VSK chennai sandesh (SETHU)

சேது
--------------------------------------------------------------------
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 நந்தன 22 சித்திரை ( 2012, மே 4)
யாருக்கு வைத்த குறி?
மீனாட்சி அம்மனின் அருளாட்சி நடக்கும் மதுரையில் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இந்த வருடம் பா ஜ க வின் மாநில மாநாடு மிகப் பெரிய அளவில் இந்த நகரத்தில் நடக்க ஏற்பாடு ஆகி இருந்தது. இந்த பின்னணியில், மே 1 அன்று 'குறைந்த சக்தி ' கொண்ட வெடிகுண்டு வெடித்ததில் அங்குள்ள ராமர் கோவிலின் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்தது. தேச விரோத சக்திகள் இத்தகைய வன்முறையை தேசிய சக்திகள் மீது குறி வைத்து செயல்படுகின்றன. கடந்த வருடமும் திரு எல் கே அத்வானியின் ரத யாத்திரையின் போது தேச விரோத சக்திகள் பைப் வெடி குண்டு வைத்தது நினைவிற்குரியது..இத்தகைய அச்சுறுத்தல் சம்பவத்தை பற்றி டி ஜி பி ராமானுஜம் கூறுகையில், "இது ஒரு தற்செயலான சம்பவம். பா ஜ க மாநாட்டின் போது தகுந்த பாதுகாப்பு தரப்படும்" என்றார். மே 1 அன்றே போலீஸ் மதுரைக்கு அருகே உள்ள ராஜபாளையத்தில் வாகன பரிசோதனை செய்த போது ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றியது போலிஸ் தரப்பு வாதத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. 

அருந்ததியர் குரல் 
அருந்ததியர் சமூக இளைஞர் அமைப்பு 6 % உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை வைத்து ஈரோடில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றியது. மேலும் தற்போது தமிழக அரசு கட்டி வரும் சுதந்திர போராட்ட வீரர் 'ஒண்டிவீரன்' நினைவாலயம் விரைந்து கட்டி முடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. சாதி கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தங்களுடைய சமுதாயத்தில் எத்தனை துணை பிரிவுகள் இருந்தாலும் அனைத்தையும் 'அருந்ததியர்' சமூகம் என்று அழைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மருத்துவ தொழிலின் புனிதம் உணர்ந்தவர்

சில மாதங்களுக்கு முன்பு குருமூர்த்தி என்பவர் ஈரோடில் உள்ள எஸ்.ஜி மெட் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் ஒரு சாலை விபத்தில் சிக்கி அதிக இரத்தம் இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். கார்ப்பரேட் மருத்துவமனைகள் முன்பணமாக 50 ,000 ரூபாயை கட்ட சொல்லுவர். பணம் இன்றி அறுவை சிகிச்சை செய்ய மாட்டார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 88,000 (டாக்டர் பீஸ் தவிர) ஆனது. டிஸ்சார்ஜ் ஆன ஒரு மாதத்தில், குருமூர்த்தி 30,000 ரூபாயை கொண்டு வந்து டாக்டரிடம் கொடுத்தார். அவர்," இன்று உங்களால்தான் உயிருடன் இருக்கிறேன். வேறு ஆஸ்பிட்டலுக்கு சென்று இருந்தால், நான் உயிருடன் இருந்திருப்பேனா என்பது சந்தேகமே" என்று சொல்லி நன்றிக் கண்ணீர் வடித்தார் . தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மாரிமுத்து சரவணன் கூறுகையில்,"இத்தகைய வார்த்தைகள்ஒரு டாக்டரின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது . மருத்துவ தொழிலின் புனிதம் இதுவே" என்றார். மருத்துவத்தை வணிக மயமாக்குவதைப் பொறுத்துக்கொள்ள இயலாத இவர் 'ஸ்ரீ கணபதி மெடிக்கல் அண்ட் எஜுக்கேஷனல் டிரஸ்ட்' நிறுவியதும் 86 டாக்டர்கள் உள்பட 486 நண்பர் கள் இவருடன் இணைந்துள்ளனர். இந்த அமைப்புடன் சேர்ந்து சேவை செய்கின்றனர். 


Post a Comment

0 Comments