றார். அங்கிருந்து கப்பல் பயணம் செய்து அமெரிக்கா சென்றார். பிறகு சீனா திரும்பினார். அந்த அளவுக்கு நமது மூதாதையர்கள் புவியியல், கப்பல் தொழில் முதலியவற்றில் தலை சிறந்து விளங்கினார்கள்-சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு சுவாமிஜி பற்றி மூத்த ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் ஸ்ரீ கி சூர்யநாராயண ராவ் சென்னையில் நிகழ்த்திய மூன்று நாள் தொடர் சொற்பொழிவில் இது போன்ற அரிய, ஊக்கமூட்டும் சம்பவங்கள் பல கேட்டு ஏராளமான சமுதாய அமைப்புகளின் ஊழியர்கள் பயன் பெற்றார்கள்.  

No comments